உயிரே உன் விலை...? ஐந்து மாதத்தில் 294 பேர் தற்கொலை : இறந்தவர்களில் 80 சதவீதம் ஆண்கள்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (17)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை: கோவை மாநகரில் கடந்த ஜனவரி முதல் மே வரை, ஐந்து மாதங்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என, 294 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இதில், 80 சதவீதம் பேர் ஆண்கள்.
தமிழகத்தில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அடுத்தபடியாக, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை உள்ளது. காதல் தோல்வி, கள்ளத்தொடர்பு, குடும்பத்தகராறு, கடன் தொல்லை, வேலையின்மை, தீராத நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலரும் உயிரை துறக்கின்றனர். நடப்பாண்டு ஐனவரி முதல்

மே வரை, 294 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், 233 ஆண்கள், 61 பெண்கள் அடங்குவர். தூக்குப்போட்டு தற்கொலை செய்த ஆண்களின் எண்ணிக்கை 74; பெண்களின் எண்ணிக்கை 17. சாணிபவுடர், விஷம் உள்ளிட்டவற்றால் உயிரை மாய்த்த ஆண்கள் 37, பெண்கள் 16 பேர். உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10; இதில், மூன்று ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள்.

இவை தவிர, பிற வழிகளின் மூலம் 140 பேர் அவர்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 119 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 21. தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் 80 சதவீதம். கடந்தாண்டு தற்கொலை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 658. கடந்தாண்டை ஒப்பிட்டுபார்க்கும் போது, இந்தாண்டு ஐந்து மாதத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம். தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் விழிப்புணர்வு வழிகள் குறித்து, மனநல மருத்துவர் மோனி கூறியதாவது:மனச்சோர்வு, பொருளாதார நெருக்கடி, தாழ்வு மனப்பான்மை, வேலையின்மை, முடிவெடுக்க முடியாத நிலை போன்றவற்றால், "கிரியோடின்' மற்றும் "நார்அட்ரினின்' குறைபாட்டால் அதிகமானோர், தற்கொலை முடிவுகளை தேர்ந்தெடுக்கின்றனர். தற்கொலை

Advertisement

செய்பவர்களில் 50 சதவீதம் பேர் 35 வயதுக்குள் இருக்கின்றனர்.


வாழ்க்கை முறை மாற்றத்தால், இளம் தலைமுறையினர் பெற்றோர்களிடம் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. பெற்றோர்களின் வழிகாட்டுதல், அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், பிரச்னைகளை எதிர்கொள்ள இளம் தலைமுறையினர் திணறுகின்றனர்."வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, தற்கொலை ஒரு தீர்வல்ல' என்பதை உணர்த்தும் வகையில், டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம். மேலும், 24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனைகளில், "ஹாட்லைன் சென்டர்' அமைத்து, கவுன்சிலிங் தரலாம். தற்கொலை செய்பவர்களுக்கு, உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.இவ்வாறு டாக்டர் மோனி கூறினார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selthu - salem,இந்தியா
11-ஜூலை-201317:02:40 IST Report Abuse
selthu செரோடினின் நார் - அட்ரினின் குறை பாட்டால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால். டாக்டர் ஆலோசனைப்படி anti-depressant and anti-pshycotic மருந்துகளை சாப்பிடுபவர்கள் ஏன் தற்கொலை மற்றும் தொடர் கொலைகளை செய்கின்றனர் அமெரிக்காவில் நடப்பது போல் . என்னை பொறுத்தவரை இந்த மருந்துகள் இன்றைய காலகட்டத்தில் எல்லா மருத்துவர்களும் (urologist, nueroligist, diabetolgist ) நான் அனுபவ பட்டவரை "MOOD ELEVATOR" என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள் . அதை மக்கள் தங்கள் நோயிக்கான மருந்து என அறியாமல் எடுத்து கொள்கிறார்கள் . "BEWARE OF MEDICINE " before you take தட்- check online for there details. Dont trust the words of doctors now a days mos t of them are mon'e'y minded and they will ruin your life and make you a life-time consumer of certain medicines. To safe gaurd ourself - Raise Voice to "REGULATE, ACCOUNT AND AUDIT " the "THE DOCTOR'S PREION" . Such as 'chronological numbering' of the preion and to maintain the record of patient and to file there returns every month regarding the diagnosis and prescribed medicine and there duration etc.
Rate this:
Share this comment
Cancel
kayalvizhi - madurai,இந்தியா
08-ஜூலை-201308:40:45 IST Report Abuse
kayalvizhi தர்மபுரியில் மட்டும்தான் தற்கொலை நடந்தது போல் உணர்ச்சி வசப்படுபவர்கள் ,இந்த செய்தியை படிக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
rtram - vellore,இந்தியா
07-ஜூலை-201317:35:02 IST Report Abuse
rtram தனி ஒரு மனிதனுக்கு உணவில்லைஎனின் ஜகத்தினை அழித்திடுவோம் .
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-ஜூலை-201315:52:10 IST Report Abuse
g.s,rajan சவால்களை சந்திக்கத் துணிவு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Ganabathy Arasu - Vellore,இந்தியா
06-ஜூலை-201321:51:30 IST Report Abuse
Ganabathy Arasu // தற்கொலை செய்வோர்களில் 80 சதவீதம் பேர் ஆண்கள். காதல் தோல்வி, கள்ளத்தொடர்பு, குடும்பத்தகராறு, கடன் தொல்லை, வேலையின்மை, தீராத நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலரும் உயிரை துறக்கின்றனர். // இன்றைய பெண்கள் நமது பாரம்பரிய ஒழுக்க முறைகளை தொலைத்து இன்றைய ஆண்களை காதல், திருமணம் என்ற பெயர்களில் டிஷு பேப்பராக மட்டுமே கருதி துடைத்து தூக்கி எறிவதால் காதல் தோல்விகளாலும், கள்ள காதல் துரோகங்களாலும் ஆண்கள் தற்கொலை முடிவுகளை நாடுவது அதிகரித்து வருகிறது. இதற்க்கு தீர்வு நமது பாரம்பரிய ஒழுக்க முறைகளை மீறும் பெண்கள் மற்றும் ஆண்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். அல்லது ஆண்கள் இன்றைய பெண்களை அன்பின் ஊற்றாகவும், மனக்கவலைக்கு அருமருந்தாகவும் கருதாமல் உயிருள்ள போதை பொருளாக மட்டுமே கருதும் மன நிலைக்கு வரவேண்டும். நாகரீகம், பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்களுக்கு ஒழுக்க சீர்கேடுகள் மட்டுமே கர்ப்பிக்கப்பட்டு, அதற்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாறிவரும் சூழ்நிலையில் ஆண்களுக்காண வழிகாட்டுதல்கள் இல்லாததே இது போன்ற தற்கொலைகளுக்கு ஆண்கள் அதிகம் பலியாவதற்கு காரணமாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Mynuddeen Ibrahim - Madurai,இந்தியா
06-ஜூலை-201317:56:34 IST Report Abuse
Mynuddeen Ibrahim நீங்கள் சொல்றது எல்லாம் சரி.. ஆனா பொருளாதார நெருக்கடி தான் தற்கொலைக்கு காரணம். என்ன எல்லா விலையும் யோர்ந்து விட்டது... லாபம்.சம்பளம்...உயரவில்லை ... எப்படி குடும்பத்தை நடத்துறது. இலவசம் நு சொல்லி, டிவி , மிக்சி , கிரைண்டர், பேன், லேப்டாப் எல்லாம் கொடுத்து ..கரண்ட் பில் ஏத்திட்டாங்க ... :( 100 வர்ற கரண்ட் பில் இப்போ 1200 வருது
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
06-ஜூலை-201313:20:35 IST Report Abuse
umarfarook அடுத்தாண்டு சாதனைபட்டியலில் இதையும் சேர்த்து விடாதீங்க
Rate this:
Share this comment
Cancel
Anand - Muscat,ஓமன்
06-ஜூலை-201313:16:53 IST Report Abuse
Anand வயதான கிழவர்கள் கூட பிச்சை எடுத்து தன்னுடைய உயிரை மாய்த்துகொள்ள தனக்கு அதிகாரம் இல்லை என்று தன்னுடைய உயிரை காக்கும்போது ,கை கால்கள் நல்ல இருக்கிற மத்தவங்க ஏன் இந்த தற்கொலை முடிவை தேடனும் . தற்கொலை செய்துகொள்ள ஒரு தைரியம் வேணும், சாக துணிவதற்கு தைரியம் வேணும், அதில் பாதி தைரியம் இருந்தால் போதும் வாழ்ந்து சாதனை படைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
06-ஜூலை-201311:41:34 IST Report Abuse
Sami கணக்கில் வந்தவை மட்டும்....மற்றவை
Rate this:
Share this comment
Cancel
unmai - chennai,இந்தியா
06-ஜூலை-201311:38:33 IST Report Abuse
unmai பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம், பெண்கள் என்ன செய்தாலும் தண்டனை இல்லை.. யாரை வேண்டுமானாலும் சிறை செல்ல வைக்க முடியும். இப்படிப்பட்ட சட்டங்கள் (பெண்ணை மட்டுமே உத்தமர்களாக நினைத்து எழுதப்பட்ட) உள்ள வரை ஆண்கள் இறந்துகொண்டு தான் இருப்பார்கள்.. அவர்களுக்கு என்று எப்போது ஒரு பொது துறை செயல்பட ஆரம்பிகிறதோ அன்று தான் இவை நிற்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.