E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
துணைவேந்தர் கருத்து கிராமங்களில் "3ஜி' பயன்பாடு மேம்படுத்துவது அவசியம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2013
02:07

கோவை : "விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் மத்தியில் இடைவெளி அதிகரித்து வரும் நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப சேவை மூலம் வேளாண் தேவைகளை சிறந்த முறையில் சந்திக்க இயலும்' என, துணைவேந்தர் பேசினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம் சார்பில், 'வேளாண் விரிவாக்கத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு துவங்கியது.
வேளாண் விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தியோடர் வரவேற்றார். பல்கலை துணைவேந்தர் ராமசாமி தலைமை வகித்து பேசியதாவது:
அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வாயிலாக, வேளாண் தொழில்நுட்பங்களை சிறந்த முறையில் விவசாயிகளுக்கு எடுத்து செல்வதன் மூலம் அறிவியல் வேளாண்மையை வளர்க்க இயலும். தற்போது, கோடிக்கணக் கான மக்கள் மொபைல் போன் பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும், 3ஜி அலைக்கற்றை கிராமப் பகுதிகளில் மேம்படுத்துவது அவசியம்.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விரிவாக்கப்பணிகளை தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில், அனைத்து விரிவாக்க அலுவலர்களுக்கும், "புவியிட உணர் அமைப்பு' (ஜி.பி.எஸ்.,) கொண்ட கைக்கணினி வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் மத்தியில் இடை
வெளி அதிகரித்து வரும் நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப சேவையின் மூலம் விவசாயிக
ளின் தேவைகளை சிறந்த முறையில் சந்திக்க இயலும்.
இவ்வாறு, துணைவேந்தர் பேசினார்.
இப்பயிற்சிமுகாம் வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. வேளாண் விரிவாக்கத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு, இணையதள சேவைகள், கணினி மென்பொருள், சமுதாய் வானொலி, சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
முகாமில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், பீகார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் இருந்து 25 வேளாண் விரிவாக்க விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.


மேலும் பொது செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.