BJP ready fo face lok sabha elections | லோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார் : காங்கிரசுக்கு பாரதிய ஜனதா கட்சி சவால் | Dinamalar
Advertisement
லோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார் : காங்கிரசுக்கு பாரதிய ஜனதா கட்சி சவால்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

லோக்சபா தேர்தலை முன்னதாகவே நடத்த, காங்கிரஸ் தயாராவது போல தெரிகிறது. அவ்வாறு, முன்னதாகவே தேர்தல் நடந்தால், அதைச் சந்திக்க முழுவீச்சில் தயாராக உள்ளோம்' என, பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வில், கொள்கை முடிவு எடுக்கும் உயர்மட்ட அமைப்பான, பார்லிமென்ட் போர்டு ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தல் தொடர்பாக, முக்கிய முடிவு எடுப்பதற்காக, இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

சந்தேகம் :டில்லி, அசோகா சாலையில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், காலை. 10:30 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம், 12:30 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முதல்வரும், பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவருமான, நரேந்திர மோடி உட்பட, பலர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பின், கட்சியின் பொதுச் செயலரான, அனந்தகுமார் கூறியதாவது:காங்கிரசின் சமீபத்திய நடவடிக்கைகள் எல்லாம், சந்தேகம் அளிப்பதாக உள்ளன. லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு, மே மாதம் தான் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்னதாகவே, தேர்தலை நடத்தி விடலாம் என்ற எண்ணம், காங்கிரசுக்கு இருப்பது போல தெரிகிறது.
ஒருவேளை, லோக்சபாவுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட்டதால், அதைச் சந்திக்க, பா.ஜ., தயாராகவே உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில், எங்கள் கட்சி முழுவீச்சில் இறங்கியுள்ளது. இன்று முதல், தேர்தல் மனநிலைக்கு, பா.ஜ., வந்து விட்டதாகவே கருதலாம். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பார்லிமென்டை சந்திக்க பயப்படுகிறது. வழக்கமாக, ஜூலை மூன்றாவது வாரத்தில், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் கூட்டப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை, அதேபோல் கூட்டத் தொடரை கூட்ட, காங்கிரஸ் பயப்படுகிறது. காங்கிரசுக்கு, பார்லிமென்டை சந்திக்கவும், எதிர்க்கட்சிகளை சந்திக்கவும், மக்களை சந்திக்கவும் பயமாக உள்ளது.காங்., தலைமையிலான, ஐ.மு.கூட்டணியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. காங்., மீது, கூட்டணி கட்சிகள் நம்பிக்கை இல்லாமல் உள்ளன. எனவே தான், கூட்டணி கட்சிகள் மீது நம்பிக்கையே வைக்காமல், உணவு பாதுகாப்பு மசோதாவை, அவசர சட்டம் மூலம், மத்திய அரசு அமல்படுத்திஉள்ளது.

வீழ்ச்சி :மன்மோகன் சிங் அரசு, அனைத்து விதங்களிலும் தோல்வி அடைந்து விட்டது. எல்லா துறைகளிலும், வீழ்ச்சி காணப்படுகிறது. பொருளாதார முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு, விலைவாசியை கட்டுப்படுத்துதல், உள்நாட்டு பாதுகாப்பு என, அனைத்திலும் மத்திய அரசுக்கு தோல்வியே.பொதுத் தேர்தலை சந்திக்க, இரண்டு விதமான திட்டங்களை, பா.ஜ., வகுத்துள்ளது. அதாவது, அரசியல் பிரசாரம் மற்றும் அமைப்பு ரீதியான பிரசாரம் என, இரு விதமான வியூகங்களில், மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளது.

குழுக்கள் :அரசியல் பிரசாரம் மூலமாக, கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம், ஒவ்வொரு முக்கிய ஊர்களுக்கும் சென்று, மக்களை சந்தித்து பிரசாரம் செய்வர். அமைப்பு ரீதியான பிரசாரத்திற்காக, முக்கிய குழுக்களை அமைக்க, திட்டமிடப்பட்டுள்ளது.தேர்தல் யுக்திகளை மேற்கொள்ள அமைக்கப்படும், அந்தக் குழுக்களில், தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நிர்வாகிகள் இருப்பர். இந்த குழுக்களை அமைக்கும் பொறுப்பு, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களுடன், ஆலோசனை செய்த பின், இந்த குழுக்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அனந்தகுமார் கூறினார்.

-நமது டில்லி நிருபர் -

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (42)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shajahan - cumbum,இந்தியா
28-ஜூலை-201315:56:24 IST Report Abuse
shajahan முதலில் 272 ஆட்கள் இருந்தல்தனே ச.shajahan
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
sudharsanareddy - madurai,இந்தியா
09-ஜூலை-201318:15:01 IST Report Abuse
sudharsanareddy வெற்றி நமதே மோடி க
Rate this:
10 members
0 members
12 members
Share this comment
Cancel
sudharsanareddy - madurai,இந்தியா
09-ஜூலை-201318:04:20 IST Report Abuse
sudharsanareddy சந்தேகமே இல்லை நியaதிர்கி வெற்றி.. மோடி கு thaann வெற்றி
Rate this:
9 members
0 members
12 members
Share this comment
Cancel
சித்தப்பா புலிப்பாண்டி - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-201318:03:32 IST Report Abuse
சித்தப்பா புலிப்பாண்டி இது சும்மா திகில் காட்றது, உள்ளுக்குள்ள பயம் இருந்துகிட்டுதான் இருக்கும், பாஜக ஒரு வேலை இந்த தேர்தலிலும் மண்ணை கவ்வினால் அப்புறம் அது காணாமல் போய்டும், i mean பிரிந்து பல கோஷ்டிகள் ஆகிடும்
Rate this:
19 members
0 members
15 members
Share this comment
Cancel
ariff - manama,பஹ்ரைன்
09-ஜூலை-201316:56:38 IST Report Abuse
ariff எருமை ஹெலிகாப்ட்டர் ஓட்டுதாம் நம்பமுடிகறதா? அதபோலத்தான் பா.ஜா.கா வின் கனவு.
Rate this:
33 members
0 members
15 members
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
09-ஜூலை-201315:39:31 IST Report Abuse
unmaiyai solren பாஜக தினமும் தேர்தலுக்கு தயார் என்று அறிக்கை விடுவதிலிருந்தே அவர்களுக்கு பதவி பித்து எந்த அளவிற்கு தலைக்கேறி இருக்கிறது என்றும் அதிலும் மோடி,ஜெயலலிதாவின் அமைச்சர்கள் தன் இடத்தை தக்கவைத்துக்கொள்ள எந்த அளவிற்கு அவருக்கு குனிந்து கும்பிடு போட்டு தன்னை நல்லவனாக, விசுவாசியாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்களோ, அதைப்போலத்தான் மோடியும் நடித்து வருகிறார். படத்தை உற்றுப்பாருங்கள். இது உங்களுக்கே புரியும்.அத்வானியும் அதை புரிந்துகொண்டவர் போலதான் காட்சி தருகிறார்
Rate this:
20 members
0 members
15 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
09-ஜூலை-201314:55:29 IST Report Abuse
Ab Cd இதெல்லாம், இப்படி சொல்லி சொல்லி, பெரிய நிறுவனங்களிடம் தேர்தல் நிதி திரட்ட ஒரு யுக்தி.
Rate this:
9 members
0 members
24 members
Share this comment
Cancel
K R RADHAKRISHNAN - udumalpet ,இந்தியா
09-ஜூலை-201314:31:01 IST Report Abuse
K R RADHAKRISHNAN மோதி பிரதமர் ஆவதற்கு கவுன் டௌன் தொடங்கிவிட்டது வாழ்த்துக்கள் .
Rate this:
12 members
0 members
43 members
Share this comment
Cancel
SHivA - cheNNAi,இந்தியா
09-ஜூலை-201311:23:48 IST Report Abuse
SHivA காங்கிரஸ் மேல மக்களுக்கு வெறுப்பு உள்ளது உண்மை.. அதனால் பா ஜ க நாம் வந்து விடுவோம் என்று நப்பாசையில் உள்ளது..ஆனால் கர்நாடகாவில் அவர்கள் ஆட்சியை பார்த்த பின் இவர்களும் ஊழலில் சளைத்தவர்கள் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து நொந்து போய் உள்ளனர்..
Rate this:
11 members
0 members
15 members
Share this comment
Cancel
SHivA - cheNNAi,இந்தியா
09-ஜூலை-201311:18:05 IST Report Abuse
SHivA இதுலே என்ன பெரிய சவால் ? தேர்தல் வந்தா அதுலே ஜெயிச்சதான் அவுக பொழப்பு ஓடும் என்பதால் எல்லா கட்சியுமே போட்டி போடத்தான் போவுது...தோக்கப்போவது வழக்கம் போல மக்கு களான மக்கள் தான் ..
Rate this:
3 members
0 members
10 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்