Demand for SSCP not aimed at publicity, says Karunanidhi | சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன்:நாகையில் கருணாநிதி "ஆவேசம்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன்:நாகையில் கருணாநிதி "ஆவேசம்'

Updated : ஜூலை 09, 2013 | Added : ஜூலை 08, 2013 | கருத்துகள் (185)
Advertisement
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன்:நாகையில் கருணாநிதி "ஆவேசம்'

நாகப்பட்டினம் : "சேது சமுத்திர திட்டம் என் கனவு திட்டம்; என் வாழ்நாளில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன்' என, நாகையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கருணாநிதி பேசினார்.

சேது சமுத்திர திட்டத்தை, விரைந்து நிறைவேற்ற கோரி, நாகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், கருணாநிதி பேசியதாவது:சேது சமுத்திர திட்டத்திற்காக, தமிழகம் ஒன்று திரண்டுள்ளது. அண்ணாதுரையின் ஆணையை நிறைவேற்ற, ஒன்று திரண்டு குரல் கொடுக்கிறோம். இந்நாள், மகிழ்ச்சியான நாள். சேது சமுத்திர திட்டத்தால், எனக்கு தனிப்பட்ட முறையில் லாபம் இல்லை. இது, எதிர்கால சந்ததியினருக்கான திட்டம்.தமிழகத்தில், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், நன்மைகள் ஏராளம். வாணிபம் பெருகும்; மீனவர்கள் வாழ்வாதாரம் செழிக்கும்; கிரேக்கம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன், வாணிப தொடர்பு கொண்ட தமிழகத்தில், மீண்டும் வாணிபம் தொடர்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும்.நாகை, கடலூர் துறைமுகம் விரிவடையும். வேதாரண்யத்தில் துறைமுகம் உருவாகும். தமிழக கடலில், பெரிய கப்பல்கள் மிதக்கும்.

இத்திட்டம் மீனவர்களுக்குப் பாதிப்பு என்று, மீனவர்களை சிலர், தூண்டி விடுகின்றனர். உறுதியாக கூறுகிறேன்; சேது சமுத்திர திட்டத்தால் மீனவர்கள் வாழ்வு செழிக்கும்.என் நண்பர் எம்.ஜி.ஆர்., விரும்பிய திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா ஒதுக்குகிறார் என்றால் , எம்.ஜி.ஆரையே ஒதுக்குகிறார் என்று தான் அர்த்தம். எனக்கு, 90 வயது ஆகிறது. வருங்கால சமுதாயம் வாழ கனவு காண்கிறேன். இது தவறா என, நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு பேசிய கருணாநிதி, தன் வழக்கமான பாணியை விட்டு, முதல்வர் ஜெயலலிதாவின், கதை சொல்லும் பாணியைப் பின்பற்றத் துவங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:ஒரு கிழவர் மண்ணில் மாங்கொட்டையைப் புதைத்துக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவன், என்னய்யா இது, எப்போது மரமாகி பலன் தரப்போகிறது என ஏளனம் செய்தான்.கிழவன் சொன்னான், நீ இப்போது உண்கிறாயே மாம்பழம், அது பாட்டனும், பூட்டனும் விதைத்தது.அது போல, நான் புதைக்கும் மாங்கொட்டை, செடியாகி, மரமாகி, காயாகி கனி தரும் என்றான் கிழவன்.இப்போது, நான் விதைக்கும் விதை நம் பேரன், கொள்ளுப் பேரன்களுக்கு பயன் தரும்.நாகையில் பிறந்த, மறைமலையடிகள் மீது ஆணையிட்டு சொல்கிறேன். சேது சமுத்திர திட்டத்தை என் வாழ்நாளில் சாதித்துக் காட்டுவேன். நிறைவேற்ற, அனைவரும் என்னுடன் சேர்ந்து பாடுபட வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (185)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri - Doha,கத்தார்
10-ஜூலை-201305:05:27 IST Report Abuse
Sri ஷூ ஷூ மேல வெள்ளை காக்காய் பறக்குது ...போ பெருசு போயி ரெஸ்ட் எடு ..பாவம் வயசான காலத்துல
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
09-ஜூலை-201321:59:11 IST Report Abuse
Natarajan Iyer என் வாழ்நாளில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன்......... இதற்காகவாவது யாராவது இந்த திட்டத்தை ஒரே நாளில் நிறைவேற்றினால் தேவலை. பெருசு இம்சை தாங்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்
09-ஜூலை-201321:54:15 IST Report Abuse
Bala Sreenivasan எனக்கு தமிழ் நாட்டு ஹிந்துக்களைப் பற்றி அதிகம் தெரியாது, ஆனால் வட இந்தியாவில் இருக்கும் ஹிந்து சகோதரர்கள் ராமர் சேதுவின் மீது கை வைத்தால் சும்மா இருக்க மாட்டார்கள். பெரிய போராட்டம் வெடிக்கும் என்று காங்கிரஸ் நடு நடுங்கிக் கொண்டிருக்கிறது. எனவே கருணாநிதியின் பினாமி கம்பனிகளை காப்பாற்ற அவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள் என்பது உறுதி. வாங்கின கமிஷனுக்கு வஞ்சனை இல்லாது வேலை செய்திருப்பதாக காட்டிக் கொள்ளத்தான் இந்த ஆவேசம் இப்போ இருக்கிற மன நிலையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற இந்தியா முழுவதும் உள்ள ராமர் கோவில்களில் ஓசை இல்லாமல் சிறப்பு வழிபாடு செய்திட வீட்டில் உள்ள பெண்களை தலைவர் அனுப்பினாலும் ஆச்சரியப படுவதற்கில்லை
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
09-ஜூலை-201321:37:05 IST Report Abuse
Cheenu Meenu உடன்பிறப்பே, பழத்தின் சதைப்பற்று என் குடும்ப பேரன் பேத்திகளுக்கு உள்ளே இருக்கும் கொட்டை உனக்கு. அதை மறக்காமல் நட்டு வை. மாறன் கொள்ளுபேரன் அனுபவிப்பான்.
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
09-ஜூலை-201321:33:44 IST Report Abuse
m.viswanathan "எனக்கு தனிப்பட்ட முறையில் லாபம் இல்லை". இப்படி கூறுவதில் இருந்தே இதில் ஏதோ உள்குத்து உள்ளது
Rate this:
Share this comment
Cancel
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
09-ஜூலை-201319:53:45 IST Report Abuse
RAMASWAMY S SETHU SAMUTHURA THITTAM IS REALLY A FAILURE. FIRST OF ALL IT WORSEN THE FISHERMEN COMMUNITY. THEIR LIVELYHOOD WILL BE MUCH MORE AFFECTED. SECOND THING IT HUMILATES THE SENTIMENTS OF HINDU RELIGION. IT IS ONLY A EXPENSIVE ONE AND ONLY CERTAIN SECTION OF PEOPLE CAN MINT MONEY , SO GOVT SHOULD THE IDEA. THIS IS 100 % true
Rate this:
Share this comment
Cancel
K R RADHAKRISHNAN - udumalpet ,இந்தியா
09-ஜூலை-201319:42:22 IST Report Abuse
K R RADHAKRISHNAN வயதான காலத்தில் அமைதியாய் இருங்கள்
Rate this:
Share this comment
Cancel
Nagarajan, Panagudi - Muscut,ஓமன்
09-ஜூலை-201319:40:48 IST Report Abuse
Nagarajan, Panagudi மூத்த தலைவர் போராடும் விதத்தை பார்த்தால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல தெரிகிறது.எதோ உள்நோக்கத்தோடுதான் சேது சமுத்திர போராட்டத்தை நடத்துவது போல தோன்றுகிறது.நிறைவேறாத / நிறைவேற்றபடமுடியாத ஒரு திட்டத்திற்கு பெருசு கொட்டாவி விடுகிறது என்றால் உள்நோக்கம் இல்லாமல் இல்லை
Rate this:
Share this comment
Karthikeyan Subramanian - Mexico City,மெக்சிக்கோ
13-ஜூலை-201304:53:55 IST Report Abuse
Karthikeyan Subramanianஉள் நோக்கம் இல்லாமல் இல்லை நண்பரே, ஏற்கனவே ஒருத்தர் தேவையான அளவு பணம் பாத்துட்டார் அதே திட்டத்துல... இப்போ அடுத்த வாரிசு பணம் பார்க்க வழி பண்ண வேணாமா...? அப்பறம் தேவை இல்லாம சண்டை வரும் (குடும்பத்துக்குள்ள)... :P அவர் குடும்பத்தை பொறுத்தவரை ரொம்ப நாணயம் ஆனவர்... அதான் எல்லாரும் சமமா சம்பாரிகனும்னு நினைச்சு இந்த அறிக்கை விட்டுருக்காரு... :) ) :P...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
09-ஜூலை-201318:29:07 IST Report Abuse
rajan காய் கனியாகும் கொட்டை கனியாகும் கனி கொட்டையாகும்கொட்டை மரமாகும் மரம் தோப்பாகும் தோப்பு வீடாகும்.. தலைவன் எங்கேயோ வலைவீசி புடிக்கிற மத்திரி தெரியுதே.
Rate this:
Share this comment
Cancel
KUMUKKI - male,மாலத்தீவு
09-ஜூலை-201317:25:10 IST Report Abuse
KUMUKKI அண்ணா கண்ட கனவு (ஊழல் இல்லாத ஆட்சி) உங்களால் நிறைவேற்றப்படவில்லையே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை