E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
உத்தரகண்டில் மாயமான 12 தமிழர் கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
23:48

சென்னை : உத்தரகண்ட் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கி மாயமான, தமிழக பக்தர், 12 பேரை, கண்டுபிடிக்க முடியாமல், அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து, உத்தரகண்ட் மாநிலத்திற்கு, யாத்திரை சென்ற, தமிழக பக்தர்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவை அடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் டில்லி மற்றும் டேராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்கள், உத்தரகண்ட் மாநில அதிகாரிகளுடன் இணைந்து, 503 பேரை மீட்டனர். அவர்களில், 413 பேர், விமானம் மூலமாகவும், 90 பேர் ரயில் மூலமாகவும், தமிழகம் வந்தனர்.

சென்னை, அண்ணா நகரை சேர்ந்த, தொழில் அதிபர் சந்திரமவுலி, தன் மனைவி ரமாவுடன், வெள்ளத்தில் சிக்கினார். நிலச்சரிவில் சிக்கி, காயமடைந்த ரமா, பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டார். அவரது கணவர் குறித்த விபரம் தெரியவில்லை. அதேபோல், விழுப்புரத்திலிருந்து சென்ற, கீதா, கருணாமூர்த்தி, கனகவள்ளி, நரசிம்மன், வசந்தகுமாரி, ஸ்ரீலதா, ராதாபாய், சம்பத்குமாரி, சித்ரா, லட்சுமி ஆகியோர் குறித்த விபரமும் தெரியவில்லை.
அவர்கள் குறித்த விபரங்கள், உத்தரகண்ட் மாநில அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது. நேற்று வரை, அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K R RADHAKRISHNAN - udumalpet ,இந்தியா
09-ஜூலை-201314:42:01 IST Report Abuse
K R RADHAKRISHNAN கண்டிப்பாக உயிருடன் இருக்க ஆண்டவனை வழிபடுவோம் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-ஜூலை-201309:09:20 IST Report Abuse
Srinivasan Kannaiya விரைவில் கண்டுபிடிக்க எல்லாம்வல்ல இறைவன் துணை இருப்பார். நம்மூரிலேயே நெறைய கோவில்,குளம் தெய்வங்கள் இருக்கிறது.. அதையெல்லாம் பார்க்கலாமே. வெளி ஊர் செல்ல ஆகும் காசை அனாதை இல்லங்களுக்கு கொடுக்கலாமே
Rate this:
7 members
2 members
7 members
Share this comment
A. Sivakumar. - Chennai,இந்தியா
09-ஜூலை-201312:38:20 IST Report Abuse
A. Sivakumar.நீங்க சொல்றது அருமையான யோசனை... சிவவாக்கியரின் பொன்வாக்கு இதுதான்... நட்டகல்லைத் தெய்வமென்று நாளும் புஷ்பம் சாற்றியே சுற்றிவந்து முணுமுணுவென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்”... இதை நாம் உணர்ந்தால் சரியே......
Rate this:
3 members
0 members
9 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.