Advertisement
தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திடீரென குறைப்பு : சிக்கலுக்கு என்ன காரணம்?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

09 ஜூலை
2013
00:20
பதிவு செய்த நாள்
ஜூலை 08,2013 23:50

சென்னை :கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்திற்கு திறந்து விடப்படும், கிருஷ்ணா நதி நீரின் அளவு, வினாடிக்கு, 250 கன அடியாக குறைந்துள்ளது. கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு தான் இதற்கு முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஆந்திர மாநில அரசு, கண்டலேறு அணையிலிருந்து, ஜூலை, 1ம் தேதி, கிருஷ்ணா நதி நீரைத் திறந்து விட்டது.ஆரம்பத்தில், வினாடிக்கு, 200 கன அடியும், பின் படிப்படியாக, 500 கன அடி வரையும் திறந்து விடப்பட்டது. ஆனாலும், கிருஷ்ணா நதி நீர், தமிழக எல்லையை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டது.ஒரு வழியாக, ஜூலை, 6ம் தேதி மதியம், தமிழக எல்லையை வந்தடைந்தது. அடுத்த நாளில், பூண்டி ஏரிக்கு வந்தது.தமிழக எல்லைக்கு வந்தபோது, தண்ணீரின் அளவு, வினாடிக்கு, 14 கன அடி என்ற குறைந்த அளவிலலேயே இருந்தது. தண்ணீர் வந்தடைவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும், வரத்து குறைவுக்கும், கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீரின் அளவை வெகுவாக குறைத்தது தான் காரணம் என, கூறப்படுகிறது.

கால்வாயில் உடைப்பு:



இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கண்டலேறிலிருந்து ஆரம்பத்தில், வினாடிக்கு, 200 கன அடியும், பின், 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. உப்பல மடுகு பகுதியில், தண்ணீர் வரும் கால்வாயில், 6ம் தேதி காலை திடீரென லேசான உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது.பாதிப்பு ஏற்பட்டது, ஆந்திர பகுதியில் தான். வெள்ள பாதிப்பு ஏற்படுவதைத் தவிக்க, தண்ணீர் அளவை திடீரென, வினாடிக்கு, 150 கன அடியாக குறைத்தனர்.பின், சிறிய அளவிலான, கால்வாய் உடைப்பை, ஆந்திர அரசு சரி செய்தது. இதையடுத்து, தண்ணீர் வெளியேற்றும் அளவு, 150 கன அடியிலிருந்து, 250 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. படிப்படியாக, 500 கன அடியாக உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.

நீர்மட்டம் உயரவில்லை:



கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரியைத் தொட்டாலும், எதிர்பார்த்த அளவில் தண்ணீர் வரவில்லை. சிறு, "பம்பு செட்'டிலிருந்து வரும் தண்ணீர் போலத் தான் வருகிறது. இதுவும், வறண்டு கிடந்த ஏரியில் பெருமளவு உறிஞ்சப்படுவதால், ஏரியின் நீர் மட்டம் உயரவில்லை.பூண்டி ஏரியின் நீர்மட்டம், 195 மில்லியன் கன அடியாகவே உள்ளது. கண்டேலேறு அணையிலிருந்து திறந்து விடும் கிருஷ்ணா நதிநீரின் அளவு அதிகரித்தால் மட்டுமே, பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஓரளவு உயரும் வாய்ப்புள்ளது.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-ஜூலை-201309:05:43 IST Report Abuse
Srinivasan Kannaiya நாம் எல்லாவற்றையும் திறப்போம். ஆனால் அதை பராமரிக்க தொகை எதையும் ஒதுக்க மாட்டோம்.. அப்பிடியே ஓதிக்கினாலும் உடன் பிறப்புக்கள் முழுமையாக ஏப்பம் விட்டுவிடும். ஏன்யா இப்பிடி காசுக்கு அலையறீங்க.. போகும்பொழுது எதை உடன் எடுத்து கொண்டு போக போகிறீர்கள்..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
09-ஜூலை-201308:22:43 IST Report Abuse
manoharan ஆந்திராவில் திறந்துவிடும் தண்ணீரில் பத்து சதவீதம் கூட நமக்கு வந்து சேர்வதில்லை. அந்த கால்வாய் பணிகள் ஆரம்பத்திலேயே ஒழுங்காக செய்ய வில்லை. மற்றும் வழியில் விவசாயத்திகும் மற்ற காரணங்களுக்கும் இதிலிருந்து தண்ணீர் எடுக்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Nagarajan.Su - Chennai,இந்தியா
09-ஜூலை-201307:47:35 IST Report Abuse
Nagarajan.Su இதெல்லாம் தமிழக பொதுப்பணித்துறையின் மெத்தனத்தால் தான். கிருஷ்ணா கால்வாய் ஆங்காங்கே பல இடங்களில் சேதமடைந்தும், செடிகொடிகள்,புற்கள் வளர்ந்தும் பாழாகி இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கால்வாயை தண்ணீர் வருவதற்கு முன் பராமரித்திருந்தால் தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டிருக்கும்.
Rate this:
0 members
0 members
49 members
Share this comment
Cancel
tmsaravanai - CHENNAI,இந்தியா
09-ஜூலை-201304:49:05 IST Report Abuse
tmsaravanai ஆந்திரா அரசு கொடுப்பது போல காலை வாருகிறது
Rate this:
69 members
0 members
3 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
09-ஜூலை-201301:08:42 IST Report Abuse
தமிழ் சிங்கம் ஜெயா ஆட்சியில் இருக்கும்வரை, ஒருத்தனும் தண்ணி குடிக்ககூட குடுக்கமாட்டான். வரும் பொதுதேர்தலுக்கு பின், ஜெயாவின் ஆட்சி விரைவில் கலைக்கப்படும். அதற்குப்பின், கலைஞரின் ஆட்சியில், தமிழர்கள் கவலைப்பட நேரிடாது.
Rate this:
53 members
1 members
140 members
Share this comment
PM Rani - new delhi,இந்தியா
09-ஜூலை-201305:54:16 IST Report Abuse
PM Raniஆமாம்.. வெங்காய விலை உயர்வுக்கான காரணத்தை பெரியாய்ப் போய் கேட்கசொன்னவரை இனியும் தமிழகம் நம்பாது.. உங்களய்ம் சேர்த்துத்தான்.....
Rate this:
4 members
0 members
32 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.