Dissident DMDK MLAs to expel from the party? | தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கட்சியை விட்டு நீக்கம்? 13ம் தேதி விஜயகாந்த் இறுதி முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கட்சியை விட்டு நீக்கம்? 13ம் தேதி விஜயகாந்த் இறுதி முடிவு

Added : ஜூலை 09, 2013 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Dissident DMDK MLAs to expel from the party?

ராஜ்யசபா தேர்தலில், கட்சி மாறி அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்த, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேருக்கும், விளக்கம் அளிப்பதற்கான கெடு, இன்றுடன் முடிவடைகிறது. ஏழு பேரையும் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதில், விஜயகாந்த் உறுதியாக உள்ளார். வரும், 13ம் தேதி, தனது முடிவை அறிவிக்க உள்ளார். ஆனால், அத்திட்டத்தை தள்ளிப் போடுமாறு, மாநில நிர்வாகிகள் சிலர், அவரை வலியுறுத்தி வருகின்றனர்.


அதிருப்தியாளர்கள்:

தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், நடிகர் அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி, பாண்டியராஜன் ஆகியோர், ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். இதையடுத்து, கடந்த மாதம், 29ம் தேதி, ஏழு பேரும் தே.மு.தி.க.,வில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். விளக்கம் கேட்டு, இவர்களுக்கு கட்சி தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதினார். இதற்கான பதிலை, ஏழு பேரும், 10ம் தேதிக்குள் அளிக்கவேண்டும். இது குறித்து, ஏழு பேரும் ஆலோசனை நடத்தினர். விளக்க கடிதம் அனுப்ப, அ.தி.மு.க., தலைமையின் அனுமதியை பெற முயற்சித்தனர். ஆனால், "கடிதம் அனுப்ப வேண்டாம்' என, உத்தரவு கிடைத்ததாகவும், ஏழு பேரும் விளக்க கடிதம் அனுப்பும் திட்டத்தை கைவிட்டதாகவும், தகவல் வெளியாகிஉள்ளது. விஜயகாந்த், விதித்த கெடு இன்று (10ம் தேதி) முடிகிறது. இந்த சூழ்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரையும், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளதாக தெரிகிறது.


தீவிர ஆலோசனை:

நேற்று காலை, 11:30 மணிக்கு, தே.மு.தி.க., தலைமை அலுவலகம் வந்த அவர், இது குறித்து பகல், 1:00 மணி வரை தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், ஏழு பேரையும் கட்சியில் இருந்து நீக்கினால், எதிர்க்கட்சி அந்தஸ்து பறிக்கப்படும் என்பதால், அத்திட்டத்தை தள்ளிப் போடுமாறு, மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலரும் விஜயகாந்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவரின் அறை, கார், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட எதையும், விஜயகாந்த் பயன்படுத்துவதில்லை. விசுவாசிகளாக இருப்பர் என, நம்பிய ஏழு பேரும், துரோகம் செய்து விட்டதை, விஜயகாந்தால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தயவில் எதிர்க்கட்சி தலைவராக நீடிப்பதையும் அவர் விரும்பவில்லை. அதனால், ஏழு பேரையும் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஏழு பேரையும் கட்சியை விட்டு நீக்காவிட்டால், மேலும், சில எம்.எல்.ஏ.,க் களை இழுத்து, "போட்டி தே.மு.தி.க.,'வை ஏற்படுத்த, அ.தி.மு.க., முயற்சிக்கும். அதன் பிறகு தானாகவே எதிர்க்கட்சி தலைவர் பதவி போய்விடும்.


கட்சிக்கு மதிப்பு:

அதற்கு முன்பாகவே, அந்த நடவடிக்கையை நாமே எடுத்து விட்டால், மக்கள் மற்றும் நடுநிலையாளர்களிடம், கட்சிக்கு மதிப்பு கூடும் என, விஜயகாந்த் நினைக்கிறார். அதனால் தான், ஏழு பேரையும், கட்சியை விட்டு நீக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனால், கட்சியில் உள்ள சிலருக்கு இது பிடிக்கவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால், அடுத்தாண்டு நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு பிறகு, இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என, அவர்கள் கூறுகின்றனர். இவ்விஷயத்தில், வரும், 13ம் தேதி, விஜயகாந்த் தனது முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Singam - Villuppuram,இந்தியா
10-ஜூலை-201315:33:57 IST Report Abuse
Singam திரு விஜயகாந்த் அவர்களே, அந்த ஏழு பச்சை துரோகிகளை, கிருமிகளை விரட்டுங்கள் தேதிமுக வில் இருந்து.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
10-ஜூலை-201318:21:10 IST Report Abuse
Pannadai Pandianஇவுரு ரொம்ப யோக்கியரா ???...
Rate this:
Share this comment
Cancel
JAYAJOTHIVEERAKKAN - Chennai,இந்தியா
10-ஜூலை-201315:32:11 IST Report Abuse
JAYAJOTHIVEERAKKAN மக்களை முட்டாளாக்கும் திரு.கருணாநிதி போன்றோ அல்லது அறிக்கைகளை விட்டாலும் எதாவது செய்ய நினைக்கும் செல்வி. ஜெயலலிதா போன்றோ இல்லாமல் சினிமா பாணியில் அரசியல் நடத்த எண்ணும் உங்களுக்கு எதுக்கு சார் இந்த ஆலோசனை கூட்டம் எல்லாம். இன்னும் நீங்க வளரனும் சார்.
Rate this:
Share this comment
Cancel
Singam - Villuppuram,இந்தியா
10-ஜூலை-201315:26:31 IST Report Abuse
Singam கொட்டுங்கள் முரசு விடியட்டும் தமிழ்நாடு அரசு ....கேப்டன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க.....அடுத்த முதல்வர் திரு விஜயகாந்த் அவர்கள் தான்.......
Rate this:
Share this comment
Cancel
Panneer - Abh Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூலை-201313:34:29 IST Report Abuse
Panneer துரோகிகளுக்கு அரசியலில் நிரந்திர இடமில்லை
Rate this:
Share this comment
Cancel
Madhav - Chennai,இந்தியா
10-ஜூலை-201312:34:23 IST Report Abuse
Madhav இவரது வாக்கு வங்கியானது, பிற அரசியல் கட்சியில் செயல்பட வாய்ப்பு இல்லாதவர்கள், இவரது மொழி மற்றும் சாதியினர், அடையாள அரசியல் செய்யும் அளவிற்கு எண்ணிக்கை இல்லாதவர்கள் மற்றும் ஒரு நடிகனின் கதாபாத்திரத்தின் குணமே அவன் குணம் என நம்பும் ஏமாளிகளைக் கொண்டது. இவருக்கு தமிழகத்தின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் குறித்தான எந்த அபிப்ராயமும் கிடையாது, குறைந்த பட்ச செயல் திட்டம், சமயோசிதம் ( ஏர்போர்ட் சீன் ), நிர்வாக திறன் எதுவுமே கிடையாது. எதிர்கட்சியாக இவரது செயல்பாடு ஒரு பூஜ்ஜியம். இவர் தமிழக அரசியல் அரங்கில் இருந்து நீக்கப் பட வேண்டியவர். தமிழகத்தின் இரு பிரதான அரசியல் கட்சிகளின் பலவீனங்களே இவரது பலம் மற்றும் வாக்கு. தமிழக அறிவுசார் இயக்கவியலாளர்கள் ( சோ, வீரமணி போன்றோர் ) இந்த பலவீனங்களை சரி செய்வதற்கான செயல்களை செய்ய வேண்டும். அதைவிடுத்து இன்னொரு அரசியல் கோமாளி அவைகளை பயன்படுத்தி அரசியல் செய்வது, தமிழகத்துக்கு பெரும் தீங்காய் அமையும்.
Rate this:
Share this comment
Cancel
Ma. PARAIYARAIVON - Thoothukudi,இந்தியா
10-ஜூலை-201312:25:21 IST Report Abuse
Ma. PARAIYARAIVON எப்படியோ, ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் ஆகப்போறது கிட்டதிட்ட முடிவாகிருச்சு. கலைஞருக்கு தான் எவ்வளவு சந்தோசம், வெறும் 22 எம் எல் ஏ க்களை வச்சிக்கிட்டு கனியை ராஜ்யசபா MP ஆக்கிட்டாரு, இப்போ பையனையும் எதிர்க்கட்சி தலைவர் ஆக்கிட்டா அந்த சந்தோஷத்திலேயே சக்கர நாற்காலியிலே இருந்து துள்ளி குதிச்சு ஓட ஆரம்பிசிருவாரு.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஜூலை-201312:04:29 IST Report Abuse
Nallavan Nallavan உண்மையில் தொகுதிக்காகப் போனார்களா? அல்லது விலை போனார்களா என்று உறுதிப்படுத்திக்கொண்டு செய்வார். இதே போல ஊழல் வழக்குகளில் சிக்கித் தவித்த மாஜி அதிமுக மந்திரிகளை திமுக "அரவணைத்தது" நினைவில் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
sathish.R - madurai,இந்தியா
10-ஜூலை-201311:05:41 IST Report Abuse
sathish.R திரு.விஜயகாந்த் இனியும் தாமதிக்காமல் தனது அன்பு தலைவர் தமிழின காவலர் டாக்டர்.கலைஞர் அவர்களுடன் இணைந்து அம்மாவை டம்மி பீஸ் ஆக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஜூலை-201310:58:51 IST Report Abuse
Pugazh V ஸ்டாலின் ஆவர்கள் எதிர்க் கட்சித் தலைவராக சபாநாயகரால் அறிவிக்கப்படும் நன்னாளை எதிர்பார்க்கலாம். இதுவரை விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கான எதையும் பயன்படுத்தவில்லை - சட்ட மன்றத்தில் வலுவான வாதங்களை முன் வைக்கவில்லை, பட்ஜெட் கூட்டத் தொடரில் முழுமையாக பங்கெடுக்கவில்லை. தொகுதி மேம்பாட்டிற்கான நிதியை பயன்படுத்தவில்லை. பொதுக் கூட்டங்கள் போட்டு, மக்களை சந்திக்கவில்லை. அப்புறம் இவருக்கெல்லாம் எதற்கு எம் எல் ஏ, எதிர்க் கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தும் பதவியும்? அந்த எம் எல் ஏக்கள் என்னடாவென்றால் தினம் தினம் இவரை அவமதிக்கும் விதத்தில் பேசி வருகிறார்கள். பாவம் விஜயகாந்த்.
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
10-ஜூலை-201310:58:05 IST Report Abuse
BLACK CAT ஏழு பேரும் MLA சீட் கிடைக்க தலா 75 லட்சம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா .....?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை