Vaiko asked financial help to run Thayagam | "தாயகம்' காக்க "யாசகம்' கேட்டு வைகோ கெஞ்சல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"தாயகம்' காக்க "யாசகம்' கேட்டு வைகோ கெஞ்சல்

Added : ஜூலை 09, 2013 | கருத்துகள் (97)
Advertisement

"கட்சி அலுவலகமான, தாயகத்தை நடத்த, நிதி வழங்குங்கள்' என, யாசகம் கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, ம.தி.மு.க.,வினரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


குற்றச்சாட்டு:

பேச்சாற்றலால், 20 ஆண்டு பார்லிமென்டில், தி.மு.க.,வின் முகமாக பிரதிபலித்து, தமிழகத்தில், தி.மு.க.,வின் அடுத்த தலைவர் என்ற இடத்துக்கு முன்னேறி, விடுதலை புலிகள் மூலம், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அகற்றிவிட்டு, தி.மு.க.,வை கைப்பற்ற திட்டமிட்டவர் என்ற குற்றச்சாட்டில், 1993, அக்., 3ல், தி.மு.க.,வில் இருந்து, வெளியேறியவர் வைகோ. "நாங்கள் தான் உண்மையான தி.மு.க.,' என, ஆதரவு திரட்டி, 1994 மே, 6ம் தேதி, ம.தி.மு.க.,வை, வைகோ துவக்கினார்.

கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, அ.தி.மு.க., கூட்டணியில், ஜெயலலிதாவுக்கு, நம்பிக்கையானவராக இருந்தார். தமிழ், ஈழத் தமிழர், தமிழர் விழா என, பல பெயர்களில், நடராஜனுடன், நெருக்கமாக, வலம் வந்ததால், "நடராஜனுடன் சேர்ந்து, அ.தி.மு.க.,வை, கைப்பற்றி விடுவார்' என, அ.தி.மு.க., தலைமையிடம், போட்ட தூபத்தால், சட்டசபை தேர்தல் கூட்டணி அமைத்த போது, சந்திக்க நேரம் கொடுக்காமல், கூட்டணியில் இருந்து, தூக்கி வீசப்பட்டார்.


மிச்சம் கொஞ்சம்:

வைகோவுடன் இருந்த, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், பொன் முத்து ராமலிங்கம், செல்வராஜ், நாஞ்சில் சம்பத் ஆகியோர் வெளியேறினர். தற்போது, விரல்விட்டு எண்ணும் சிலரே, உடன் உள்ளனர். தேர்தல் நேரத்தில் தான், அரசியல் கட்சிகள், நிதி திரட்டுவது வழக்கம். ஆனால், சமீபத்தில், வைகோ என, கையெழுத்திட்டு, அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், மிக உருக்கமாக, "வர இருக்கும், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கும், கழகத்தின் அன்றாட பணிகளுக்கும், தலைமை கழக அலுவலகமாம் தாயகத்தை இயக்குவதற்கும், பணம் தேவைப்படுகிறது. தங்களால் இயன்ற நிதியை, கனிவோடு தாரீர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ம.தி.மு.க.,வினரை, தள்ளாடச் செய்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
14-ஜூலை-201316:11:07 IST Report Abuse
p.saravanan தன்மானம் மிக்க தலைவா , எங்களது தகுதிகேட்ப ,எங்களால் முடிந்த உதவிகளை வழங்குகின்றோம் .
Rate this:
Share this comment
Cancel
Vasu Murari - Chennai ,இந்தியா
13-ஜூலை-201303:20:40 IST Report Abuse
Vasu Murari தாயகம் காப்பது கடமையடா.
Rate this:
Share this comment
Cancel
suresh - tenkasi,இந்தியா
11-ஜூலை-201312:32:55 IST Report Abuse
suresh தினமலர் நாளிதழ் மக்கள் தலைவர் வைகோ அவர்களை பழித்திட, மதிமுக தொண்டர்களை அவமானப்படுத்துவதாக நினைத்து ஒரு உண்மையை, உண்மையின் உரைகல்லாக நின்று நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது . மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்பதையும், மதிமுக என்கிற மகத்தான இயக்கத்தை தொழில் அதிபர்கள் தாங்கி நிற்க வில்லை அதன் மாசற்ற தொண்டர்களே மதிமுகவை தாங்கி நிற்கின்றனர் என்கிற உண்மையை உரைகல்லாக நின்று வெளியிட்டமைக்கு தினமலர் நாளிதழ் நிர்வாகத்திற்கு கோடி நன்றிகள்
Rate this:
Share this comment
Cancel
ponnambalam s - CHENNAI,இந்தியா
11-ஜூலை-201312:24:30 IST Report Abuse
ponnambalam s "வைகோ" என்கின்ற ஒரு தலைவன் இருப்பதாலேயே தமிழ் நாட்டின் குறைகள் & தமிழ் சமுதாயத்தின் பிரச்சனைகள், போராட்ட வடிவம் பெற்று, அவைகளுக்கு தீர்வும் கிடைக்கிறது. அதை புரிந்து கொள்ளுங்கள். "போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்........" வைகோ என்னும் ஒரு மாமனிதரை புரிந்து கொள்ளவிட்டால் நட்டம் தமிழ் சமுதாயதிர்க்கே ....... ஒரு நல்ல மக்கள் தலைவரான வைகோவை மக்களே மதியுங்கள்.......அரசியல் பச்சோந்திகள் & தமிழ் இன துரோகிகள் யார் என்றால், திமுக, அதிமுக & காங்கிரஸ் மட்டுமே. இரு பெரும் கட்சிகளின் ஆசை என்னவென்றால் வைகோவை இந்திய அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே...........அவர் எந்த தொழிலதிபர்களிடமோ அல்லது பண முதலைகளிடமோ சென்று யாசகம் கேட்பதில்லை..........அவர் கேட்பது "மக்களிடம்தான் " ........... அதை புரிந்துகொள்ளுங்கள்................ vin_jrs@yahoo.co.inவரையும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ பணம் பறிக்கவில்லை...........அவர் நினைத்து இருந்தால் எப்பொழுதோ சம்பாதித்து இருக்க முடியும்......... அதேபோல் எந்த ஒரு தொழிலதிபரோ அல்லது அரசியல் கட்சியினரோ வைகோவை அச்சுறுத்தி , மிரட்டி அடிபணிய வைக்க முடியவில்லை...........மொத்தத்தில் யாருக்கும் விலைபோகாத , கொண்ட கொள்கைள் மாறாத, "தன்னலம் கருதாத, தன்னிலை மாறாத ஒரே மக்கள் தலைவன் வைகோவே".............புரிந்துகொள்ளுங்கள் தினமலரே "தமிழ் நாட்டிற்கு ஒரு நல்ல தலைவன் தேவை".......வெற்றிடமே உள்ளது........அதை நிரப்பும் தகுதி வைகோவை தவிர தற்போதைய சூழலில் வேறு எவருக்கும் இல்லை........
Rate this:
Share this comment
Cancel
Karuppusamy Subbya - Chennai,இந்தியா
11-ஜூலை-201311:22:37 IST Report Abuse
Karuppusamy Subbya தமிழ் நாட்டுல இருக்குர அரசியல்வாதிகளில் வைகோ மட்டும் தான் நல்லவரா தெரியறார். மற்ற கட்சி அடி வருடிகள் எல்லாம் கோடி கோடிய கொண்டுவந்து கட்சி நிதியாக கொடுப்பது தினமலருக்கு தெரியலயா.
Rate this:
Share this comment
Cancel
uthaya. s - trichy,இந்தியா
11-ஜூலை-201308:31:51 IST Report Abuse
uthaya. s நேர்மையான மனிதர்களை அசிங்க படுத்தும் நோக்கில் செய்யபடும் செயல்கள் ஜீரணிக்க முடியாதவைகள். கடவுள் ஏன் இவர்களை தண்டிப்பது இல்லை என தெரிய வில்லை........ :(
Rate this:
Share this comment
Cancel
uthaya. s - trichy,இந்தியா
11-ஜூலை-201308:23:21 IST Report Abuse
uthaya. s ஜனநாயக முறையில் இயங்கும் கட்சி மக்களிடம் நிதி உதவி கேட்பதில் என்ன தவறு.. ஊழல் செய்து கொழுத்த கட்சிகளுக்கு பணம் தேவை இல்லை.. மக்கள் நலன் சார்ந்த வாழ்வாதார போராட்டங்களை கையில் எடுக்கும் மதிமுகவுக்கு மக்கள் நிதி உதவி அழிப்பது கடமை.. வைகோ-வின் வெளிப்படை தன்மைக்கு வாழ்த்துகள்......
Rate this:
Share this comment
Cancel
Thayagam Suresh - Umm al hasam,பஹ்ரைன்
11-ஜூலை-201303:50:14 IST Report Abuse
Thayagam Suresh 20 ஆண்டிற்கும் மேலான டெல்லி அரசியல் செய்ததில் குறைந்தது சில ஆயிரம் கோடிகள்..., ஸ்டெர்லைட் "வேதாந்தா" குழுமத்திடம் ஒரு ஆயிரம் கோடி.., சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வர போராடிய கையோடும் அங்கு மணல் அள்ளும் காண்ட்ராக்ட் எடுத்திருந்தால் சில நூறு கோடிகள்.., மத்திய அமைச்சரவையில் சேர்ந்திருந்து கொஞ்சம் ஊழல் செய்திருந்தால் சில ஆயிரம் கோடிகள்..., மதுவிலக்காவது மண்ணாவது என்று காணாமல் இருந்திருந்தால் "மல்லையா"க்களிடமிருந்து சில நூறு கோடிகள்...., முல்லை பெரியாறு காவிரி என நதி நீருக்காக "சும்மா" நாடக போராட்டம் போட்டு அந்தந்த மாநிலங்களில் அந்தந்த அரசுகளின் ஆசிர்வாதத்துடன் உள்ளடி கைகுலுக்கல் வைத்திருந்தால் அதில் சில ஆயிரம் கோடிகள்..., இனப்படுகொலையை எதிர்க்காமல் "உண்ணாவிரத" நாடகம் போட்டிருந்தால், ராசபக்சே_விற்கு அடிவருடி கொடுத்திருந்தால் ஒரு சில வியாபார "கோடிகள்"..., மேலே சொன்ன வகைகளில் பல்லாயிரம் கோடிகள் சேர்த்திருந்தால் "தினமலம்" வைகோ_வை புகழ்ந்திருக்கும்...., ஆனால் நேர்மையாய் வாழ்வதென்பது "தாயின் கருவறைக்குள்" வாழ்வதற்க்கு சமம்.., ஊரை அடித்து உலையில் போட்டு நம்பிய மக்களை ஏமாற்றி ஏய்த்து வாழ்வதென்பது "தன் மனைவியை, சகோதரியை, தான் பெற்ற மகளை கூட்டி கொடுத்து வாழ்வதற்கு சமம்"..., ஆம் எங்கள் தலைவன் வைகோ அரசியலை தன் தாயின் "கருவறை" போல் பரிசுத்தமாக நினைக்கிறார்..., ஆனால் இங்கே பல ஊழல் வேடதாரிகள் "கூட்டி கொடுத்து, காட்டி கொடுத்து" வாழ்கின்றன..., "தினமலம்" எப்போதுமே நேர்மையாளர்களை மதிப்பதில்லை மாறாக ஏளனப்படுத்தும்..., ஆனால் "கூட்டி கொடுத்து, காட்டி கொடுத்து" வாழ்பவனை தலையில் வைத்து கொண்டாடும்..., உன் தூற்றுதல் ஒரு போதும் எங்களை தாழ்த்திடாது, அதே போல் உன் வாழ்த்துக்களும் எங்களுக்கு வேண்டாம் .., காரணம் உன் நிறம் மாறினாலும், நாற்றம் கூடினாலும் குறைந்தாலும் "மலம்" என்றுமே "மலமே"....,
Rate this:
Share this comment
maravan - dublin,அயர்லாந்து
11-ஜூலை-201316:53:20 IST Report Abuse
maravanதாயகம் சுரேஷ் , உங்கள் கருத்துகள் உங்களின் கோபத்தை வெளிகாட்டுகிறது... வைகோ போன்ற சிறந்த தலைவன் நாடாள இந்த மக்கள் கொடுத்துவைக்க வில்லை..அது வைகோவின் தவறு அல்ல. நம் மக்களின் தவறு......
Rate this:
Share this comment
Cancel
Gauthaman Karunakaran - Abha,லிபியா
11-ஜூலை-201302:45:09 IST Report Abuse
Gauthaman Karunakaran this another dram from Mr Vaiko. only speech no action. then finally this is his status. he cheated the young generation of TN.
Rate this:
Share this comment
Cancel
ethirajulu krishnan - neyveli,இந்தியா
11-ஜூலை-201300:28:06 IST Report Abuse
ethirajulu krishnan அன்று ராஜீவ்காந்தி முதல் இன்று சோனியாகாந்தி வரை ஈழ விஷயத்திலும் சரி,மக்கள் விஷயத்திலும் யாரிடமும் சமரசம் செய்துகொள்ளாதவர்,அதனால் மத்திய அரசின் திட்டங்களில் பங்கு இல்லை. ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலைகள் தரும் பணத்தை வாங்கிக்கொண்டு மக்கள் விரோத செயல்களை ஆதரிக்காதவர்,அதனால் அவருக்கு பணமுதலைகளால் சட்ட விரோதமாக பணமும் கிடைப்பதில்லை. டாஸ்மாக் ஏலத்திலும்,ஐந்து,பத்து கூட வைத்து விற்கப்படும் சரக்கு பாட்டில்களிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவருக்கு பங்கும் இல்லை.அதனால் அவருக்கு குடி கெடுக்கும் குடியிலும் லாபம் இல்லை. அவர் - வைகோ. அவர் நம்புவர்களிடமும் அவரை நம்புவர்களிடமும் உரிமையுடன் கேட்கும் பணம் எனக்கு யாசகமாக தெரியவில்லை.நானும் உரிமையுடன் அனுப்பப்போகிறேன்.விருப்பமுள்ளவர்கள் அனுப்புங்கள்,விருப்பம் இல்லாதவர்கள் விமர்சிக்காதீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை