Advertisement
"அடுத்த ஜென்மத்தில் ஒரே ஜாதியில் பிறக்க ஆசை': பரபரப்பை ஏற்படுத்திய இளவரசனின் கடைசி கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

11 ஜூலை
2013
01:24
பதிவு செய்த நாள்
ஜூலை 09,2013 23:20

தர்மபுரி: இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தன் பெற்றோர், திவ்யா, அண்ணன் பாலாஜி ஆகியோருக்கு எழுதிய, நான்கு பக்க கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "அடுத்த ஜென்மத்தில், ஒரே ஜாதியில் பிறந்து திருமணம் செய்து கொள்ள ஆசை' என, அதில், குறிப்பிட்டுள்ளார்.


தற்கொலைக்கு முன், இளவரசன் எழுதிய நான்கு பக்க கடிதத்தை, போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தை எடுத்தது யார் என்ற சர்ச்சை, ஒரு பக்கம் இருக்க, இளவரசன் கடைசி கடிதமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், திவ்யாவுக்கு உருக்கமாக எழுதியுள்ளார்.

அதில் எழுதப்பட்டுள்ளதாவது: என் அன்பு காதலி திவ்யாவுக்கு, நீ என்னுடன் இருந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. நீ என்னை விட்டு பிரிந்த நாளில் இருந்து, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் எனக்கு, உன்னை ரொம்ப பிடிக்கும். ஜூலை, 1ம் தேதி, நீ மீண்டும் வருவாய், நாம் சேர்ந்து வாழ்வோம் என, நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஒரு வேளை நீ என்னுடன் வரவில்லை என்றால், கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன். நீ ஏற்கனவே, உன் அப்பா இறந்ததற்கு காரணம், நீ தான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய், என் அப்பா உண்மையாகவே என் மீது பாசம் வைத்திருந்தால், என் மீது கொலை பழியை போட்டு விட்டு, என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார்.

வாழ முடியவில்லை:

அது போலவே, நீ என்னிடம் கேட்பாய் என்பது எனக்கு தெரியும். ஆனால், உண்மையாகவே என்னால், உன்னை விட்டு வாழ முடியவில்லை. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன். என் கூட ஏன் வாழ வரமாட்டேங்கிற, கண்டிப்பா எனக்கு தெரியல. நாம இரண்டு பேரும், எவ்வளவு கஷ்டத்துக்கு மேல ஒன்று சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும். எனக்கு ரெம்ப ஆசை திவ்யா, நாம இரண்டு பேரும் நல்லா வாழ வேண்டும்னு. நம்மள கேவலமா பார்த்தவங்க முன்னாடி, பொறமைப்படும் அளவுக்கு உன்ன அழகா கண் கலங்காம வச்சுக்கனும்னு எனக்கு ரெம்ப ஆசை. உனக்கு ஒன்று தெரியுமா, நீ என்னோட எல்லா விஷயங்களிலும் சேர்ந்திருக்க. ஆனா, இப்போ எதிலும் எங்கூட இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்குடா. ப்ளீஸ் திவ்யா என்ன வெறுக்காத... எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். தயவு செய்து என்னை மன்னித்து விடு. நீ என்னிடம் கேட்கலாம்; உண்மையாகவே நீ என் மேல் பாசம் வைத்தவனாக இருந்தால், ஏன் நீ என்னை விட்டு போகனும்னு... கண்டிப்பா சொல்றேன் நான் உன்ன விட்டு போகனும்னு நெனக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழனும்னு ரொம்ப ஆசை. ஆனால், என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா. என்னை மன்னிச்சுடு. நான் இந்த உலகத்தை விட்டு போறேன். இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும், நானும், ஒரே ஜாதியில் பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா. ஐ லவ்யூ சோ மச் பேபி... ஐ லவ் சோ மச்...! இவ்வாறு, எழுதப்பட்டுள்ளது.


குழந்தையாக பிறக்க வேண்டும்:

தந்தைக்கு எழுதிய கடிதத்தில் உள்ளதாவது: என் பாசத்துக்குரிய அப்பாவிற்கு, என்னை மன்னிச்சுடுங்க அப்பா. அம்மாவையும், பாலாஜி, அக்கா எல்லோரையும் பார்த்துகோங்க, தயவு செஞ்சி அம்மாவை கஷ்டப்படுத்தாதீங்கப்பா. என் நேசமிகு அம்மாவுக்கு, அம்மா என்னை மன்னிச்சுடு; உன்னை நல்லா வச்சு பார்க்கனும்னு ஆசை. நீயும், அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்னை வளர்த்து படிக்க வைக்க. ஆனால், என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தா, நீயும் அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கணும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் தீர்க்கணும்.

இறப்புக்கு யாரும் காரணம் இல்லை:

என்னோட பெஸ்ட் பிரண்ட் என் அண்ணன் பாலாஜிக்கு... என்னை மன்னிச்சுடு பாலா... நீ எனக்கு எவ்வளவோ சொன்ன, தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனால், என்னால முடியல பாலா. "ஐ யாம் ரியலி ஷோ சாரி' பாலா. என்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது, என் சுயமான முடிவாகும். என்னுடைய கடைசி ஆசை. நான் இறந்த பின், என்னை பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது; அப்படி ஒரு வேளை திவ்யா வந்தால், யாரும் அவளை திட்ட வேண்டாம்; அவளை அனுமதிக்க வேண்டும். ப்ளீஸ், அவளை யாரும் கோபமாக பேச வேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். என்னால் அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல, அவளாவது வாழ்க்கைல சந்தோஷமா இருக்கட்டும். இவ்வாறு, எழுதப்பட்டுள்ளது.


ஜூலை 1ல் எழுதப்பட்ட கடிதம்:

இந்த கடிதம் ஜூலை, 1ம் தேதி முதல், எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது. கடிதத்தின் இறுதியில் கையெழுத்து இல்லாமல் உள்ளது. இந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து இளவரசனுக்குரியதா என்பது குறித்து, போலீசார் இளவரசனின் பெற்றோரிடம் காட்டி உறுதி செய்துள்ளனர். அதே நேரம், இளவரசனின் தந்தை பத்திரிகை நிருபர்களிடம், "அது இளவரசன் கையெழுத்து இல்லை' என, கூறியுள்ளார். போலீசார் இந்த கடிதத்தை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இளவரசன் எழுதிய இந்த கடிதத்தை மர்ம நபர் எடுத்து சென்றுள்ளார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றுவதற்கு முன், ஜெராக்ஸ் போட்டு வைத்திருந்ததாகவும், அதன் நகல்கள் பத்திரிகை நிருபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த கடிதம் வெளியாகி இருப்பது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, இந்த கடிதம் குறித்து, போலீசாரிடம் உறுதி செய்ய முயன்ற போது, எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்ததோடு, அந்த கடிதத்தை நாங்கள் வெளியிடவில்லை என, கூறினர்.


சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிக்கை:

"இளவரசன் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள், சந்தேகங்கள் உள்ளதால், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, உள்துறை செயலருக்கு, இளங்கோ, மனு அனுப்பி உள்ளார்.


அவரது மனுவில், கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி, மர்ம முறையில் இறந்த, என் மகன், இளவரசனின் மரணம் படுகொலையாக இருப்பதற்கான ஆதரங்களும், சாட்சியங்களும் இருப்பதாக தெரிவித்திருந்தேன். இளவரசனுக்கு, தற்கொலை செய்யும் மனநிலை கிடையாது. அவர், ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு வேலைக்கு செல்லவும், படிப்பை தொடரவும் முடிவு செய்திருந்தார். சித்தூருக்கு செல்ல, தயார் படுத்திக்கொண்டிருந்தார். அதை நிரூபிக்கும் விதமாக, என் உறவினர் மகன் அறிவழகனின் சாட்சியம் உள்ளது. சித்தூருக்கு அறிவழகனையும், இளவரசன் துணைக்கு அழைத்துள்ளார். முதலில் மறுத்த அவர், பின்னர் சம்மதித்துள்ளார். அதன் பின், இளவரசன் இறந்துள்ளார். அவர் இறந்து கிடந்த இடத்துக்கு அருகே, வீடுகள் உள்ளன.

இளைஞரிடம் தகராறு:

அங்கே உள்ளவர்கள், இளவரசன் மரணம் நிகழ்ந்த நேரத்தில், மூன்று இளைஞர்கள், ஒரு இளைஞரிடம் தகராறு செய்ததாகவும், பின் ஒரு பெரிய அலறல் சத்தம் கேட்டதாகவும் சொல்கின்றனர். அதை தீவிரமாக விசாரித்தால், உண்மை வெளிப்படும். இளவரசனின் சட்டை பையில் இருந்து, எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் கடிதம், பல சந்தேகங்கள் எழுகிறது. அந்த கடிதம், யாரால் கைப்பற்றப்பட்டது. அதை வேறு நபர்கள் எடுத்த போது, யாரும் பார்க்கவில்லையா, என்ற கேள்வி எழுகிறது. அக்கடிதம், இளவரசனால் எழுதப்பட்டதா? கடிதம் எழுதப்பட்ட காலம், எழுத்து ஒன்றுக்கொன்று மாறுபட்டுள்ளது. கடிதத்தில் இளவரசனின் கைரேகைகள் பதிந்துள்ளதா என்ற கேள்வியும் உள்ளது. இளவரசனை கொலை செய்தவர்களே, வழக்கை திசை திருப்ப, கொலை செய்த பின், கடிதத்தை வைத்து சென்றனரா என்ற சந்தேகம் உள்ளது. என் மகன் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்களும், சந்தர்ப்ப சூழல்களும் உள்ளதால், நியாயமான விசாரணை நடக்க, இவ்வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


கடிதத்தை எடுத்தவர் மீது நடவடிக்கை:

இளவரசன் கடைசியாக எழுதிய கடிதத்தை எடுத்து சென்றவரை, போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர். அதே நேரம், கடிதத்தை மறைத்தவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், இதில் தொடர்புடையோர் பீதியடைந்துள்ளனர்.

இளவரசனின் இறப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், 7ம் தேதி இரவு, இளவரசன் கடைசியாக எழுதிய, நான்கு பக்க கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம் இளவரசனின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து, 4ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது; கடிதத்தை எடுத்தவர், மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளார். இளவரசனின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்த கடிதம் குறித்து, இளவரசனின் உறவினர்கள் மற்றும் சில அரசியல் கட்சியினருக்கும் தெரிந்துள்ளது. ஆனால், இதை போலீசாருக்கு, தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். இளவரசன் இறந்து கிடந்த அன்று, இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியிருந்தால், இளவரசன் தற்கொலை உறுதி செய்யப்பட்டிருக்கும். கடிதத்தை எடுத்தவர், இந்த வழக்கின் போக்கை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்தாரா என்ற சந்தேகம், போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. கடிதத்தை எடுத்தவர், தற்போது, போலீசாரின் கஸ்டடியில் இருப்பதாக கூறப்பட்டாலும், யார் எடுத்தார் என்ற தகவலை, போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். போலீசார், தற்போதைக்கு, இளவரசனின் இறுதி சடங்கு முடித்து, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வேண்டும். அதன் பின், கடிதம் குறித்த விசாரணையை முடுக்கி விட்டு, இதில், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க காத்திருக்கின்றனர். கடிதத்துக்கு பின், இளவரசனின் உறவினர்கள் உள்ளிட்டோர், எந்த சர்ச்சையும் கிளப்பாமல் உள்ளனர். மருத்துவமனையிலும் கூட்டம் சேருவது குறைந்துள்ளது. இந்த வழக்கில், இளவரசனின் கடிதம் மூலம், தற்கொலை உறுதி செய்யப்பட்ட போதும், தொடர்ந்து, இளவரசனின் தந்தை இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் சிலர், இளவரசன் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி வருகின்றனர். கடிதம் எடுக்கப்பட்டது, மறைக்கப்பட்டதில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், கடிதம் எடுத்தவரின் மொபைல் போன் மூலம், யாருக்கு எல்லாம் போன் செய்யப்பட்டுள்ளது, அந்த எண்களில் இருந்து யாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை, போலீசார் சேகரித்துள்ளனர். போலீசாரின் மறைமுக நடவடிக்கை அறிந்த சிலர், தற்போதே பீதியடைந்திருப்பதோடு, இளவரசனின் இறுதிச் சடங்கிற்கு பின், அவர்கள் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது. தற்போது, மாவட்டம் முழுவதும் அமைதியாக இருந்த போதும், கிராம பகுதி முதல், நகரப் பகுதி வரை, தொடர்ந்து போலீசார், பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும், 16 செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, நேற்று முதல், வெளி மாநில, மாவட்ட வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பின், அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பாக, சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் யாராவது மாவட்டத்துக்குள் செல்கின்றனரா என்பது குறித்து, மாவட்ட எல்லைகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதி, திருமண மண்டபம் உள்ளிட்டவைகளில் தங்குவோர் குறித்த, விவரங்களையும் போலீசார், சில நாட்களாக கண்காணித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (103)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hameed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூலை-201317:01:14 IST Report Abuse
hameed இளவரசன் – திவ்யா திருமணம். தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பா.ம.க வன்னிய ஜாதி வெறியர்களின் தாக்குதல். அதே கும்பல் மற்றும் நீதிமன்றம், ஊடகங்கள் இளவரசனிடமிருந்து திவ்யாவை திட்டமிட்டு பிரித்தனர். அதன் தொடர்ச்சியாக இளவரசனின் மரணம். இவ்வளவு நடந்த பிறகும்கூட இதை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னிய ஜாதி வெறியர்களின் தாக்குதலாக கண்டிக்காமல், ‘இது காதலுக்கு ஏற்பட்ட பின்னடைவு’. ‘ஜாதி காதலர்களை பிரித்துவிட்டது’ ‘காதலர்கள் நிம்மதியாகவே வாழ முடியாதா?’ ‘‘திவ்யா இனி என்ன செய்யப் போகிறார்?’ ‘உன்னத காதலின் முடிவு’ என்று சோக ரசம் சொட்டும் சுவாரஸ்யமான காதல் கதையாகவும், இளவரசனின் கடிதத்தை வைத்துக்கொண்டு, ‘திவ்யா உனக்கு ஒண்ணு தெரியுமா? நீ என்னோட எல்லா விஷயத்திலும் சேர்ந்திருந்த ஆனா இப்போ நீ என் கூட இல்ல… ரொம்ப கஷ்டமா இருக்குடா… என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா என்னை மன்னிச்சிடு …’ என்று இளவரசனின் மரணத்தை வெறும் காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையாக திசை திருப்புகிற தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளும், அந்த பத்திரிகையின் செய்தியையே தன் செய்தியாக இணையத்தில் பரப்பி, பத்திரிகை நிர்வாகத்திடம் நல்ல பெயர் பெறத் துடிக்கிற பத்திரிகையாளர்களும்.. ச்சீ என்ன பிழைப்பு இது? இதை விட மோசமாக, ‘பிராமணர்கள் சிறப்பானவர்கள், இந்து மதம் சிறப்பானது, பகவத் கீதை கருத்தே ஜாதி ஒழிக்க வழி, இது மனுவோ மனுவாதிகளோ (பார்ப்பனர்கள்) செய்த தப்பல்ல. பிராமண ஆழ்வார்களும், நாயன்மார்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சேவை செய்தவர்கள்’ என்று எழுதி, ஜூனியர் விகடனில் இன்னும் தொடர்ந்து எழுதுவதற்கு இளவரசன் பிணத்தின் மூலமாக ‘சீட்’ பிடித்து வைக்கும் தமிழருவி மணியன் போன்றவர்களின் இழிவான செயல், இவர்களையெல்லாம் பார்க்கும்போது, பா.ம.க.வும், காடுவெட்டி குருவுமே பரவாயில்லை என்று தோன்றுகிறது. ‘உத்தர்காண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம்’ என்ற பெயரில் அங்குள்ள பிணங்களிலிருந்த உடமைகளை கொள்ளையடித்தவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை, வெறும் காதல் பிரச்சினையாக சுருக்கி பிணத்தை வைத்து கல்லா கட்டும் இந்த ஊடகங்களுக்கும், அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?
Rate this:
7 members
0 members
8 members
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
11-ஜூலை-201303:04:05 IST Report Abuse
vidhuran ஜாதியின் கோரத்தை உணராமல் தான், இந்தக் காதலும் கல்யாணமும் நடந்தேறியிருக்கிறது. காமம், குறைந்த வயது என்று இங்கே பிதற்றுவபவர்கள் முதல், பிணமாகி தனி சுடுகாட்டுக்குப் போகிறவர்கள் வரை அனைவருமே ஜாதி வெறி பிடித்து அலைபவர்கள் தான். அநாகரீகமான இந்த மனித சமுதாயத்திற்கு, மொத்தமாக Blood Transplanatation செய்தாலும், Blood Sterm cell மூலமாக இந்த ஜாதி HIV பரவி விடும்.
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
11-ஜூலை-201300:33:49 IST Report Abuse
Vaduvooraan இதைப் பற்றி கோபாலபுரம் தவிர பெரியார் பாசறையை சார்ந்த வீரமணி, சுபவீ, கமல ஹாசன் என்ன கருத்து சொல்லப் போகிறார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன் அரசியல் பலம் பொருந்திய இரண்டு சாதியினர் மோதும்போது மட்டும் வாயடைத்துப் போய் விடுகிறார்களே, அது ஏன் என்று யாராவது சொன்னால் தேவலாம்
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
Ravi Ramanujam - thanjavur,இந்தியா
10-ஜூலை-201319:47:52 IST Report Abuse
Ravi Ramanujam இந்த ஜாதி கட்சிகளை தடை செய்தால் போதும் எல்லாம் சரியாகி விடும். திரு. தமிழருவி மணியன் இந்த வாரம் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையை படியுங்கள். மக்களின் மூடத்தனத்தை தெளிவாக எடுத்துரைத்து உள்ளார்.
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
10-ஜூலை-201319:15:23 IST Report Abuse
மும்பை தமிழன் செத்தாலும் பரவா இல்லை நமக்கு ஜாதி தான் முக்கியம்
Rate this:
0 members
1 members
7 members
Share this comment
Cancel
M.Balakrishnan - Chennai,இந்தியா
10-ஜூலை-201317:56:07 IST Report Abuse
M.Balakrishnan செத்தும் கெடுத்தான் சீதகாதி என்று சொல்வார்களே, அது இதுதானோ
Rate this:
41 members
0 members
15 members
Share this comment
Indian - Chennai,இந்தியா
10-ஜூலை-201321:32:21 IST Report Abuse
Indianபலா அது செத்தும் கெடுத்தான் அல்ல. செத்தும் கொடுத்தான் சீதக்காதி . வரலாறு தெரியாமல் எதையாவது பதிவு செய்யாதீர்கள் ....
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel
Rangan Rajalakshmanan - Bangalore,இந்தியா
10-ஜூலை-201317:38:01 IST Report Abuse
Rangan Rajalakshmanan இது காதலின் அவல நிகழ்வு அல்ல... இவர்கள் நேரம் சுயநலம் பிடித்த அரசியலாக்கும், அறிவற்ற சாதி வெறிக்கும் இவர்கள் பலி கடா ஏத்தனையோ காதல் திருமணம் நடந்து வருகிற நிலையில், இவர்கள் சுற்றத்தால் வந்த வினை,, இனி ஏனும் அந்த பகுதி மக்களுக்கு அறிவு வருமா, காதல் வேண்டும்.. வேண்டாம் என்கிற ஏதோ ஒரு நிலைக்கு??
Rate this:
2 members
0 members
19 members
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
10-ஜூலை-201316:47:47 IST Report Abuse
sitaramenv தற்கொலை என்றால்......கண்டனம் செய்யப்பட வேண்டியது இளவரசன்தான். வளர்த்த பெற்றோரை விட, உடம்பை காட்டி உணர்ச்சி தூண்டும் பெண் ஒருத்தி பெரியதாக பொய் விட்டதா.......சினிமா டி.வி. கலாசாரத்தின் விளைவு இது......தற்கொலை இல்லை என்றால்......கண்டிப்பாக சமூகத்தில் ஜாதி விட்டு ஜாதி போய் காதலிக்கும் நிலை சமூகத்தில் குடும்பங்களில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அனைத்து இளையதலைமுறையும் உணரும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும்.
Rate this:
48 members
0 members
35 members
Share this comment
Cancel
kumaresan p - Coimbatore,இந்தியா
10-ஜூலை-201316:34:05 IST Report Abuse
kumaresan p அடுத்த பிறவில் ஆவது ஜாதி இல்லாத உலகத்தில் பிறந்து விடு...
Rate this:
5 members
0 members
22 members
Share this comment
Cancel
Kathir - Kuwait,குவைத்
10-ஜூலை-201316:30:34 IST Report Abuse
Kathir இன்று இந்த பையன் மறைவுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கும் நண்பர்களே அன்று திவ்யாவின் தந்தை இறந்தபொழுது ஏன் நீங்கள் வாய் மூடியிருந்தீர்கள்? கேட்டால் அவர் ஜாதிவெறி பிடித்தவர் என்று கூறுவீர்கள், 1 கேள்வி உங்கள் வீட்டு பெண், பள்ளியை அல்லது கல்லூரியை விட்டு திருபி வராமல் யாருடனோ ஓடி திருமணம் செய்துகொண்டால் நீங்கள் சந்தோசமாக இருப்பீர்களா? அதுவும் திருமண வயதை எட்டாத ஒருவனுடன்? இதனை கேட்டால் ஜாதி வெறி? நீங்கள் ஜாதிவெறி பிடிகாதவராகவே இருங்கள். உங்கள் தங்கையோ, மகளோ இந்த மாதிரி படித்துகொண்டிருக்கும் பொழுது தன்னை கவனித்துகொள்ளவே தன் பெற்றோர்களை நம்பியுள்ள ஒருவனுடன் ஓடியிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள்? அப்புறம் அந்த பெண்ணின் மனநிலையில் சட்ட்று சிந்தித்து பாருங்கள் தன் அப்பாவை இழந்த துக்கத்தில் அவள் தன் அம்மாவுடன் சென்று விட்டால் அதில் என்ன தவறு இருகின்றது, உண்மையிலேயே இந்த பையனுக்கு அவன் காதலி மீதும் அவன் காதல் மீதும் நம்பிக்கை இருந்திருந்தால் இருந்து போராடி இருக்கவேண்டும் இப்போது இழப்பு அவனுக்கு இல்லை, அந்த கோழையை காதலித்து திருமணம் செய்துகொண்ட அந்த பெண்ணிற்கே, மற்றும் நண்பர்களே இன்னமும் 1 கேள்வி ஜாதி வெறி ஜாதி வெறி அப்படின்னு எல்லோரும் சொல்லுறீங்களே ஜாதி சான்றிதழ் கேட்டு வரிசையில் நீங்கள் இல்லையா? இல்லை எங்கள் ஜாதிக்கு இத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என்று நீங்கள் யாரும் கேட்கவில்லையா? இல்லை இந்த தொகுதி எங்கள் ஜாதிக்கு தனி இடம் நீங்கள் கேட்கவில்லையா? யார் ஜாதி வெறி பிடித்தவர்கள்? இன்னும் 1 கேள்வி, உங்கள் veetil ஒரு பிள்ளை பள்ளியில் irundhu வீட்டுக்கு வராமல் யாருடனோ ஓடி விட்டால் ஏன் உங்கள் ஜாதி வெறி பிடிக்காதவர்கள் யாருடனோ ஓடிவிட்டாள், நீங்கள் கோபப்படாமல் சந்தோச படுவீர்களா? இதில் அரசியல் கிடையாது திருவாளர்கள் அவர்களே, இப்ப்பொழுது தான் இதனை அரசியல் ஆக்கிவிட்டார்கள், ஆனால் இதைவிட கேவலமான நிலமை தான் இன்னமும் நிகழ்ந்துகொண்டிருகின்றது,
Rate this:
137 members
3 members
182 members
Share this comment
Mohandhas - singapore,சிங்கப்பூர்
10-ஜூலை-201318:45:37 IST Report Abuse
Mohandhasஇதை சொன்னால் நீயெல்லாம் மனிதனா என்று ஒரு சிலர் ஏளனம் செய்வார்கள் ......
Rate this:
4 members
0 members
27 members
Share this comment
Rangan Rajalakshmanan - Bangalore,இந்தியா
10-ஜூலை-201318:57:17 IST Report Abuse
Rangan Rajalakshmananமன்னிக்கவும்.. வெளி நாட்டில் இருந்து கொண்டு.. இங்கு நடந்ததை அருகில் இருந்து பார்த்தது போல.. நீங்கள் நியாய படுத்துவது மட்டும் சரியா... இதில் அரசியலே இல்லைன்னு ரொம்ப சாதரணம சொல்றிங்களே..??...
Rate this:
5 members
0 members
2 members
Share this comment
Periya-Rasu - Baton Rouge,யூ.எஸ்.ஏ
10-ஜூலை-201319:45:25 IST Report Abuse
Periya-Rasuகதிர் அருமையான கருத்து நண்பா...
Rate this:
2 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.