Government failed to tackle terrorism: Rajnath singh | "பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது': பா.ஜ., விமர்சனம்| Dinamalar

"பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது': பா.ஜ., விமர்சனம்

Added : ஜூலை 09, 2013 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Government failed to tackle terrorism: Rajnath singh

புத்த கயா: "பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில், காங்., தலைமையிலான, மத்திய அரசு, ஒட்டு மொத்தமாக தோல்வி அடைந்து விட்டது. ஓட்டு வங்கி அரசியலுக்காக, உள்நாட்டு பாதுகாப்பை விட்டு கொடுப்பதன் காரணமாகவே, புத்த கயா போன்ற இடங்களில் தாக்குதல்கள் நடக்கின்றன' என, மத்திய அரசை, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.


மகாபோதி கோவில்:

பீகார் மாநிலம், புத்த கயாவில், வரலாற்று பிரசித்தி பெற்ற, மகாபோதி கோவில் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், இங்கு, தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில், இரண்டு புத்த துறவிகள் காயடைந்தனர். இது குறித்து, தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது. விசாரணையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர்கள், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர், நேற்று, புத்த கயாவுக்கு வந்து, குண்டு வெடித்த இடங்களை பார்வையிட்டனர்.

இதன்பின், செய்தியாளர்களிடம், அவர்கள் கூறியதாவது: காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஓட்டு வங்கி அரசியலுக்காக, உள்நாட்டு பாதுகாப்பை விட்டு கொடுக்கிறது. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில், ஒட்டு மொத்தமாக, தோல்வி அடைந்து விட்டது. இதன் காரணமாகவே, புத்தகயா போன்ற இடங்களில், வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதில், விசாரணை அமைப்புகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே, ஒருங்கிணைப்பு தேவை. சி.பி.ஐ., அமைப்பை, மத்திய அரசு, தன் சுய லாபத்துக்காக பயன்படுத்துகிறது. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக, சி.பி.ஐ.,யை பயன்படுத்துகிறது. இதுபோன்ற காரணங்களால், சி.பி.ஐ.,க்கும், உளவு அமைப்புகளுக்கும் இடையே, ஒரு சில பிரச்னைகளில், கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும். புத்த கயா தாக்குதல், உள்நாட்டில் ரகசியமாக செயல்படும் பயங்கரவாதிகளின் கைவரிசையாகவும் இருக்கலாம். இதை, மறுப்பதற்கு இல்லை. லஷ்கர் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள், தியாகிகளைப் போல் சித்தரிக்கின்றனர்.


நக்சல் பிரச்னை:

மாநில அரசுகளால் மட்டுமே, பயங்கவாதம், நக்சலைட் பிரச்னையை கட்டுப்படுத்த முடியாது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல் பட்டால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். புத்த கயாவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் ஆகியோர் வராதது குறித்து, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க, பா.ஜ., தயாராக உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


சி.ஆர்.பி.எப்., வசம் மகாபோதி கோவில்:

குண்டு வெடிப்பை தொடர்ந்து, மகாபோதி கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பது குறித்து, கோவில் மேலாண்மை குழு, நேற்று ஆலோசனை நடத்தியது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் (சி.ஆர்.பி.எப்.,) மற்றும் பீகார் மிலிட்டரி போலீஸ் வசம், கோவிலின் பாதுகாப்பு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. கோவிலுக்கு வரும் அனைவரும், முறையான சோதனைக்கு பின்பே, அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே, குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, பினோத் குமாரிடம், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jawahar - Erode,இந்தியா
10-ஜூலை-201310:10:52 IST Report Abuse
Jawahar அதில் மட்டுமா? எல்லாவற்றிலும் இந்த காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
akim - covai  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூலை-201309:21:18 IST Report Abuse
akim பயங்கரவாதம் உருவாவதே இவுங்க ஆட்சியில் தான்
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
10-ஜூலை-201306:36:51 IST Report Abuse
Thangairaja முற்றிலும் சரியான குற்றச்சாட்டு. வோட்டு வங்கி பாதிக்கப்படும் என்பதால் அடையாளம் தெரிந்தும் உண்மையான குற்றவாளிகளை வெளியே சுதந்திரமாக உலவ விட்டிருப்பது காங்கிரஸ் அரசின் கையாலாத்தனம், மட்டுமல்ல.....தேச ஒற்றுமைக்கும் வேட்டு வைக்க கூடியதாகும். தங்கள் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி இருந்தால் தான் அம்மாநிலத்தில் அமைதி நிலவ விடுவோம் இல்லையேல் பாடம் புகட்டுவோம் என்று சூளுரைத்து செயல்படுவோர் மீது இந்த அரசாங்கத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை, ஏனென்றும் கேட்க முடியவில்லை....பிறகு எப்படி நாட்டில் தீவிரவாதம் கட்டுப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
10-ஜூலை-201306:17:14 IST Report Abuse
Samy Chinnathambi இங்கே சில பேர்கள் பிஜேபி தான் குண்டு வைக்கின்றனர் தேர்தல் ஆதாயத்திற்காக என்று பேசி வருகின்றனர். இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் எப்பாடு பட்டாவது ஜெயிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. அவர்கள் ஊழலில் திளைத்து மக்களிடத்தில் வெறுக்க படும் கட்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன க்ளூ கிடைத்தால் கூட பிஜேபியினை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். எனவே இந்த குண்டு வெடிப்புகளுக்கு பிஜேபி தான் காரணம் என்று அர்த்தமற்று கூறுவதை நிறுத்துங்கள்...உண்மையிலேயே அவர்கள் செய்து இருந்தால் இந்நேரம் மாட்டி இருப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
amjad - Trichy,இந்தியா
10-ஜூலை-201305:10:04 IST Report Abuse
amjad நிதிஷ் குமாரை சிருபான்மையினர் மெச்சிக்கொண்டு தானே இருக்கிறார்கள் அவர் பேர் கெடும்படி ஏன் செய்யவேண்டும் இந்த தேர்தல் நேரத்தில்... கூலீப்படை பணம் கொடுத்து வாங்குபவர் யார்? சிந்திக்க வேண்டிய செயல்
Rate this:
Share this comment
Cancel
amjad - Trichy,இந்தியா
10-ஜூலை-201305:02:27 IST Report Abuse
amjad திடீரென்று தேர்தல் நேரத்தில் எதுக்கு சம்பந்தம் இல்லாமல் குண்டு வெடிப்பார்கள்? புரியவில்லையே... ஜான் சவுதி அரேபியா
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
10-ஜூலை-201301:12:14 IST Report Abuse
தமிழ் சிங்கம் மதகலவரத்தை விட பயங்கரவாதம் எவ்வளோ தேவலை. பிஜேபி ஆட்சியில் மதகலவரம் வெடிக்கும். அதைவிட காங்கிரஸ் ஆட்சி பரவாஇல்லை. மதகலவரம் கடந்த பத்து ஆண்டுகளாக இல்லை.
Rate this:
Share this comment
mangai - Chennai,இந்தியா
10-ஜூலை-201307:19:29 IST Report Abuse
mangaiஆமா தீவிரவாதிகள ஊட்டி வளர்க்கும் போதும், பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் போதும் எப்படி மதக்கலவரம் வரும்.?? அதவிட எல்லாரும் முஸ்லிமா மாறிட்டா மதகலவரமே வராது....
Rate this:
Share this comment
balajiu - Chennai,இந்தியா
10-ஜூலை-201317:54:54 IST Report Abuse
balajiuவடகிழக்கு(காங்கிரஸ் ஆளும்) மாநிலங்களில் நடந்தவை என்ன மதகலவரம் அல்லாமல் என்ன குடும்ப சண்டைகளா? பிஜெபி ஆட்சிகாலத்தில் இறந்தவர்களை விட காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மதகலவரங்கலில் இறந்தவர்கள் அதிகம்.. குஜராத் கலவரத்தில் இறந்தவர்களை பற்றி வாய் கிழிய பேசும் மதசார்பற்றவர்கள் சீக்கியர்கள் பற்றியும் காஷ்மீர் பண்டிட்களை பேச மறுப்பதேன்? அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் ஒட்டு கிடைக்காது என்பதாலா? இந்துக்கள் சிருபன்மயினரானால் தெரியும் மதசார்பின்மை என்றால் என்ன என்பது.. ...
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
10-ஜூலை-201300:53:15 IST Report Abuse
Ab Cd பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது, அதனால் தான் உங்களில் பலர் வெளியே சுதந்திரமாக உலாவிக் கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Krish - Madurai,இந்தியா
10-ஜூலை-201300:41:51 IST Report Abuse
Krish தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்றே தோன்றுகிறது. பிஜேபி ஆட்சிகாலத்தில் தீவிரவாதத்தை கட்டுபடுத்த பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தை பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்க்காக அதன் பின் வந்த காங்கிரஸ் அரசு ரத்து செய்தது. அதன் பலனை நாடு இப்போது அனுபவித்து கொண்டிருக்கிறது. தீவிரவாதம் மட்டுமல்ல, எல்லா விசயங்களிலும் நம் நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2014 லோக்சபா தேர்தலில் ஒருவேளை பிஜேபி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தீவிரவாததிற்க்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
indian - chennai,இந்தியா
10-ஜூலை-201306:39:18 IST Report Abuse
indianமிஸ்டர் கிரீஸ் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச வேணாம். இப்டி பேசி பேசி தான் சாதாரண ஆட்களெல்லாம் ஹீரோ ஆயிடறாங்க. அப்புறம் குத்துது கொடைதுன்னா எங்க போறது...கண்ணா ஒன்னு தெரிஞ்சுக்க. மதத்த வச்சு அரசியல் பண்றவங்க மக்களை நெனைக்க மாட்டாங்க ,,,,,,,இந்தியாவின் ஒற்று மொத்த சிறுபான்மையினரின் பிரார்த்தனை வீண்போகாது. அவங்க பக்கமும் ஆண்டவன் இருக்கான் .........மனிதன் ஒரு சூழ்ச்சிகாரன் என்றால் இறைவன் அதை விட சூழ்ச்சி காரன் சிறுபான்மையினரை kaayapaduthi அரசியல் பண்ண ஆண்டவன் விட மாட்டான் ............எதுவும் நிரந்தரமில்லை ........வாழ்க இந்தியா ....ஒழிக மதவாதம் .........
Rate this:
Share this comment
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
10-ஜூலை-201307:17:37 IST Report Abuse
N.Purushothamanயப்பா...யாரு இந்த புது பால் பாண்டியன்.. வைகோ பிரிவினைவாத பேச்சை பொது கூட்டதில பேசுவார்.. அத கேட்டுகிட்டு சும்மா இருக்கனுமாம்....அவர் செய்தது தவறு .......
Rate this:
Share this comment
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
10-ஜூலை-201307:19:08 IST Report Abuse
N.Purushothamanஊழலையே இவங்களால கட்டு படுத்த முடியல...இதில பயங்கரவாதத்தை எப்படி கட்டு படுத்துவாங்க......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை