18 நாளில், 20 ஆயிரம் பேர் "ஆப்சென்ட்': பி.இ., சேர்க்கையில் அதிர்ச்சி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை :பி.இ., பொதுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு முடிந்த, 18 நாட்களில் மட்டும், 20 ஆயிரம் மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆகியிருப்பது, அண்ணா பல்கலையை, அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த மாதம், 21ம் தேதி, பொதுப் பிரிவு கலந்தாய்வு துவங்கியது. 9ம் தேதி வரையிலான, 18 நாட்களில், மொத்தம், 82,447 மாணவர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 62,996 மாணவர்கள், சேர்க்கை உத்தரவுகளை பெற்றுள்ளனர்; 19,224 மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இது, 23.32 சதவீதம்.கலந்தாய்வுக்கு வந்து, 227 மாணவர், எந்தப் பிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுள்ளனர். 18 நாட்களில், அதிகமான மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆகியிருப்பது, அண்ணா பல்கலையை, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.வரும், 31ம் தேதியுடன் கலந்தாய்வு முடிகிறது. மீதியுள்ள நாட்களில், மேலும், 20 ஆயிரம் பேர் வரை, "ஆப்சென்ட்' ஆகலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது. ஒவ்வாரு நாளும், சராசரியாக, 20 சதவீத மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆகின்றனர்.பெற்றோரின் வற்புறுத்தலுக்காக விண்ணப்பித்து விட்டு, பின், மாணவர், தாங்கள் விரும்பிய வேறு படிப்புகளில் சேர்ந்து விடுகின்றனர். மேலும், கடன் வாங்கி, அதிக செலவு செய்து படிக்க விரும்பாத மாணவர்களும், வேறு படிப்புகளுக்கு சென்று விடுகின்றனர். இது போன்ற காரணங்களால், "ஆப்சென்ட்' அதிகரிப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Fazith A - pudukkottai,இந்தியா
13-ஜூலை-201316:53:18 IST Report Abuse
Abdul Fazith A உண்மையில் பொறியியல் படிக்க விருபுவர்கள் சற்று சிந்திக்க வேண்டும் . அடிப்படையில் பொறியியல் படிப்பு படிக்க விரும்புபவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவது மிகவும் முக்கியம் ,ஏனென்றால் குறைந்தது 60-70 சதவிதம் மதிப்பெண் 12 ஆம் வகுப்பில் பெறுபவர்கள் மட்டுமே பல தனியார் கம்பனிகள் வேலைக்கு எடுக்கின்றன . இதன் அடிப்படையில் பார்க்கும்போது 12 ஆம் வகுப்பில் 50-59 சதவிதம் மதிப்பெண் பெற்றவர்களை எந்த தனியார் கம்பனிகளும் வேலைக்கு எடுப்பதில்லை எனவே மாணவர்கள் இதை மனதில் வைத்துக்கொண்டு பொறியியல் படிப்பில் சேரவேண்டும் . தனியார் கம்பனிகள் உங்கள் சாதியையோ இட ஓதிக்கிட்டையோ பார்க்காது மாறாக உங்கள் தகுதியையும் திறனை மட்டும் தான் பார்க்கும் . அரசாங்கத்தால் அணைத்து பொறியியல் படித்தவர்களும் வேலை கொடுக்க முடியாது .
Rate this:
Share this comment
Cancel
Sutha - chennai,இந்தியா
11-ஜூலை-201319:45:05 IST Report Abuse
Sutha காலியாக இருக்கும் பொறியியல் கல்லூரிகளை பள்ளிகள்,ஆர்ட்ஸ் கல்லூரிகள் என மாற்றினால் மாணவர் சமுதாயம் முன்னேறும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-ஜூலை-201315:24:15 IST Report Abuse
Pugazh V முன்பு அண்ணா பலகலை.க்கு மதிப்பு ,அந்தப் பல்கலை. மாணவர்களுக்கு டிமாண்டும் இருந்தது. இப்போது, கொஞ்சமும் விசாரிக்காமல் ஆய்வு எதுவும் செய்யாமல் கேட்டவருக்கெல்லாம் அண்ணா பல்கலை அங்கீகாரம் கொடுத்ததால் பரிசோதனைக்கூடம், அனுபமுள்ள பேராசிரியர்கள், உள்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகள் எல்லாம் அண்ணா பல்கலைக் கழக அனுமதி பெற்றது - என்று போட்டுக் கொள்கின்றன. போய்ப் பார்த்தால் ஆர்ட்ஸ் காலேஜில் இருக்கும் வசதிகள் கூட இல்லாத கல்லூரிகள். பொறியியல் படிப்பு இத்தனை கேவலமாகப் போகும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இப்போதெல்லாம் B.Com. பட்டப் படுப்பில் இடம் கிடைப்பது தான் அரிது.
Rate this:
Share this comment
Cancel
raaji - chennai,இந்தியா
11-ஜூலை-201314:21:42 IST Report Abuse
raaji தரமில்லாத பள்ளி கல்வி, தரமில்லாத கல்லூரிகள், தரமில்லாத கல்வி அரசு ஊழியர்கள்... போயிட்டே இருக்கு. இன்னும் ஐந்து வருடங்களில் இந்தியாவில் தமிழ் நாட்டை தவிர பிற மாநில மாணவர்கள் மட்டுமே பொறியியல் மாணவர்களாக இருப்பர். காசு வாங்கி பொறியியல் கல்லூரிகளை, தள்ளுவண்டி கடைகளைப் போல திறக்க அனுமதித்தால் இது தான் கதி. பணம் மட்டுமே குறிக்கோள் இன்றைய தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, பணம் மட்டுமே குறிக்கோள் இன்றைய அரசு கல்வி ஊழியர்களுக்கு. இதில் சமசீர் கல்வி என்கிற பெயரில் சில அரசியல்வாதிகளின் புண்ணியத்தால் தனியார் பள்ளிகளின் பாடதிட்டங்களை அரசு பள்ளிகளின் மட்டத்திற்கு குறைத்தாயிற்று, இதன் தாக்கம் இன்னும் 5 வருடங்களில் தெரியும் மாணவர்கள் அடுத்த மாநிலங்களுக்கு சென்று படிக்க ஆரம்பிப்பர். ஆக மொத்தம் நமது மாநிலம் விளங்கிடும்.
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
11-ஜூலை-201314:18:08 IST Report Abuse
Indiya Tamilan 18 நாளில், 20 ஆயிரம் பேர் "ஆப்சென்ட்': பி.இ., சேர்க்கையில் அதிர்ச்சி இதில் என்ன அதிர்ச்சி அடைய இருக்கிறது? 560 கல்லூரிகளில் 60 கல்லூரிகள்தான் தரமுள்ள கல்விக்கு தகுதியானவை. மற்ற கல்லூரிகளை அடுத்த வருடம் முதல் மூடிவிட்டால் குறைந்த மதிப்பெண் எடுத்து கடன் வாங்கி இன்ஜினியரிங் படிக்க முயலும் ஏழை,எளிய மாணவர்களுக்கு நல்லது. (இல்லையென்றால் அவர்கள் அரியர்ஸ் வைத்து முடித்து பின்னர் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்களே)
Rate this:
Share this comment
Cancel
BARATHI . G - trichy,இந்தியா
11-ஜூலை-201313:47:22 IST Report Abuse
BARATHI . G தரமில்லாத பொறியியல் கல்லூரிகளை அப்புறப்படுத்துவதே தற்போதைய அரசின் கடமை .........
Rate this:
Share this comment
Cancel
BARATHI . G - trichy,இந்தியா
11-ஜூலை-201313:33:43 IST Report Abuse
BARATHI . G தரமில்லாத பொறியியல் கல்லூரிகளை அப்புரபடுத்துவடே தற்பொழுது அரசின் தலையாய கடமை.........
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat, OMAN,ஓமன்
11-ஜூலை-201313:10:43 IST Report Abuse
Ramesh Sundram ஒரு காலத்தில் அண்ணா பல்கலை கழகம் என்றால் நல்ல மதிப்பு இருந்தது இன்று பொறுக்கிகள் கல்வி தந்தை ஆகும் பொழுது தரம் குறைத்துவிடுகிறது + 2 வில் பாஸ் செய்தலே போதும் என்பவர்களுக்கே engg seat அளிக்க படுகிறது என்றால் அதன் தரம் தான் என்ன. இங்கே சவுதியில் சில தமிழ்நாட்டில் பொறியல் படித்த சில மாணவர்களை நேர்முக தேர்வு நடத்திய பொழுது basic engg டிரைவிங் கூட தெரியவில்லை இவர்கள் எப்படி தான் engg படித்தவர்கள் என்று கிண்டல் அடிப்பதை பார்த்தால் நமக்கு தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Ragu Pathy - Chennai,இந்தியா
11-ஜூலை-201312:35:35 IST Report Abuse
Ragu Pathy லோக்கல் காலேஜ்ல படிச்சுட்டு வேலை இல்லாம இருக்கிறதை விட , படிக்காம இருக்கிறதே மேல் ..
Rate this:
Share this comment
Cancel
Narayan Arunachalam - DELHI,இந்தியா
11-ஜூலை-201312:18:08 IST Report Abuse
Narayan Arunachalam வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தியை படித்த திருப்தி... மாணவர்களும், பெற்றோர்களும் நல்ல விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது... 10 ஆண்டுகளுக்கு முன் பூந்தமல்லி ஹை ரோட்டில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரிக்கு கம்புஸ் இண்டெர்விஎவுக்கு சென்ற போது ( மனித வளத்துறை மேலாளராக ) .. அதன் தாளாளர் சொன்ன விஷயம் இது... " 5 acre நெலம் இருந்ததுங்க.. என்ன செய்யறதுன்னு தெரியல.. அதன் காலேஜ் ஆரம்பிச்சுட்டேன்...அவரது பலம்... ஒரு திராவிட கட்சியின் ஒன்றிய செயலாளர் மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பாளர் ( புரோக்கர் நு சொல்லல கூடாது ) .. இந்தியன் முதன்மை மூன்றில் உள்ள I T கம்பெனியில் இருந்து வருகிறேன் என்று சொன்னதும் " oh அப்படியா... அவங்க என்ன தொழில் பண்ணறாங்க ? " .. நான் நேரில் சென்ற 200 + கல்லூரிகளின் பெரும்பாலோனோரின் நிலைமை இது தான்.... தரம் இல்லாத கட்டமைப்பு... தகுதி குறைவான ஆசிரியர்கள் ( 3 ம் மற்றும் 4 ம் வருட மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தல் ).. அரசின் மெத்தனம்.. இவை யாவும்.. மக்களை மேலும் விழிப்பு அடைய செய்யும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்