Police constable attack lorry drivers | "மாமூல்' கேட்டு டிரைவர்கள் மீது தாக்கு : அடியாட்களுடன் போலீஸ் ஏட்டு அடாவடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"மாமூல்' கேட்டு டிரைவர்கள் மீது தாக்கு : அடியாட்களுடன் போலீஸ் ஏட்டு அடாவடி

Updated : ஜூலை 10, 2013 | Added : ஜூலை 10, 2013 | கருத்துகள் (52)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
"மாமூல்' கேட்டு டிரைவர்கள் மீது தாக்கு : அடியாட்களுடன் போலீஸ் ஏட்டு அடாவடி

கிருஷ்ணகிரி :"மாமூல்' தர மறுத்த லாரி டிரைவர்களை, போலீஸ் ஏட்டு, அடியாட்கள் மூலம் தாக்கியதைக் கண்டித்து, பொதுமக்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருவிநாயனப்பள்ளியில், போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. இது, ஆந்திர மாநில நுழைவுப் பகுதி. இங்கு, நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு, ஏட்டு ராஜேந்திரன் பணியில் இருந்தார்.அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. லாரியை நிறுத்திய, ராஜேந்திரன் மற்றும் அவரது எடுபிடியாக இருந்த அடியாட்கள், டிரைவர்களிடம், மாமூல் பணம் கேட்டனர்.டிரைவர்கள், ஹீர்சியாபூரை சேர்ந்த பரம்ஜித் சிங், 42, குருவிந்தர் சிங், 43, ஆகியோர் லாரியை விட்டு இறங்கி, ஆவணங்களைக் காட்டி, அனைத்தும் சரியாக உள்ளதால், "மாமூல் தர முடியாது' என்றனர்.

தொடர்ந்து அடியாட்கள் மிரட்டினர். பயந்த டிரைவர்கள், 20 ரூபாயை மட்டும் கொடுத்தனர். ஆத்திரமடைந்த ஏட்டு ராஜேந்திரன் மற்றும் அடியாட்கள், லத்தியால் டிரைவர்களை தாக்கினர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து, போலீசில் புகார் செய்யப் போவதாகக் கூறிய டிரைவர்கள், லாரியை, கிருஷ்ணகிரி நோக்கி ஓட்டினர். பைக்கில் பின் தொடர்ந்து வந்த, அடியாட்கள் தாஸ், கோவிந்தன் ஆகியோர், லாரியை மறித்து, இரும்பு கம்பியால், முன் கண்ணாடியை உடைத்தனர்.அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை பிடித்து விசாரித்தனர். விவரம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீசைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த, போலீஸ் உயர் அதிகாரிகள், பேச்சு வார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக, போலீஸ் அதிகாரி உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை, பொதுமக்கள் கைவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Iyer - chennai,இந்தியா
11-ஜூலை-201322:47:49 IST Report Abuse
Natarajan Iyer சென்னை விருகம்பாக்கத்தில் தள்ளு வண்டியில் வேர்கடலை விற்பவரிடம்கூட மாமூல் வாங்கும் பிச்சைக்கார போலீசை தினம் பார்க்கிறேன். வெட்கம் கெட்ட வர்கள். ஓசியில் கிடைத்தால் மூத்திரம்கூட குடிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
11-ஜூலை-201321:59:45 IST Report Abuse
Natarajan Iyer நான் பொதுவாக மிகுந்த இரக்க சுபாவம் உள்ளவன். ஒரு மாடு, நீளம் குறைவான கயிற்றால் கட்டி இருந்தால்கூட வருத்தப்படுவேன். ஆனால் எங்காவது போலீஸ் அடிபட்டால் உள்மனது சந்தோசம் அடைகிறது. ( இது தவறு என்று தெரிந்தாலும் ) அந்த வடிவேலு காமெடியை ஆயிரம் முறை ரசித்துள்ளேன்.
Rate this:
Share this comment
Cancel
N.Rajagopalan - Chennai,இந்தியா
11-ஜூலை-201320:22:51 IST Report Abuse
N.Rajagopalan All Govt employees, irrespective of cadre and departments have long forgotten to live within their salaries. Is there one honest high official who will reverse the tr. Will the politicians allow him to function. May be we need emergency
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
11-ஜூலை-201316:45:36 IST Report Abuse
Divaharan இப்படி எல்லா துறையினரும் அடி ஆட்கள் வைத்து லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டால் என்ன ஆகும் ?
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
11-ஜூலை-201316:18:17 IST Report Abuse
Baskaran Kasimani பொது மக்கள் இது போன்ற ஏட்டுக்களை பிடித்து "நான் லஞ்சம் வாங்கிய கயவன்" என்று நெத்தியில் பச்சை குத்தி விட வேண்டும். கமிசன் கிடைப்பதால் மேல் அதிகாரிகள் ஒரு மண்ணும் செய்ய மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bharathi - bangalore,இந்தியா
11-ஜூலை-201316:04:27 IST Report Abuse
Bharathi காவல் துறை யாரிடம் உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
11-ஜூலை-201315:29:49 IST Report Abuse
Sathyamoorthy லாரி டிரைவர்களின் பொழப்பு ரொம்ப பாவம்யா.... அவங்களை தயவு செஞ்சு தொந்திரவு பண்ணாதீங்க அய்யா...
Rate this:
Share this comment
Cancel
r.sundararaman - tiruchi,இந்தியா
11-ஜூலை-201315:29:20 IST Report Abuse
r.sundararaman இது போல் மானம்கெட்ட வேலையில் இறங்கும் போலீஸ் மீது அம்மா அவர்கள் டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ,.
Rate this:
Share this comment
Chenduraan - kayalpattanam,இந்தியா
11-ஜூலை-201320:08:32 IST Report Abuse
Chenduraanஇதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால், அவர்களுக்கு லஞ்சம் அடிக்க நேரம் குறைந்து விடும்.....
Rate this:
Share this comment
Cancel
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
11-ஜூலை-201315:16:23 IST Report Abuse
Angry ஜெய் அடிவாங்குனவன் போட்டோ எதுக்கு ? அடிச்ச வீராதி வீரன் சூராதி சூரன் போட்டோவை போடுங்க
Rate this:
Share this comment
Cancel
பகட்டுவான் - Chennai,இந்தியா
11-ஜூலை-201314:53:10 IST Report Abuse
பகட்டுவான் மோடி வந்து மகுடி ஊதினா சரியாய் போய்டும். கவலை வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை