Problem for Nilgiris because buildings | கட்டடங்களால் ஆட்டம் காணும் மலை மாவட்டம் : அதிகாரிகளின் ஆசியுடன் அத்துமீறல் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டடங்களால் ஆட்டம் காணும் மலை மாவட்டம் : அதிகாரிகளின் ஆசியுடன் அத்துமீறல் அதிகரிப்பு

Updated : ஜூலை 12, 2013 | Added : ஜூலை 10, 2013 | கருத்துகள் (16)
Advertisement
கட்டடங்களால் ஆட்டம் காணும் மலை மாவட்டம்  : அதிகாரிகளின் ஆசியுடன் அத்துமீறல் அதிகரிப்பு

ஊட்டி :நீலகிரி மாவட்டத்தில், விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழிலை காக்கவும், நிலச்சரிவு அபாயத்தை தடுக்கவும், 1993ம் ஆண்டில், அ.தி.மு.க., அரசு சார்பில் "மாஸ்டர் பிளான்' அமல்படுத்தப்பட்டது. ஊட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், காப்புக் காடுகள் உள்ள இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில், புதிய கட்டுமானங்கள் கட்ட தடைவிதிக்கப்பட்டது; 30 "டிகிரி' சாய்வான மலைப் பகுதிகளில் கட்டுமானங்கள் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசியல் கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன், விதிமீறி கட்டடங்கள் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக ஊட்டி படகு இல்லம், பெர்ன்ஹில், மஞ்சனகொரை, தொட்டபெட்டா, முத்தோரை, பாலாடா, கெத்தை, கோத்தகிரி, நடுவட்டம் உள்ளிட்ட இடங்களில் கட்டட கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. இதை எதிர்த்து சிலர், ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். எனினும், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முடியாதபடி சிலர், தடை உத்தரவு பெற்று, கட்டடங்களை கட்டி வருகின்றனர்.தடை உத்தரவு பெற்றாலும், வழக்கு முடியும் வரை, கட்டுமான பணிகளை தொடர கூடாது என்ற கட்டுப்பாடுகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. தடை உத்தரவை ரத்து செய்ய, அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல் இல்லை.

விவசாய நிலம், செங்குத்தான மலைப் பகுதிகளில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு வனத்துறை, புவியியல், மாவட்ட நிர்வாக கமிட்டி, மலைப் பகுதி எழில் நோக்கு குழுமத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதி பெறாமலே அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை "கவனித்துவிட்டு' கட்டட பணியை தொடர்கின்றனர். "நிலநடுக்க அபாய பட்டியலிலுள்ள நீலகிரி, தாங்கும் சக்தியை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறது. கட்டடங்கள் அதிகரிக்குமானால், பேரிடர் காலங்களில் உயிர், பொருள் இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என, பலமுறை தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. எனினும், இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் துவக்காமல் இருப்பது, ஆபத்தின் அறிகுறியாகவே தெரிகிறது.

இதுகுறித்து, நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் கேட்டபோது, ""விதிமீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கோர்ட்டுக்கு செல்கின்றனர். ஊட்டி, கோத்தகிரி, முத்தோரை பாலாடா, தொட்டபெட்டா, மஞ்சனகொரை உட்பட மலை பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்
படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cku - tpr,இந்தியா
11-ஜூலை-201317:11:30 IST Report Abuse
cku ஏதேனும் விபரீதம் ஏற்படும்முன் அரசு நடவடிக்கை எடுத்து ... மலை அரசியை காக்கட்டும் ...
Rate this:
Share this comment
Cancel
Shivarama Subramanian - Chromepet,இந்தியா
11-ஜூலை-201316:16:11 IST Report Abuse
Shivarama Subramanian மாவட்ட ஆட்சியர் விதிமுறை மீறிய கட்டிடங்களை ஆய்வு செய்து மாநில முதல்வர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட், இவர்களிடம் ரகசியமாக அறிக்கை அனுப்பட்டும். அதே போல் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம் , உச்ச நீதிமன்றம் விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு எவ்வித தடையும் கொடுக்காமல் அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kochadaiyaan - Chennai,இந்தியா
11-ஜூலை-201315:30:52 IST Report Abuse
kochadaiyaan இத்தனைக்கும் அந்த அம்மையார் நூற்றுக்கு முன்னூறு தடவை இங்கதான் வராங்க போறாங்க. ஆனா கண்ணில் தென்படவே இல்லை போல.
Rate this:
Share this comment
Cancel
JAI.RAMANAA - ILAVASA NAADU ,இந்தியா
11-ஜூலை-201314:17:30 IST Report Abuse
JAI.RAMANAA இயற்கை இங்கு ஒரு தனது ருத்ர தாண்டவத்தை ஆடி காண்பித்து பல உயிர்களை பலிவாங்கிய பின்னர்தான் இந்த லஞ்ச அதிகாரிகளும் .,பணத்தாசை பிடித்த அரசியல் வாதிகளும் ஐயோ குய்யோ என்று கதறி நடவடிக்கை அது இது என்று தனது சுறுசுறுப்பை காட்டுவார்கள் அதுவரை இந்த அத்துமீறல் நடந்து கொண்டுதான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-201313:32:57 IST Report Abuse
Rajasekaran Palaniswamy "நிலநடுக்க அபாய பட்டியலிலுள்ள நீலகிரி, தாங்கும் சக்தியை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறது. கட்டடங்கள் அதிகரிக்குமானால், பேரிடர் காலங்களில் உயிர், பொருள் இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது' விரைவில் இன்னொரு உத்தர்காண்ட் ....நடக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
11-ஜூலை-201311:57:51 IST Report Abuse
ksv அப்போ இன்னுமொரு உத்ரகன்ட் நிகழ்ச்சிக்கு அரங்கேற்றம் ஆரம்பம்.
Rate this:
Share this comment
Cancel
B.jeyaraman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூலை-201309:39:06 IST Report Abuse
B.jeyaraman இந்திய திரு நாடு லஞ்ச லாவண்யத்தில் உலகிலேயே முதல் நாடக உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.இயற்கையையும் எதிர்த்து மனிதர்கள் செய்யும் இந்த ஊழலுக்கு பெரும் விலை கொடுக்கவேண்டி வரும்.இதை கண்கூடாக உத்தரகாண்டில் கண்டோம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஜூலை-201309:13:28 IST Report Abuse
Srinivasan Kannaiya உத்திரகண்டில் ஏற்பட்ட நிலவரம் நமக்கும் வரவேண்டுமா ....... மனிதனாக நடங்கள்....
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
11-ஜூலை-201308:44:38 IST Report Abuse
PRAKASH எல்லாம் காசு பணம் துட்டு மணி மணி
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-201308:28:57 IST Report Abuse
மதுரை விருமாண்டி அட விடுங்க பாஸ், ரெண்டு நாள் வானம் பொத்துக்கிட்டு கொட்டோ கொட்டுன்னு மழை கொட்டினா, எல்லாம் அடிச்சிக்கிட்டு போயிரும்... அவனவனுக்கு இயற்கை பேரழிவால் தான் சாவுன்னு எழுதினதுக்கு அப்புறம் ஒண்ணும் மாத்த முடியாது பாஸ்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை