Tweet says Mumbai next on terror target; security tightened | "அடுத்த குறி மும்பை!': சொல்கிறது இந்திய முஜாகிதீன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"அடுத்த குறி மும்பை!': சொல்கிறது இந்திய முஜாகிதீன்

Added : ஜூலை 10, 2013 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
"அடுத்த குறி மும்பை!': சொல்கிறது இந்திய முஜாகிதீன்

புதுடில்லி:பீகார் மாநிலம், புத்த கயா கோவிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள, இந்திய முஜாகிதீன் அமைப்பு, தன் அடுத்த குறி, மும்பை என, "ட்விட்டரில்' குறிப்பிட்டுள்ளது.

தொடர் குண்டுவெடிப்பு:பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்தர் கோவிலில், கடந்த, 7ம் தேதி, தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஐந்து துறவிகள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்த விசாரணை, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.


தேசிய புலனாய்வு குழு:

குண்டுவெடிப்பு நடந்த புத்த கயா கோவிலை, காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.அப்போது நிருபர்களிடம் பேசிய ஷிண்டே கூறியதாவது:இந்த சம்பவம் பற்றி, விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை தேசிய புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரவில் குண்டுகளை வைத்து, அதிகாலையில் வெடிக்க செய்துள்ளனர். இதில், மூன்று முதல் நான்கு பேர் வரை ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு, ஷிண்டே கூறினார்.


அடுத்த இலக்கு:

இதற்கிடையே, இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினர், புத்த கயாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு, தாங்கள் தான் காரணம் என, "ட்விட்டர்' சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின் அடுத்த குறி, மும்பை எனவும், குறிப்பிட்டுஉள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
11-ஜூலை-201307:42:33 IST Report Abuse
K.Balasubramanian இது சரியான நிலை அல்ல. வெறும் செய்தியாக கொடுத்தால் மட்டும் போதாது . அரசு இயந்திரங்கள் எப்போதும் பொறுப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Sanjay Kumar - சென்னை,இந்தியா
11-ஜூலை-201307:21:09 IST Report Abuse
Sanjay Kumar எங்கே சுப்புணி - ஓ, இந்த செய்தி தமிழர்கள் மற்றும் வைகோவை பத்தி இல்லையோ
Rate this:
Share this comment
Cancel
Sanjay Kumar - சென்னை,இந்தியா
11-ஜூலை-201307:18:30 IST Report Abuse
Sanjay Kumar Modi is a unbiased leader who looks into Islamic people concerns and their welfare as well,but at the same he is capable of eliminating the Islamic fundamentalist also. We need Modi as a PM. Modi is the man who is capable of cleansing the terror which is rotting our country.
Rate this:
Share this comment
Cancel
Sanjay Kumar - சென்னை,இந்தியா
11-ஜூலை-201307:14:37 IST Report Abuse
Sanjay Kumar India has to act take stern action against the Green terrorism, else it will go out of hands. India should conduct raids as like United States did for Osama.
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
11-ஜூலை-201306:21:44 IST Report Abuse
mangai மைனாரிட்டி சுட்டா குண்டுவைச்சா அடிபட்டு சாவது நம் மெஜாரிட்டி மக்களின் கடமை. நாம தான் மெஜாரிடியா இருக்கோமே.. கொஞ்ச பேர் செத்தா ஒன்னும் குறைஞ்சிடாது.
Rate this:
Share this comment
Cancel
IRAIYANBAN - Madurai,இந்தியா
11-ஜூலை-201306:20:28 IST Report Abuse
IRAIYANBAN இந்தியன் முஜாஹிதீன் சங்க பரிவார் அமைப்பின் புனை பெயர். நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு காந்தியைக் கொன்றான்.
Rate this:
Share this comment
Sanjay Kumar - சென்னை,இந்தியா
11-ஜூலை-201307:11:13 IST Report Abuse
Sanjay Kumarகோச்சடையான் என்ற பெயரில் பல இஸ்மாயில்கள் கருத்து எழுதி கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே....
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
11-ஜூலை-201307:13:05 IST Report Abuse
vadiveluஅதனால் முஸ்லீம் பெயராக இருந்தாலும் , சுட்டு தள்ளலாம் என்கிறார் IBRAIYANBAN. முஸ்லீம் பெயரில் சங்க பரிவார் ஆட்கள் என்று சொல்லி முடித்து விடலாம். அரசு யோசிக்குமா. எதற்காக கேசு, நம் சகோதரர்களுக்கும் சந்தோஷம்....
Rate this:
Share this comment
mangai - Chennai,இந்தியா
11-ஜூலை-201307:33:57 IST Report Abuse
mangaiகாந்திய சுட்ட பிறகு கோட்சே ஒன்னும் ஓடிவிடவில்லை. நீதி மன்றத்தில், தான் யார் என்பதையும், காந்தியை சுட்ட காரணத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். அவர் ஒன்றும் பச்சை போர்வைக்குள் மறையவில்லை. Gandhi போன பிறகாவது நாடு உருப்படும் இந்துக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பது அவரது எண்ணம். பாவம் ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை....
Rate this:
Share this comment
Cancel
Manidhan - India,இந்தியா
11-ஜூலை-201305:29:20 IST Report Abuse
Manidhan இந்தியன் முஜஹிடீன் மற்றும் வேறு சில தீவிரவாத அமைப்புகள் அமெரிக்க சீனா போன்ற நாடுகளால் மறைமுகமாக பணவுதவி மற்றும் தொழில்நுட்ப வுதவி பெற்று தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் பயனடைவது தீவிரவாத அமைப்புகளோ அல்லது இந்திய பாகிஸ்தானோ இல்லை. அமெரிக்க சீனா போன்ற நாடுகள் தான் பயன் அடைகின்றனர். ஆனால் நமக்கும் அவர்களுக்கும் விலைமதிப்பு மிக்க உயிர் உடமை மன நிம்மதி இழக்கிறோம். இதற்கு ஒரே தீர்வு தீவிரவாதத்தில் ஈடு படும் பகுதிகளில் கல்வி கொண்டு சென்று சேர்ப்பது. இந்திய பாகிஸ்தான் பிரிவு தலைவர்களால் வந்தது மக்களால் அல்ல. இந்திய பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைத்திருக்கும். ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான்கள் வந்திருக்க மாட்டார்கள். இந்திய வல்லரசாக மாறி இருக்கும். நாம் மகிழ்ச்சியாக இருந்திருப்போம்.
Rate this:
Share this comment
Azib - kuala lumpur,மலேஷியா
11-ஜூலை-201307:16:33 IST Report Abuse
Azibபாஸ் இந்தியன் முஜஹிடீன் ஒரு அமைப்பு உண்மையிலே கிடையாது . இந்தியர்களை பிரிக்க மேல் நாடு சதி...
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
11-ஜூலை-201305:19:21 IST Report Abuse
Samy Chinnathambi இவர்களுக்கு எட்டப்பர்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை, தாங்கள் நினைத்ததை சாதிப்பார்கள். முதலில் எட்டப்பர்களை தூக்க வேண்டும்...இவர்கள் தான் அனைத்து உதவிகளையும் செய்வது...
Rate this:
Share this comment
Cancel
Kumar - Trichy,இந்தியா
11-ஜூலை-201301:09:25 IST Report Abuse
Kumar இதற்கெல்லாம் காரணம் மோடி தான் என்று சொன்ன இங்கே பலர் இப்போது என்ன சொல்ல போகிறார்கள். முதலில் தீவிரவாதத்தை‌ எதிர்ப்போம் அது எந்த மதத்தவராயீனும்.......
Rate this:
Share this comment
Vaduvooraan - Chennai ,இந்தியா
11-ஜூலை-201307:28:25 IST Report Abuse
Vaduvooraan குமார், இப்பவும் அப்படிதான் சொல்லுவார்கள். ஹிந்து சமுதாயம் ஒற்றுமை இல்லாது. உட்பூசலில் ஆழ்ந்து கிடக்கும் வரை சிறுபான்மை மக்கள் மனதில் அச்சங்களை தூண்டி விட்டு அதில் வோட்டுப் பொறுக்கும் மதச்சார்பின்மை கிட்டத்தட்ட லஞ்ச ஊழல் போல வேரூன்றி நமது தேசிய அடையாளங்களில் ஒன்றாகப் போய் விட்டது என்பதுதான் உண்மை. முதலில் பெரும்பான்மை தீவிரவாதிகள் எந்த மதத்தில் இருந்து வருகிறார்கள் என்று யோசித்துப் பார்த்திருந்தால் இந்த மாதிரி கருத்துப் பதிவு செய்ய மாட்டீர்கள்...
Rate this:
Share this comment
Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்
11-ஜூலை-201307:39:24 IST Report Abuse
Bala Sreenivasan ட்விட்டரில் சொல்லிட்டாங்க இல்ல? அவங்க வேலையை சுலபமாக்க சோனியா அரசு அனைத்து உதவிகளையும் செய்யாது ஓயாது. ஆனா ஒண்ணு, நம்ம அரசியல்வாதிகள் மாதிரி இல்லாமல் தீவிரவாதிகள் சொன்னதை நிச்சயம் நிறைவேற்றி விடுகிறார்கள் என்பதுதான் இதில் குரூர காமடி. சம்பவம் நடந்த பிறகு "ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது, இதை அரசு பொறுத்துக் கொள்ளாது, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்" என்று தயாராக வைத்திருக்கும் ஒரு அரை டஜன் அறிக்கைகளை அன்னையின் ஆணைக்கிணங்க பிரதமர், உள்துறை அமைச்சர் எடுத்து வீசுவார்கள். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மும்பையின் தனித்தன்மை பற்றி ஊடகங்கள் ஸ்பெஷல் ரிப்போர்டில் சிலாகிப்பார்கள் அடுத்த வன்முறைக்கு நாடு தயாராகிவிடும். என்ன கேடு கேட்ட தேசம் இது....
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
11-ஜூலை-201300:57:28 IST Report Abuse
தமிழ் சிங்கம் இந்திய முஜாகிதீன் அமைப்புடன் அரசு உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால், மும்பையில் நடக்க போகும் அபாயத்தை தடுக்கலாம்.
Rate this:
Share this comment
Sanjay Kumar - சென்னை,இந்தியா
11-ஜூலை-201307:08:12 IST Report Abuse
Sanjay Kumarஆறறிவு மனிதனாக இருந்தால் பேச்சு வார்த்தை நடத்தலாம் மற்றும் புரிய வைக்கலாம், மிருகங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி என்ன பயன்? சில நேரங்களில் அமெரிக்கா நடத்திய மாதிரி திடமான அதிரடி நடவடிக்கை தேவை. அதை மத்திய அரசு கண்டிப்பாக செய்ய வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை