E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மோடியால் காங்கிரசுக்கு பித்து பிடித்துவிட்டது: பா.ஜ., விமர்சனம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

12 ஜூலை
2013
08:23
பதிவு செய்த நாள்
ஜூலை 11,2013 23:29

டேராடூன்: ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால், காங்கிரஸ் கட்சிக்கு, பித்து பிடித்து விட்டது. அதனால் தான், உத்தரகண்ட் வெள்ள சேதத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மோடி செய்த உதவியை, அம்மாநில அரசு வெளிப்படுத்தவில்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர் திரிவேந்திர சிங் கூறினார்.



பரந்த மனப்பான்மை:

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பரந்த மனப்பான்மையோடு, கணிசமான தொகையை உதவியாக அளித்தார். 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களையும், ரயில் மூலம், உத்தரகண்டிற்கு அனுப்பி வைத்தார். அத்துடன், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்கவும், இடிபாடுகளை அகற்றவும், குழு ஒன்றையும், மோடி அனுப்பி வைத்தார். ஆனால், அந்தக் குழுவின் சேவை தேவையில்லை என, உத்தரகண்ட் அரசு, திரும்பி அனுப்பிவிட்டது.




மோடி உதவி மறைப்பு:

உத்தரகண்ட் மாநில அரசு நிர்வாகத்தில் உள்ள யாரும், மோடி செய்த உதவிகள் பற்றி, இதுவரை வாய் திறக்கவில்லை. மோடிக்கு சாதகமான, அவருக்கு செல்வாக்கை தேடித் தரக் கூடிய ஒவ்வொரு விஷயத்தையும், உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் அரசு, வேண்டுமென்றே மறைக்கிறது. இதிலிருந்தே, மோடியின் பெயரைக் கேட்டாலே, காங்., பித்து பிடித்தது போலாகி விடுகிறது தெரிகிறது. உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க, 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. ஆனால், 1,000 கோடி ரூபாயை மட்டுமே, மத்திய அரசு அளித்துள்ளது. உத்தரகண்ட் துயரத்தை, தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு திரிவேந்திர சிங் கூறினார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nadunilaiyalan - yanbu,சவுதி அரேபியா
17-ஜூலை-201307:39:19 IST Report Abuse
nadunilaiyalan எப்படி செலவு பண்ணி..,விளம்பரம் பண்ணினாலும்..,அண்ணன் மோசடி பிரதமராக வரமுடியாது...,தானைத்தலைவன் நிதிஷ்தான் அடுத்த பிரதமர்..,இதில் எந்தவித சந்தேகமும் இல்லை..,கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்...,
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Ng Nswamy - salem,இந்தியா
12-ஜூலை-201306:21:54 IST Report Abuse
Ng Nswamy நரேந்திர மோடியால்,மக்களுக்கு பித்து பிடித்து விட்டது.
Rate this:
181 members
0 members
77 members
Share this comment
Cancel
Kumar - Trichy,இந்தியா
12-ஜூலை-201306:04:09 IST Report Abuse
Kumar கண்டிப்பாக மோடி யை பார்த்து இந்த காங்கிரஸ் பயப்படுகிறது. அதனால்தான், அவருக்கு எதிராக விமர்சம் செய்கிறது.
Rate this:
54 members
0 members
166 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
12-ஜூலை-201304:46:50 IST Report Abuse
Pannadai Pandian காங்கிரஸ் என்பது ஒரு திருட்டு கூட்டம். அதில் பல சிறு திருடர்கள் உள்ளனர். அதனால் தான் பெருந்திருடனுக்கு இடர் வரும் போதெல்லாம் சிறு திருடர்கள் முலாயம், லாலு, மாயாவதி, கருணா, சரத் பவார் போன்றவர்கள் குரல் கொடுக்கிறார்கள். இதில் ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லாத சுப்புணியும் நவமயமும் நசுங்கிய சொம்பை அடித்து ஒலி எழுப்புவது தான் வேடிக்கை. ஊழலுக்கு எதிராக முளைத்த ராம் தேவ் பாபாவை சிறையில் அடைத்தனர். நவீன காந்தி அண்ணா ஹசாறேவை அழுத்தம் கொடுத்து ஓரம் கட்டிவிட்டனர். கேசரிவால் தனி ஆளாக போராடுகிறார். அவரை கத்தியால் குத்திவிடுவேன் என்று நம் வெளியுறவு அமைச்சர் மிரட்டுகிறார். இப்போது மோடி பிரதமர் ஆகிவிட்டால் தங்கள் குலத்தொழிலுக்கு பங்கம் வந்துவிடுமோ என்று மோடியை எதிர்க்கின்றனர்.
Rate this:
74 members
1 members
221 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
12-ஜூலை-201304:30:38 IST Report Abuse
Thangairaja அம்மா அவன் கிள்ளுராம்மா ....பாருங்க என்னை பார்த்து சிரிக்கறதை....... கேவலம் பதவிக்காக எப்படியெல்லாம் விளம்பரம் தேட வேண்டி இருக்கிறது. இவங்க தலை கீழாக நடந்து இந்தியா முழுக்க சுற்றி வந்தாலும் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் மீண்டும். தவறினால் முலாயம் அல்லது நிதீஷ் தலைமையில் மூன்றாம் அணி கொஞ்ச காலம் ஆட்சியில் இருக்கும்.
Rate this:
183 members
1 members
88 members
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
12-ஜூலை-201304:29:20 IST Report Abuse
N.Purushothaman தேசபற்று உள்ள மிச்சம் மீதி காங்கிரஸ்காரர்கள் பா.ஜ பக்கம் வருவது நல்லது.... மோடி என்னும் சுனாமி காங்கிரஸ் என்னும் கப்பலை அடித்து செல்ல போவது உறுதியாகி விட்டது.....தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸ்ல் உள்ள அந்த நல்ல சிந்தனையாளர்கள் ஒரே குடையின் கீழ் வந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது...
Rate this:
63 members
0 members
152 members
Share this comment
Cancel
Kochadaiyaan - chennai,இந்தியா
12-ஜூலை-201302:20:16 IST Report Abuse
Kochadaiyaan குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்று சொல்லுவார்கள். காங்கிரஸ் காரன் பயபடுரானோ இல்லையோ பாஜக போடும் நாடகம் தான் அவர்களுக்கு பித்து பிடித்ததை போல செயல் பாடுகளை செய்து கொண்டு இருகின்றனர். எங்கடா அரசியல் ஆதாயம் தேடலாம் உடனே அறிக்கையை விட்டு தாங்கள் உத்தம புத்திரர்களை போல மக்களிடம் அரங்கேற்று கிறார்கள். அப்படி தானே நடக்கிறது ? ஒன்னும் சரி தேரவில்லையா உடனே திருவாளர் மோடி வெளிநாட்டவரை இங்கு வரவழைத்து முன்பே பேசி வைத்த அதே டியாலாகை அள்ளிவிடுவார்கள். மீடியாக்களும் ஆப்கோ உருபினர்களும் போதாத குறைக்கு மோடி புகழ் பாடி எப்படி அரசியலாகனுமோ அந்த வேளையில் ஜரூராக ஈடுபடுவார்கள் தெரியாத இந்த கூற்றெல்லாம். இதே கிரிக்கெட் என்றால் அதை பிக்சிங் என்று சொல்ல்வார்கள். அதே பார்முலாவை தான் பாஜக கையில் தூக்கி வைத்திருகிறது. ஒன்றை மனதில் பதிய வைத்து கொள்ளுங்கள் குஜராத்தை விட்டு வெளியே மோடிக்கு அவமானம் தான் காத்து இருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் நமக்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோர் பதம் போல காட்டுகிறது.
Rate this:
133 members
3 members
102 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-ஜூலை-201301:24:22 IST Report Abuse
Ab Cd ஆந்திராவில் உத்தரகண்ட் வெள்ள சேதத்தில், பாதிக்கப்பட்ட பக்க்தர்களை மீட்க, காங்கிரசும், தெலுங்கு தேசமும் விமான சேவையை வழங்கியது. அதை பற்றி எந்த மீடியாவும் செய்தி வெளியிடவில்லை. அவர்களுக்குள் விமானநிலையத்தில் மோதல் வந்ததை மட்டும் பெரிதாக செய்தி வெளியிட்டார்கள். ஆனால் மோடி குச்சி மிட்டாய், குருவி ரொட்டி கொடுத்தால் கூட பெரிதாக விளம்பர படுத்திக்கொள்கிறார்கள். மோடியின் துதி பாட 7000 க்கு மேற்பட்ட மீடியா நபர்கள் முடுக்கி விடப்பட்டிருக்கிறார்களாம்...
Rate this:
196 members
0 members
172 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
12-ஜூலை-201304:08:34 IST Report Abuse
Baskaran Kasimaniகாங்கிரஸ் காரர்களுக்கு துதி பாட அதை விட அதிகமாக ஆட்கள் இருக்கிறார்கள்...ஒன்றை நீங்கள் மறந்து விட வேண்டாம் - காங்கிரஸ் இளவரசர் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் விமானத்தில் வேறொரு நாட்டுக்கு தனிப்பட்ட விசயமாக சென்றார்...மோடி தானே சென்று உதவிகளை தாராளமாக செய்தார் என்பது மறுக்க முடியாத உண்மை......
Rate this:
34 members
0 members
161 members
Share this comment
12-ஜூலை-201305:50:49 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் பத்தாயிரம் கோடி ( நமது வரிப்பணம்தான் ) செலவில் பாரத் நிர்மான் என்ற பெயரில் போலியான,பொய்யான பகட்டான சாதனை விளக்க விளம்பரங்கள் நாடு முழுவதுமுள்ள ஊடகங்களில் பளிச்சிடுகின்றன. அதனை கண்டிக்க உங்களுக்கு மனம் வாராதே. ஏனெனில் அதன் பயனாளி சோனியா இந்து அல்லவே .அதோடு மட்டுமல்லாம தினமும் ஈழத் தமிழர்கள் சோனியாவில் கருணையால் மறுவாழ்வு பெற்று உலகக் கோடீஸ்வரர்களாக ஆகிக்கொண்டிருப்பதாக காமெடி டாக்குமெண்டரி போட்டு பொதிகை தூர்தர்ஷன் சிரிக்கவைக்கிறது...
Rate this:
19 members
0 members
130 members
Share this comment
Cancel
Srinath Babu KSD - Madurai,இந்தியா
12-ஜூலை-201301:04:17 IST Report Abuse
Srinath Babu KSD மோடி என்றாலே காங்கிரஸ்காரர்களின் தலைமுடி கூட நடுங்குகிறது.
Rate this:
44 members
0 members
200 members
Share this comment
Kochadaiyaan - chennai,இந்தியா
12-ஜூலை-201302:11:25 IST Report Abuse
Kochadaiyaanநடுங்கியதை தான் கர்நாடக, ஹரியானா, மற்றும் உத்தரகாண்டில் நாடே பார்த்ததே. பாவம் பாஜகர்கள் என்ன செய்வார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு மோடி மஸ்தானுக்கு ஒரு தலைபாகை மாட்டி விட்டு இந்திரன் சந்திரன் என்று தான் சொல்ல முடியும். போதாத குறைக்கு முகநூல், வாசகர் பகுதியில் அவரால் நியமிக்க பட்டவர்கள் தம்ப்ஸ் அப் சளைக்காமல் தட்டுவார்கள். ஏதாவது உருப்படியான கொள்கை உண்டா கிடையாது. ஒட்டு வேட்டைக்காக மீண்டும் மீண்டும் அயோத்தியை கிண்டிவிட்டு எதாவது தேறுமா என்ற நோக்கில் தான் பாஜகர்கள் அலைந்து திரிந்து கொண்டு இருகிறார்கள்....
Rate this:
139 members
1 members
53 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
12-ஜூலை-201306:33:22 IST Report Abuse
Samy Chinnathambiஇங்கே உள்ள கருத்துகளை பார்க்கும்போதே தெரிகிறதே..காங்கிர திமுக கூட்டணிக்கு இப்போதே கை கால் நடுங்க ஆரம்பித்து விட்டது....மோடி தவறு செய்வதாக உலர ஆரம்பித்து அவர் செய்து கொண்டு இருக்கும் வளர்ச்சி திட்டங்களை இவர்களே விளம்பர படுத்துகிறார்கள்......
Rate this:
25 members
2 members
144 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
12-ஜூலை-201300:45:14 IST Report Abuse
தமிழ் சிங்கம் காங்கிரஸ் மூன்றாம் அணியை கண்டுதான் பயப்படுகிறது. மோடி போன்றவர்களை கண்டு அறுபது ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்டய போட்ட சக்திவாய்ந்த காங்கிரஸ் ஒருபோதும் பயபடாது. கலைஞர் இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல சானக்கியவாதியும் கூட. எப்படி கூட்டணியை கலையாமல் பார்த்து கொள்வது. ஆட்டம் போடும் தலைவர்களை எப்படி அடக்கி வாழ்வது என்று நன்கு அனுபவம் கொண்டவர்.
Rate this:
134 members
2 members
45 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
12-ஜூலை-201304:11:45 IST Report Abuse
Baskaran Kasimaniதாத்தா காலத்துக்கு பின்னர் திமுக இருக்குமா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி......
Rate this:
13 members
0 members
104 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.