E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது: சுப்ரீம் கோர்ட் மீண்டும் ஒரு அதிரடி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

12 ஜூலை
2013
08:22
பதிவு செய்த நாள்
ஜூலை 11,2013 23:30

புதுடில்லி: "சிறையில் அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

"குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவியை ரத்து செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குற்றப் பின்னணி உடையவர்கள், பார்லிமென்ட் மற் றும் சட்டசபைகளில் நுழைவதைத் தடுக்கும் வகையில், நேற்றும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. "போலீஸ் காவலில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என, பாட்னா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தேர்தல் ஆணையமும் மற்றும் சிலரும், அப்பீல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பட்நாயக் மற்றும் முகோபாத்யாய் அடங்கிய, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு விவரம்:


சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களோ அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்களோ, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாது. ஓட்டுப்போட உரிமையுள்ளவர் மட்டுமே, தேர்தலில் போட்டியிட முடியும். சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருப்பவர்களும், ஓட்டுப் போடும் உரிமையை இழந்து விடுகின்றனர். அதனால், அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் பிரிவு, 4 மற்றும் 5ல், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவோருக்கான தகுதி பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்று, தேர்தலில் போட்டியிடுபவர், வாக்காளராக, அதாவது ஓட்டுப் போட தகுதி உடையவராக இருக்க வேண்டும் என்பது. அதே சட்டத்தில், பிரிவு, 62 (5)ல், "ஒருவர் குற்ற வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலோ அல்லது போலீஸ் காவலில் இருந்தாலோ, அவர் எந்தத் தேர்தலிலும் ஓட்டுப் போட முடியாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இந்த மூன்று பிரிவுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களோ அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்களோ, தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே சரியானது. "ஓட்டுப் போட உரிமையில்லாதவர், வாக்காளர் அல்ல. அதனால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது' என, பீகார் ஐகோர்ட் அளித்த தீர்ப்பு சரியானதே. அதில், எந்த குறைபாடும் இல்லை. இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadavul - Nagpur,இந்தியா
13-ஜூலை-201313:38:04 IST Report Abuse
kadavul ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும். ஏனென்றால் ஆதாரம் இல்லாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது. அப்போது தான் அரசியல் கொஞ்சமாவது சுத்தமாவதற்கு வாய்ப்பு உள்ளது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Kumar - Trichy,இந்தியா
12-ஜூலை-201306:02:21 IST Report Abuse
Kumar அரசு இதற்க்கு மாற்றாக சட்டம் இயற்ற முடியும். இதற்க்கு பதிலாக, உண்மையில் இந்த நீதிமன்றம் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய விரும்பினால், இதைப்போல வரும் case யை சீக்கிரம் முடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
Rate this:
2 members
0 members
33 members
Share this comment
Cancel
12-ஜூலை-201306:01:20 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் எனவே வெளியில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் உத்தமர்கள் (முக்கியமாக நீதிபதிகள் கே ஜி பால கிருஷ்ணன், தினகரன் ராமசாமி போன்றவர்கள்)
Rate this:
3 members
0 members
14 members
Share this comment
Cancel
bhavani - adyar,இந்தியா
12-ஜூலை-201305:44:45 IST Report Abuse
bhavani ஒரு கட்சி சிறைக்கு சென்றவங்களுக்கு பதவி உண்டு என அறிவித்துள்ளதே ....
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
12-ஜூலை-201305:20:47 IST Report Abuse
Samy Chinnathambi விஜயகாந்தை தேர்தலில் போட்டி இடாமல் செய்ய ஒருவர் முதல்வர் நாற்காலியில் இருந்து இந்த சட்டத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று தீவிர முயற்சி செய்து வருகிறார்.
Rate this:
8 members
0 members
89 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
12-ஜூலை-201304:04:55 IST Report Abuse
Baskaran Kasimani வாக்களிக்கும் உரிமை எல்லா இந்தியா குடிமகனுக்கும் இருக்கிறது என்று பாராளுமன்றம் சட்டம் கொண்டு வரும். அதன் பின்னர் இந்த நீதிமன்ற தீர்ப்பு அர்த்தமற்றதாகிவிடும். அரசியல்வாதிகளுக்கு தெரியாத தந்திரமா இந்த நாட்டில் இருக்கிறது? அடிப்படையில் பார்த்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் இருக்க வேண்டும். தவிரவும் தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும் கூட நீதிமன்றத்தின் அனுமதியின் பெயரில் ஒருவரை காவலில் வைத்து விசாரித்தால் அவரை குற்றவாளி என்று யாரும் உடனே முடிவு செய்து விட முடியாது. குற்றவாளி என்று முடிவு செய்ய நீதிமன்றத்தால் மட்டுமே முடியும்.
Rate this:
3 members
1 members
52 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-ஜூலை-201301:48:24 IST Report Abuse
Ab Cd தேவையில்லாத சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அளித்து, ஹீரோவாக காட்டிக்கொள்வதை விட்டு விட்டு, பல ஆண்டுகளாக, பல வழக்குகள் தேங்கிக்கிடக்கும் நிலையில், கோர்ட்டின் கோடைகால விடுமுறையை ரத்து செய்துவிட்டு எல்லா வழக்குகளையும் விரைவாக தீர்த்து வைத்து, கோர்ட்டுக்கு போனால் விரைவாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தினால் நல்லது.
Rate this:
20 members
1 members
369 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
12-ஜூலை-201306:17:01 IST Report Abuse
Samy Chinnathambiஅடடா தன்னுடைய தலைவரின் குடும்பத்துக்கு ஒரு பாதிப்பு என்ற உடன் என்னமா ரத்தம் துடிக்குது...உங்கள மாதிரி தொண்டன் இருக்கிற வரைக்கும் மாங்கொட்ட தாத்தா தான்யா உலக பணக்காரன்.....
Rate this:
76 members
0 members
85 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-ஜூலை-201301:41:19 IST Report Abuse
Ab Cd வாய்தா வாங்கிகொண்டு காலம் கடத்தும், அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்பளிக்க வேண்டும்.
Rate this:
4 members
1 members
50 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
12-ஜூலை-201306:17:18 IST Report Abuse
Samy Chinnathambiஇதனை ஆமோதிக்கிறேன்.....
Rate this:
4 members
0 members
28 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-ஜூலை-201301:34:32 IST Report Abuse
Ab Cd ஜெயலலிதா போன்ற எதிரிகட்சிகளை பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஆட்சியாளர்களுக்கு இந்த சட்டம் ஒரு வரபிரசாதம். 40 MP தொகுதிகளிலும் எதிர்கட்சி வேட்பாளர்களை, தனது விசுவாசிகளை வைத்து புகார் கொடுத்து, தேர்தல் சமயத்தில் கைது செய்து, போட்டியிட முடியாமல் செய்துவிடுவார். அப்புறம் என்ன நாளை நமதே... அந்த 40-ம் நமதே..
Rate this:
9 members
1 members
41 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
12-ஜூலை-201306:19:30 IST Report Abuse
Samy Chinnathambiதீர்ப்பு கொடுத்து இருபத்து நாலு மணி நேரம் கூட தாண்டல. அதுக்குள்ளே அந்த எதிர்க்கட்சி தலைவரை பழி வாங்க தனது அல்ல கைகளை விட்டு புகார் மனு அளிக்க செய்துள்ளார். அடுத்து அட்டகத்தி தளபதி தான் குறி என்று நினைக்கிறேன்.....
Rate this:
7 members
0 members
38 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
12-ஜூலை-201301:25:20 IST Report Abuse
Vettri பொதுவாக அரசியல் என்பது சாக்கடை என்று ஒரு கருத்து அனைவர் மத்தியிலும் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புகள் சாக்கடையை சுத்தம் செய்யும் முதல் படி என்று நம்புவோம்.
Rate this:
1 members
0 members
194 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.