High court stays caste-based rallies in Uttar Pradesh | உ.பி.,யில் ஜாதி மாநாடுகள், ஊர்வலங்களுக்கு தடை | Dinamalar
Advertisement
உ.பி.,யில் ஜாதி மாநாடுகள், ஊர்வலங்களுக்கு தடை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

லக்னோ: உத்தர பிரதேசத்தில், ஜாதியின் பெயரில் நடத்தப்படும், ஊர்வலங்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம், அதிரடி தடை விதித்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேசத்தில், லோக்சபா தேர்தலுக்கான, அரசியல் கட்சிகளின் பிரசாரம், கடந்த ஆண்டே துவங்கி விட்டது. லோக்சபா தேர்தல் தேதி, இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள், தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அதிர்ச்சி அளித்துள்ளன.

இந்நிலையில், அந்த மாநிலத்தின் பெரும்பான்மை சமுதாயங்களில் ஒன்றான, பிராமண சமுதாயத்தினரின் ஓட்டுகளை கவர, முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான, மாயாவதி பல ஏற்பாடுகளை செய்துள்ளார். சமுதாயத்தில் நலிவடைந்த நிலையில் இருந்த, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை மேம்படுத்த, கன்ஷிராமால் துவக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியை, ஓட்டு வங்கி அரசியலுக்காக, அதன் இப்போதைய தலைவர், மாயாவதி, மாற்றி அமைத்துள்ளார். எப்படியும் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என, அவர் துடிப்பதால், பிராமணர்களை ஈர்க்குமாறு, தன் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக, 40 மாவட்டங்களில், "பிராமின் பாய்சாரா சம்மேளன்' என்ற பெயரில், பிராமணர்களை கட்சியில் சேர்க்கும் மாநாடுகள் துவங்க உள்ளன.


ஜாதி பிரச்னை:


இது போல், பிற கட்சிகளும், பிற சமுதாயத்தினரின் ஓட்டுகளை கவரும் வகையில், வியூகம் வகுத்து செயல்படுவதால், உத்தர பிரதேசத்தில் ஜாதிப் பிரச்னை அதிகமாக தலைதூக்கியுள்ளது. இந்நிலையில், மோதிலால் யாதவ் என்ற வழக்கறிஞர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், பொதுநலன் கோரும் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மாநிலத்தில், ஜாதியின் பெயரில் நடத்தப்படும் மாநாடுகள், ஊர்வலங்களுக்கு தடை கோரிஇருந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதிகள், உமா நாத் சிங் மற்றும் மகேந்திர தயாள், நேற்று பிறப்பித்த உத்தரவில், ஜாதியின் பெயரில் எவ்வித ஊர்வலங்களும், மாநாடுகளும் நடத்தக் கூடாது என தெரிவித்தனர். மேலும், நான்கு முக்கிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு, "நோட்டீஸ்' அனுப்பி, அவர்களின் கருத்துகளை கேட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
13-ஜூலை-201306:53:26 IST Report Abuse
ராம.ராசு மெத்தப் படித்த அதி மேதாவிகளும், சாதிச் சாக்கடையில் ஊரிபோய் இருக்கின்ற நமது தேசத்தில், ஒடுக்கப்பட்ட சாதிகள் என்றும் ஆதிக்க மனோபாவம் கொண்ட சாதிகள் என்றும் இருப்பது வெளிப்படையானது. ஆதிக்க சாதிகள் நடத்துகின்ற மாநாடுகள் தங்களது பலத்தை ஆளும் கட்சிக்கு காட்டுவதற்காக... ஆனால் ஒடுக்கப்பட்டவர்களின் மாநாடு அவர்களையும் மனிதர்களாக, சக நாட்டினர்களாக பார்க்கவேண்டும் என்பதை அரசுக்கும், ஆதிக்க சாதி மன உணர்வு படைத்தவர்களுக்கும் தெரிவிக்கவே. சாதி வேறுபாடுகளே இல்லாமல், சாதிச் சண்டைகளே இல்லாமல் இருக்கின்ற சூழலை அரசுகள் உருவாக்குமேயானால் இதுபோன்ற மாநாடுகள் தேவைப்படாமலே போகும். அனைவருமே ஓடுகிறார்கள்... வசதி படைத்தவர்கள் வயிற்றைக் குறைப்பதற்காக... வசதி இல்லாதவர்கள் வயிற்றை நிரப்புவதற்காக.. இரண்டையும் ஒன்றாகச் சொல்வதாகவே இருக்கிறது இந்தத் தீர்ப்பின் தீர்வு. சாதி மதம் பார்க்காமல் சக மனிதர்களாக, நல்லவர் கேட்டவர் என்ற நோக்கில் குறைந்தபட்சம் சாதி மறுப்பு காதல் திருமணங்களையாவது ஒத்துகொள்கின்ற மனோபோவாம் நமது தேசத்தவர்களுக்கு வந்தால் மட்டுமே இது போன்ற தீர்ப்புகள் நடைமுறைக்கு சாத்தியப்படும். மற்றபடி அரசியல் காரணங்களுக்காக சாதிகளை இணைத்துக்கொள்வது மேம்போக்காக தவறு என்று சொன்னாலும், அந்த அடிப்படையில்தான் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கின்றன என்பது வெளிப்படையான ரகசியம். போராட்டங்களால், மாநாடுகளால் குழப்பம் ஏறபடுகிறது என்று சொன்னால் அங்கு ஆளும் கட்சிக்கு போதிய நிர்வாகத் திறன் இல்லை என்பதையே காட்டுகிறது.
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Kumar - Trichy,இந்தியா
12-ஜூலை-201305:58:49 IST Report Abuse
Kumar இது வரவேற்க படவேண்டிய ஒன்று மட்டும் இல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் அமல் படுத்தப்பட வேண்டிய ஒன்று.....இப்போது அரசு செய்ய வேண்டிய பெரும்பாலான விழயங்களை நீதிமன்றமே செய்கிறது. இது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம் இந்த அரசுக்கு. அது சரி அவர்களுக்கு ஏது வெட்கம், மானம், ரோழம்....
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
12-ஜூலை-201301:38:51 IST Report Abuse
Vettri இந்த தடை உத்தரவை தமிழ் நாட்டிலும் நடை முறைக்கு கொண்டு வரவேண்டும். மேலும் ஜாதி வெறியை தூண்டும் சங்கங்கள், ஜாதி கட்சிகள் ஆகியவற்றை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
Rate this:
0 members
0 members
14 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
12-ஜூலை-201301:06:53 IST Report Abuse
தமிழ் சிங்கம் இந்தியா ஒரு சுதந்திர நாடு. இங்கு ஜாதி அடிப்படையில் ஊர்வலங்கள் சென்றால், அதை தடுக்க முடியாது. மக்கள் எதை வைத்தும் ஊர்வலம் போவதற்கும் கூட்டம் கூடுவதற்கும் உரிமை உள்ளது. இந்த ஹை கோர்ட் உத்தரவு, சுப்ரீம் கார்டில் வெகு எளிதில் தோற்கடிக்கப்பட்டு விடும். அரசியல்வாதிகள் ஜாதி அடிப்படையில் கூட்டுகிறார்கள் என்றால், மக்கள் ஏன் போகிறார்கள்? ஏதாவது ஒரு கூட்டத்தில் தங்களின் கோரிக்கைகள் நடைபெறுமா என்ற ஏக்கத்தில் செல்கிறார்கள். கோரிக்கை வைக்கிறார்கள். அதை தடுக்க உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு, சுப்ரீம் கோர்டில் தோற்துவிடும்.
Rate this:
12 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்