E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013,00:34 IST
கருத்துகள் (2)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஊட்டி: நிலச்சரிவுப் பட்டியலில் உள்ள நீலகிரி மாவட்டத்தில், வெள்ள அபாயம் மற்றும் பேரிடர் பாதிப்புகளை அறிய, முதன் முறையாக, "முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்' கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் அமலுக்கு வரவுள்ளது.


தமிழகத்தில் நிலநடுக்க பட்டியலில் உள்ள மாவட்டங்களின் நீலகிரி மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. மாவட்டம் முழுக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.மேலும், கனமழையின் போது, மண், நிலச்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளாக 108 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நோக்கில், மாவட்டம் முழுக்க 500 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மற்றும்

அபாயகரமான பகுதிகள், ஜி.பி.ஆர்.எஸ்., முறையில் கண்டறிந்து, அவர்களுக்கு உணவுப் பொட்டலம், ஆடைகள் வழங்குவது, அந்த இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் மற்றும் பேரிடர் பாதிப்பு எச்சரிக்கையை முன்கூட்டியே தெரிவிக்க, புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, நீலகிரி மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்ட அலுவலர் பிராங்கிளின் கூறியதாவது: பேரிடர்

பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில், ஒரு கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்து, அங்கு மொபைல் போன், பேட்டரி "பேக் அப்', ரேடியோ, மைக் வைக்கப்படும்; ஊரின் மையப்பகுதியில் உயரமான கம்பத்தில் ஒலி பெருக்கிகள் வைக்கப்படும். அந்த கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள மொபைல் போன் எண்கள், "டிரிக்கர்'

Advertisement

முறையில், பேரிடர் மேலாண்மையை மேற்கொள்ள உள்ள அலுவலர்களின் எண்களுடன் இணைக்கப்படும். குறிப்பிட்ட, அந்த இடத்தில் பெய்யும் மழையின் அளவு, 10 நிமிடத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு, வெள்ள அபாயம் உட்பட பேரிடர்களை ஏற்படுத்தும், என தெரியவந்தால், அலுவலர்களின் மொபைல் போன் மூலம், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்; அந்த தகவல், சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஒலி பெருக்கியில் கேட்கும் வகையில் தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவிர, அகில இந்திய வானொலி நிலையத்தின் உதவியுடன், மழை நிலவரம், வெள்ள அபாயம் குறித்த அறிவிப்பை அவ்வப்போது ரேடியோவில் ஒலிபரப்பி, அதை, ஒலி பெருக்கி மூலம் அப்பகுதியில் உள்ள மக்கள் கேட்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம், முதற்கட்டமாக வெள்ளோட்ட அடிப்படையில், 10 இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு, பிராங்கிளின் கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
H .Akbar ali - Riyadh,சவுதி அரேபியா
12-ஜூலை-201314:28:30 IST Report Abuse
H .Akbar ali   இந்த தொழில் நுட்பம் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்திக்கொண்டிருக்ககூடிய ஒன்று தான். ஆனாலும் தமிழகத்தில் முயற்சி செய்திருப்பது வரவேற்க்ககூடிய ஒன்று. வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜூலை-201308:56:29 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்போ நீங்க அந்த இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக வீடு கட்டுபவர்களை கண்டுக்க மாட்டீங்க......... வீணாக உயிர்களை பலி வாங்காதீர்கள்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.