டில்லி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்| Dinamalar

டில்லி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

Added : ஜூலை 12, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

"அரசு உதவி பெறாத நர்சரி பள்ளிகளுக்கு, கட்டாய கல்வி சட்டம் பொருந்தாது' என, டில்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட், விசாரணைக்கு ஏற்றது.
மத்திய அரசு, ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கல்வியை அடிப்படை உரிமையாக்கி, 2009ல், சட்டம் இயற்றியது. இதன்படி, இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. "தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழைக் குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்' என்றும், இந்த சட்டம் கூறுகிறது. இந்நிலையில், டில்லி ஐகோர்ட், சமீபத்தில் பிறப்பித்த ஒரு உத்தரவில், "மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டம், அரசு உதவி பெறாத, நர்சரி பள்ளிகளுக்கு பொருந்தாது. ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன் பெறும் வகையில் தான், கட்டாய கல்வி சட்டம் உள்ளது' என, கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, "சமூக நீதி' என்ற, தன்னார்வ தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், "டில்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு தவறானது. ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் தான், கட்டாய கல்வி சட்டம் பொருந்தும் என, ஐகோர்ட் கூறியுள்ளது. இந்த உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள், எச்.எல்.டாட்டூ, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த நீதிபதிகள், இதுகுறித்து, விளக்கம் அளிக்கும்படி, டில்லி மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை