பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

செம்மொழி நிறுவன தலைமைக்கும், பணியாளர்களுக்கும் இடையே தொடரும் மோதலால், நிறுவனம் துவங்கப்பட்ட நோக்கம் நிறைவேறாமல், அழிவின் விளிம்பிற்கு செல்கிறது.

நிர்வாக சீர்கேடு:பண்டைய தமிழ் சமூகம் பற்றிய தகவலை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல், தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்தல், பிற திராவிட மொழிகள் மீது, தமிழ் மொழி ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து ஆராய்தல், பண்டைய தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த செய்திகளை, குறும்படங்களாக தயாரித்தல், இணையம் மூலம் தமிழை கற்பித்தல் உள்ளிட்ட பல பணிகளை, இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.செம்மொழி நிறுவனத்தில், கடந்த சில ஆண்டுகளாக ஏற் பட்டுள்ள, நிர்வாக சீர்கேட்டால், நிர்வாகத்தினருக்கும், பணியாளர்களுக்கும்

இடையே, அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

போராட்டம்:

தினக் கூலிகளாக உள்ள, செம்மொழி நிறுவன பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; 60 ஆராய்ச்சி மாணவருக்கு, உதவித் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி என, பல கட்ட போராட்டங்களை, பணியாளர்களும், மாணவர்களும் நடத்தி வருகின்றனர்.நிறுவன வளர்ச்சிக்காக, மத்திய அரசு வழங்கிய நிதியை, முழுமையாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல நிர்வாக தவறுகளை சுட்டிக் காட்டியும், பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் போராட்டங்களால், நிர்வாக பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்கள், 81 பேருக்கு, ஊதியமாக ஆண்டுக்கு, 2.5 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இருந்தும் எந்த ஒரு பணிகளும் சிறப்பாக நடக்கவில்லை.கடந்த 6 ஆண்டு கால பணியில், 20 புத்தகங்களும், ஐந்து குறுந்தகடுகளும் மட்டுமே வெளிவந்துள்ளன.

"மெமோ' :

இதுகுறித்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பணியாளர் சங்கத் தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:ஆறு ஆண்டுகளாக தினக் கூலி அடிப்படையில் பணியாற்றி வருபவர்கள், பணி நிரந்தரத்துக்காக காத்திருக்கும் போது, நிரந்தர ஊழியரை நியமிக்க, நிறுவனம் சார்பில் விளம்பரம் செய்யப்படுகிறது.இதை எதிர்த்து, பணியாளர் தரப்பில், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து,

Advertisement

பணியாளர் தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள பணியாளர்களை வெளியேற்ற, பொய்யான புகார்களைக் கூறி, நடவடிக்கை எடுக்கின்றனர். செம்மொழி நிறுவனத்திற்கு, இதுவரை நிரந்தர இயக்குனர் நியமிக்கவில்லை. ஐ.ஐ.டி., நிர்வாக அதிகாரிகளே, பொறுப்பு இயக்குனராக தொடர்கின்றனர்.தமிழுக்கு முற்றிலும் தொடர்பில்லாத பொறியாளர்களையும், கல்விசாரா நிர்வாக அதிகாரிகளையும் நியமிப்பதால், இந்நிறுவனத்தை துவங்கியதன் நோக்கமே, அழிந்து வருகிறது.இரண்டாண்டு போராட்டகாலத்தில், அனைத்து பணிகளும் முடங்கியதால், 50 புத்தகங்கள் வெளிவர வேண்டிய நிலையில், 20 புத்தகங்கள் மட்டுமே வந்துள்ளன. செம்மொழி நிறுவன தலைவராக உள்ள, முதல்வர், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால், நன்றாக இருக்கும்.இவ்வாறு, ஆரோக்கியதாஸ் கூறினார்.

இதுகுறித்து ஐ.ஐ.டி., நிறுவன பதிவாளரும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் (பொறுப்பு) பூமா கூறுகையில், ""பணியாளர்களின் குறைகளை களைய, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பள பிரச்னைக்கும் விரைவில் தீர்வு காணப்படும். பணியாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே உள்ள பிரச்னைகள் களையப்பட்டு, விரைவில் சுமுக நிலை திரும்பும்,'' என்றார்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meekannan - Chennai,இந்தியா
13-ஜூலை-201316:08:01 IST Report Abuse
meekannan செம்மொழியை பற்றிய ஒரு அவலச்செய்தியை தினமலரில் வெளிவந்து அதற்கு இதுவரை வாசகர்கள் யாரும் ஒரு கருத்தும் தெரிவிக்காதது நெஞ்சில் ஈட்டியை பாச்சிய வேதனையை அடைந்தேன். ஆங்கிலத்தில் கட்டாயமாக எழுத வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவை அரசாங்கம் வாபஸ் வாங்கிய செய்திக்கு ஓராயிரம் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. செம்மொழி எனும் சிறப்பு அந்தஸ்து பெற்ற நம் தாய்மொழியாம் தமிழ்மொழி அது அழிந்து கொண்டிருக்கும் செய்தியை தினமலரில் படித்தவாசகர்கள் அதை கவனிக்காமல் விட்டதை காணும் போது தமிழ்நாட்டில் தமிழுக்கு ஒரு நாதியும் இல்லை தமிழநாட்டில் தமிழச்சிக்கு பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்யவைத்துள்ளது. இலங்கை தமிழன் என் தமிழன் என்று குருதி தெறிக்க பல வகையில் வசனங்கள் பேசு பழ. நெடுமாறன, வைகோ, சீமான் இவர்கள் இப்போது தமிழகத்தில் தான் வாழ்கிறார்களா இல்லை இலங்கை போய்விட்டார்களா? செம்மொழி ஒன்றும் கருணாநிதி மொழி அல்ல அந்த இனத்தில் பிறந்ததினால் அந்த மொழியின் சிறப்பால் உள்ள ஈர்ப்பினால் அதில் புலமை பெற்று அவரின் இலக்கிய இலக்கனதில் ஏதேனும் ஒரு பிழை குற்றம் கண்டுபிடிக்க இது வரை எந்த தமிழ் அறிஞனும், புலமையுடையவனும் பிறந்ததே இல்லை. தமிழ் மொழி தான் கருணாநிதி என்று என்னும் அளவிற்கு தமிழ் மீது பாசமும் பற்றும் கொண்டுள்ளவர். தமிழும் அவரும் எனபது அவர் சரீரமும் மூச்சும் என்று ஒப்பிட்டால் மிகையாகாது. அரசியலில் அவர் எத்தநிமுறை தோற்றிருந்தாலும் தமிழில் அவர் தோற்றதே இல்லை. தமிழ் என்றால் கலைஞர் என்னும் அளவிர்கல்லவா அவர் வாழ்ந்துள்ளார். எங்களுக்கு கலைஞர் தமிழ் என்பது இருகண்கள் அதில் ஒன்றில் தூசிவிழுந்தாலும் மற்ற கண்ணில் வேதனை வரும். எங்கள் இருகண்களை அழிக்கும் இந்த பச்சை திரோகியை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அசிப்போம். வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
13-ஜூலை-201310:50:18 IST Report Abuse
Thangairaja தமிழகத்து அம்மாவுக்கு தமிழ்னாலே பிடிக்காது அதிலும் செம்மொழி தமிழ்னா........அட போங்கப்பா.
Rate this:
Share this comment
Hari - Chennai,இந்தியா
13-ஜூலை-201318:24:46 IST Report Abuse
Hariஇது மத்திய அரசால் நடத்தப்படும் நிர்வாகம், இதில் அம்மா எங்கே வந்தார்கள்? செம்மொழி என்று ஊரை ஏமாற்றி கொண்டிருப்பவர்கள் தமிழுக்காக எந்த விததில் இந்த பிரச்சனையை ஏன் தீர்க்காமல் இருந்தார்கள்? 6 வருடங்களாக தொடரும் பிரச்சனை என்றால் அந்த சமயம் ஆட்சியில் இருந்த தமிழ் காவலர்கள் ஏன் ஒன்றும் செய்யாமல் இருந்தார்கள்? உங்களின் கருத்து அந்த அம்மாவை எதாவது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
Navaneetha krishnan - Vedasandur,இந்தியா
13-ஜூலை-201310:12:32 IST Report Abuse
Navaneetha krishnan மத்த துறைகளில் இருக்கும் எந்த அதிகாரிகள் வேலை செய்கிறார்கள் ? எங்களை வேலை செய்ய சொல்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201308:53:12 IST Report Abuse
Srinivasan Kannaiya பூமா சும்மா இருக்க கூடாது... கம்மென்னு எதாவது செய்து செம்மொழியை காப்பாற்றுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Ambedkumar - Chennai,இந்தியா
13-ஜூலை-201306:29:01 IST Report Abuse
Ambedkumar இந்த செம்மொழி ஆய்வு நிறுவனத்தை பேசாமல் இழுத்து மூடுங்கள் பெரிய இழப்பு ஒன்றும் வந்துவிடப்போவதில்லை நமது வரிப்பணமாவது மிச்சமாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.