Difficult to block international porn sites: Centre to SC | ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு| Dinamalar

ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
Difficult, block, international, porn, sites,Centre, SC,ஆபாசம், இணையதளம்,தடை,மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட், கெடு

புதுடில்லி:"சர்வதேச ஆபாச இணையதளங்களை, தடை செய்வது கஷ்டமான காரியம்; இது குறித்து பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசித்து, முடிவு செய்வதற்கு இன்னும் சில காலம் ஆகும்' என, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

"பெருகி வரும் ஆபாச இணையதளங்களால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கின்றன. இவற்றை தடை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கமலேஷ் வஸ்வானி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு, தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்' முன், சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கருத்தை ஏற்று, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பினர்.அதில், "ஆபாச இணையதளங்கள் முழுவதையும் தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தனர்.இந்த வழக்கு, நான்கு மாதங்களுக்கு பின், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெய் சிங் கூறுகையில், "இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை; இது பற்றி பல்வேறு அமைச்சகங்கள் மட்டத்தில் விரிவாக ஆலோசிக்க வேண்டியுள்ளது. இதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது' என்றார்.

மனுதாரர் சார்பில், ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் கூறியதாவது:இணையதளங்களில், ஆபாச இணையதளங்கள் ஏராளமாக உள்ளன; அவற்றில், குழந்தைகளை நிர்வாணமாகக் காட்டும் இணையதளங்கள் பெருகியுள்ளன; அத்தகைய இணையதளங்களைப் பார்க்கும் சிறுவர் சிறுமியர், அது போன்ற குற்றங்களில் ஈடுபட, வாய்ப்பு இருக்கிறது. டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆபாச படங்களை பார்த்து தான் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.ஆபாச வீடியோக்களை பார்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், இணையதள சட்டங்கள் உள்ளன. இதை தடை செய்வதற்கு வழி இல்லை. மார்க்கெட்டில், 20 கோடி ஆபாச வீடியோக்கள் சாதாரணமாக கிடைக்கின்றன. இவை, இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு சுற்றுக்கு விடப்படுகின்றன.இவ்வாறு அவர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:ஆபாச இணையதளஙகளில், குறிப்பாக குழந்தைகளை நிர்வாணமாக காட்டும் இணையதளங்களை தடை செய்ய வேண்டும். இதற்கு, மத்திய அரசுக்கு நான்கு வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இதற்குள் மத்திய அரசு தன் முடிவை அறிவிக்க வேண்டும்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vandu murugan - chennai,இந்தியா
13-ஜூலை-201323:44:09 IST Report Abuse
vandu murugan இன்றைய கால கட்டத்தில் ஆசா பாசம் இருக்கோ இல்லையோ இந்த ஆபாசம் மட்டும் தாராளமாக எனகென்ன என்று வளர்ந்து நிற்கிறது
Rate this:
Share this comment
Cancel
senthil nathan - vollure  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூலை-201322:46:09 IST Report Abuse
senthil nathan சந்தேசம் நன்றி இந்தி்யா வழ்கா
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
13-ஜூலை-201317:14:32 IST Report Abuse
Prabhakaran Shenoy கர்நாடக சட்டசபையில் மந்திரிகள் படம் பார்க்கலாம். அதற்க்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுங்கள். பிறகு மற்றவர்களுக்கு போதிக்கலாம். ஆபாசத்தில் "பாசம்" உண்டு,
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
13-ஜூலை-201315:00:42 IST Report Abuse
ganapathy சூடான் சிறிய நாடு (பொருளாதார ரீதியிலும், தொழில் நுட்பத்திலும்). இவர்கள் இணைய தளங்களை தடை செய்து உள்ளனர். மென்பொருளில் நிறைய சாதித்த நாடு இந்தியா. நாராயணமூர்த்தி, நில்கேனி, மற்றும் பல நிபுணர்கள் இந்தியாவில் உள்ளனர். மென்பொருளை (மைக்ரோசாப்ட்) வடிவமைப்பதிலும் இந்தியர்கள் அதிகம் பணி புரிகின்றனர். குற்றம் நடைபெறாமல் தடுப்பதில், நமக்கு அக்கறை இல்லை. இந்த மத்திய அரசு உருப்படாத அரசு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாய் சொல்லில் இவர்கள் வீரர்கள். அவ்வளவே.
Rate this:
Share this comment
Cancel
Gokul - Bangalore,இந்தியா
13-ஜூலை-201314:28:42 IST Report Abuse
Gokul என்ன முடியாது? தினமும் உக்காந்து நெட்ல ஆபாச வார்த்தைகளை கொடுத்து தேடுங்கள்...பல வெப்சைட் லிங்க்குகள் வரும்...ஒவ்வொன்றாக பார்த்து அனைத்தையும் தடை செய்ய வேண்டியது தானே? ஒரு 10 பேர் கொண்ட குழு இது போன்ற வெப்சைட் அட்ரஸ்களை ஒரு லிஸ்ட் எடுத்து தடை செய்ய அதிக பார்த்தால் பத்து நாள் கூட ஆகாது...என்னாங்க டா டேய்...facebook ல போடுற எல்லா கருத்துகளையும் தணிக்கை செய்ய முடியும் அப்படின்னு சொல்லுரிங்க இத பண்ண முடியாதா?
Rate this:
Share this comment
Cancel
Amjath - Dammam,சவுதி அரேபியா
13-ஜூலை-201313:39:11 IST Report Abuse
Amjath அராபிய நாடுகளில் எவ்வாறு கட்டுபடுட்டுகிரார்கள்.?? இந்தியாவில் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்...
Rate this:
Share this comment
sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-201316:24:28 IST Report Abuse
sing venkyஅரேபிய நாடுகளில் இத்தகைய இணையதளங்களை கட்டுபடுத்துவது இந்திய கனி பொறி வல்லுனர்கள் தான். இதை இந்தியாவிலும் கட்டுபடுத்துவது மிக சுலபம். நிச்சயமாக இதனை கட்டுபடுத்தும் வல்லமை பெற்ற வல்லுனர்கள் இந்தியாவில் அதிகம். உலகிலேயே முதலிடத்தில் பாகிஸ்தான், இரண்டாவது இந்தியா, இந்த கேவலம் விரைவில் கட்டுபடுத்த பட்டு ஒழிக்கப்பட வேண்டும். இதனால் பயனையும் மேற்கத்திய நாடுகள் நம் மனித வளத்தை மனித மூளையை மழுங்கடித்து தன் ஆளுமையை நிலை நாட்டிக்கொள்ள ஒரு (வியாபார தந்திரம் கொண்ட) ஆயுதமாகவே கையாளுகின்றன. ஒரு நாட்டை அழிக்க அணு ஆயுதமோ, போரோ தேவை இல்லை, அதன் மொழியையும், கலாச்சாரத்தையும் அழித்து விட்டாலே அந்த இனம் அழிந்து விடும். இந்த இரண்டையும் தான் செய்கின்றன இத்தகைய வெப்சைட்டுகள். ..உடனே தடை செய்வது சுலபம் (தகுதியான அறிஞ்யர்கள் இருக்கிறார்கள்) செய்வது அவசியம். அதனையும் உடனே தடை செய்வது மிக மிக அவசியம்....
Rate this:
Share this comment
Subramanian S - Northampton, UK,இந்தியா
13-ஜூலை-201322:53:27 IST Report Abuse
Subramanian Sகாமெடி பண்ணாதீங்க பாஸ்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201308:40:00 IST Report Abuse
Srinivasan Kannaiya குற்றங்கள் நடப்பதை தடுக்கவேண்டும் என்றால் அவசியம் ஆபாச இணைய தளங்களுக்கு தடை கொண்டு வரவேண்டும்.. இல்லை என்றால் இந்தியா குற்றம் செய்பவர்களின் இருப்பிடமாக ஆகிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
13-ஜூலை-201308:01:21 IST Report Abuse
venkat Iyer வெப் சைட்டுக்கள் மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிட்டன. கல்வி சம்பந்தமான இலவச vebsaaittukaLil பக்கத்தில் கட்டம் கட்டி மோசமான web சைட்டுகள் viLampara படுத்துகின்றன.குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.நடவடிக்கை அவசியம்
Rate this:
Share this comment
Cancel
Manidhan - India,இந்தியா
13-ஜூலை-201306:55:20 IST Report Abuse
Manidhan ஆபாச videokkalai ஒழிப்பதினால் வோட்டு கிடைத்தால் அது வுடனே செய்வார்கள். பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு குடுத்தால் தானே பெண்கள் வோட்டு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
13-ஜூலை-201306:53:40 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் ஒப்புக்குத் தடை செய்து கணக்குக் காண்பித்தால் போதுமே . என்றைக்கு கோர்ட் நேரடி நடவடிக்கை எடுத்துள்ளது ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.