Case against DMK's former ministers rejected | தி.மு.க., "மாஜி' அமைச்சர்கள் மீதான வழக்குகளுக்கு உயிரூட்டும் முயற்சி தோல்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., "மாஜி' அமைச்சர்கள் மீதான வழக்குகளுக்கு உயிரூட்டும் முயற்சி தோல்வி

Added : ஜூலை 12, 2013 | கருத்துகள் (12)
Advertisement
Case, DMK, former, minister, rejected,தி.மு.க., மாஜி, அமைச்சர், வழக்கு, முயற்சி, தோல்வி

சென்னை : தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்ய, கால தாமதம் ஏற்பட்டதை, ஏற்கக் கோரிய மனுக்களை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

கடந்த, 1996 - 2001 வரை, தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்களாக கோ.சி.மணி, நேரு, ஐ.பெரியசாமி பதவி வகித்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக, மூவர் மீதும், முன்னாள் அமைச்சர் ரகுபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு மீதும், அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில், கோ.சி.மணியை, கும்பகோணம், செஷன்ஸ் கோர்ட் விடுதலை செய்தது. மற்ற, நான்கு பேரையும், சம்பந்தப்பட்ட மாவட்ட கோர்ட்கள், வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டன. 2006 மற்றும், 2007ல், இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த உத்தரவை எதிர்த்து, அப்போது அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், இவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, உயிர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட கோர்ட்டில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்ய காலதாமதம் ஆகியுள்ளதால், இந்த காலதாமதத்தை ஏற்று, அப்பீல் மனு தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு, ஐகோர்ட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களை விசாரித்த, நீதிபதி அருணா ஜெகதீசன் பிறப்பித்த உத்தரவு:மாநில அரசு தெரிவித்துள்ள காரணம், திருப்தியளிக்கவில்லை. 2011ம் ஆண்டு முதல், கடந்த ஆண்டு, மார்ச் மாதம் வரை, அப்பீல் மனுக்களை தாக்கல் செய்ய, முறையான நடவடிக்கை இல்லாததற்கு, எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. புதிய அரசு வந்தவுடன், அப்பீல் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக கூறும் காரணம், போதுமானதாக இல்லை.குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயம் செய்திருப்பது, கோர்ட் நடவடிக்கைகளில் உறுதித் தன்மை ஏற்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், அதில் ஒழுங்கு முறையை பேண வேண்டும் என்பதற்காக தான். இது, மாநில அரசு ஏஜன்சியின், விருப்பு, வெறுப்பை பொருத்தது அல்ல.இந்த வழக்கைப் பொறுத்தவரை, அரசு குற்றவியல் வழக்கறிஞரின் கருத்துக்கு எதிராக, எதற்காக மறுஆய்வு செய்யப்பட்டது என்பதற்கான காரணத்தை தெரிவிக்காமல் செயல்பட்டதை, பாராட்ட முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, அரசியல் உள்நோக்கம் இருப்பதை, இது காட்டுகிறது. எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி அருணா ஜெகதீசன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantha Sayanam Murthy - tirunelveli.,இந்தியா
13-ஜூலை-201314:34:00 IST Report Abuse
Anantha Sayanam Murthy எந்த ஒரு அரசுக்கும் ,நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறதென்றால் அந்த அரசு பாரபட்சமுடனும், நெறி தவறிய வழியில் ஆட்சியை சுயநலத்துடன் நடத்துகிறது என்று தானே அர்த்தம். அப்படிப்பட்ட ஆட்சியை தேர்தல் ஆணையம் கலைத்துவிட்டு, மறுதேர்தல் நடத்தலாமே. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாக இழந்தாலும், அது மக்களின் நலனுக்கு எதிராக ஆட்சி செய்பவர்களின் சுரண்டல்களைவிட குறைவாகவே இருக்கும். எனவே, தேர்தல் ஆணையம் இதற்கான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காக்க முன்வருமா ?
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
13-ஜூலை-201312:26:26 IST Report Abuse
MJA Mayuram ஜே மீதான சொத்துகுவிப்பு வழக்கு வெற்றியடைய உள்ள நிலையில் (இதுக்கு மேல வாய்த வாங்கினா கின்னசுக்குதான் அனுப்பவேண்டும்) திமுகாவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் தோல்வியை தழுவியுள்ளது அரசின் இயலாமையே காட்டுகிறது....குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாதாம் புதிய சட்டம் இனிமேல் ஒ.பன்னீர் செல்வம் வாழ்க குரல் கேட்க தொடங்குமே...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201311:25:19 IST Report Abuse
Srinivasan Kannaiya இவர்கள் மீது அவர்கள் வழக்கு போடுவதும், அவர்கள் மீது இவர்கள் வழக்கு போடுவதும்.... வாடிக்கை ஆகிவிட்டது நல்லது செய்வார்கள் என்று நம்பி வாக்களித்த நாம் வேடிக்கை பார்பதை விட்டு வேறு என்ன செய்ய முடியும்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
13-ஜூலை-201308:33:45 IST Report Abuse
N.Purushothaman உண்மையாலுமே இவர்கள் எல்லாம் அறிவியல் பூர்வமாக திடுடியவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை....இருந்தும் என்ன செய்வது??? வேண்டும் என்றே வழக்கு இழுத்தடிக்க பட்டு மேல் முறையீடு செய்ய முடியாமல் போய்விட்டது....வழக்கை ஊத்தி மூட வேண்டியதை தவிர வேறு வழி இல்லை ...திருடியவன் எல்லாம் தண்டிக்க பட்டு இருந்திருந்தால் தமிழகம் ஏன் இன்று இந்நிலைமையில் உள்ளது???? 2006 முதல் 2011 வரை மைனாரிட்டி தி.மு.க ஆட்சி செய்தது...அதை பயன்படுத்தி வழக்கிலிருந்து தப்பித்துவிட்டாயிற்று... காலதாமதம் பற்றி சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதா என்பதை நீதிபதி தெளிவு படுத்தவில்லை...மாறாக அவர்களே அரசியல் காழ்புணர்வு என்று முடிவு செய்து விட்டார்கள்..ஆனால் போன ஆட்சியில் செய்யப்பட்ட கால தாமத்தை பற்றி வாயே திறக்கவில்லை...
Rate this:
Share this comment
V Nath - PCMC,இந்தியா
13-ஜூலை-201313:47:58 IST Report Abuse
V Nathவழக்கை இழுத்தடிப்பதில் வரலாறு காணாத கின்னஸ் சாதனை படைத்து பெங்களூருவில் இன்றளவும் நடந்துகொண்டிருக்கும் ஜெயலலிதா சசிகலா மற்றும் உறவினர்களின் சொத்து குவிப்பு வழக்கை நினைத்து கருத்து கூறலாமே...
Rate this:
Share this comment
Cancel
Pushparaj Ramakrishnan - Mannachanallur,இந்தியா
13-ஜூலை-201308:04:28 IST Report Abuse
Pushparaj Ramakrishnan இது போன்ற வழக்குகளின் செலவுத்தொகையை குற்றவாளிகளிடம் வசூலிக்க சட்டம் இயற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
M.P.Kaliyamoorthy - puducherry,இந்தியா
13-ஜூலை-201306:21:15 IST Report Abuse
M.P.Kaliyamoorthy பொய் வழக்கு செலவுகள். இந்த பணத்தை மின்சாரம் நிறைவு அடைய செலவிடலாமே. கட்சி விட்டு கட்சி மாற கை மாறும் பணமூட்டைகளை மக்கள் முன்னேற்றத்திற்கு செலவிடலாமே. ஒட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை, தன் சுய லாபம் வேண்டி பணத்திற்கு ஆசைப்பட்டு, கட்சி விட்டு கட்சி மாறும் தரம் கேட்ட அரசியல் வாதிகளை அடுத்த தேர்தலில் ஒட்டு கேட்க்க வந்தால், மக்களே அவர்களை ஓட ஓட விரட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Adelaide,ஆஸ்திரேலியா
13-ஜூலை-201306:09:55 IST Report Abuse
Ramesh இது ஆளும் கட்சிக்கு ஹை கோர்ட் அடிக்கும் முதல் ஆப்பு அடுத்தது பெங்களூர் சிறப்பு கோர்ட் அதிமுக தலைவிக்கு கொடுத்தவுடன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஆட்சியை இழந்து கொடநாட்டில் இருந்தபடியே வாழ்க்கையும் வழக்கும் நடத்தலாம்
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
13-ஜூலை-201305:27:55 IST Report Abuse
Samy Chinnathambi கோர்ட் சொன்னது சரி...இவர்கள் அப்பீல் செய்ய வேண்டும் என்றால் எதிர்கட்சியாக இருக்கும்போதே அப்பீல் செய்து இருக்கலாமே...கொடநாட்டில் ஐந்து வருடம் குப்புற அடித்து தூங்கி விட்டு ஆளும் கட்சியாக இருக்கும்போது மட்டும் எதிர்க்கட்சி காரர்கள் மீது வழக்கு பதிவு செய்வது நீதியினை நிலை நாட்டுவதாக கருத படாது. பழி வாங்கும் நடவடிக்கையாக மட்டுமே பார்க்க படும்...இவர்கள் குற்றம் செய்தது உறுதியானால் அதிமுக எதிர்கட்சியாக இருந்த பொது கூட நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கலாமே...
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
13-ஜூலை-201305:07:45 IST Report Abuse
Pannadai Pandian ஒன்னும் இல்லாத கேசுகளை ஊத்தி மூடுங்க.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
13-ஜூலை-201302:13:36 IST Report Abuse
தமிழ் சிங்கம் மிகவும் நல்ல தீர்ப்பு. திமுக தலைவர்களின் மீது பொய் குற்றங்களை அள்ளி வீசி, ஜெயிலில் தள்ளி, அவர்களில் தேர்தலில் நிற்க விடாதபடி செய்து, லோக்சபா தேர்தலில் ஜெயித்து விட நினைத்த ஜெயாவின் தலையில் ஐகோர்ட் மண்ணை அள்ளி போட்டுள்ளது. கனிமொழி எம்பி பதவியில் தேர்ந்தெடுக்கப்பட்டது திமுகவின் 2013 ஆம் ஆண்டின் முதல் வெற்றி. இப்போது ரெண்டாம் வெற்றி. இனி வெற்றி மீது வெற்றி பெற்று 2014 இல் நாற்பதுக்கு நாற்பது திமுக அள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை