தமிழில் வாதாடியதால் வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:இரு வழக்குகளில், மனுதாரர்களின் வழக்கறிஞர், தமிழில் வாதிடுவேன் என்பதை, ஏற்க முடியாத நிலையில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கோவில்பட்டி, ஆயிஷா பானு தாக்கல் செய்த மனுவில், "கணவர் பக்கீர் மைதீன், சவுதி அரேபியாவில், கூலித்தொழிலாளியாக வேலைக்குச் சென்றார். அங்கு பாஸ்போர்ட்டை தொலைத்து, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார். அவரை மீட்டு, ஒப்படைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி அடக்கச்சி சுந்தரராஜன், "விளவங்கோடு மிடாலனில் வீடு கட்ட, வரைபட அனுமதி வழங்க, கருங்கல் ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.

மனுக்கள், நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் வழக்கறிஞர் பகவத்சிங், "தமிழில் என் வாதத்தை முன்வைக்க விரும்புகிறேன்' என்றார்.

ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன, "பெஞ்ச்' ஆங்கிலத்தில் தான் வாதங்களை முன்வைக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளதாக, நீதிபதி கூறி, அந்நகலை பார்வையிடுமாறு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

"இல்லை... தமிழில் தான் வாதிடுவேன்' என, வழக்கறிஞர் தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்களில், வழக்காடு மொழியான ஆங்கிலத்தில் தான், வாதங்கள் இருக்க வேண்டும் என, அரசியலமைப்புச் சட்டம், தெளிவாக கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டில், ஒரு வழக்கில், ராஜ்நாராயணன், "இந்தியில் தான் வாதிடுவேன்' என்றார். இதை நீதிபதிகள் சில நிமிடங்கள் செவி மடுத்தனர். அட்டார்னி ஜெனரல் தப்தாரி, எதிர்ப்புத் தெரிவித்தார். ராஜ்நாராயணனின் வாதம் புரியவில்லை என, நீதிபதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர்."இந்தியில் பேச அனுமதிக்க முடியாது. ராஜ்நாராயணன் ஆங்கிலத்தில் பேசலாம் அல்லது வழக்கறிஞர் மூலம் வாதிடலாம் அல்லது வாதங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுக்கலாம். ஏனெனில், இக்கோர்ட்டின் வழக்காடு மொழி ஆங்கிலம். ராஜ்நாராயணன் சம்மதம் தெரிவிக்காவிடில், கோர்ட் இவ்வழக்கில் தலையிட முடியாது' என்றனர் நீதிபதிகள்.சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, இங்கும் பொருந்தும். அரசியலமைப்புச் சட்டமும் இதை வலியுறுத்துகிறது. இவ்வழக்கில், மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கையை, ஏற்க முடியாத நிலையில், கோர்ட் உள்ளது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
17-ஜூலை-201304:29:03 IST Report Abuse
Skv தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு அங்கீகாரம் இல்லியே
Rate this:
Share this comment
Cancel
Rajkumar Sakthivelu - coimbatore,இந்தியா
13-ஜூலை-201306:04:27 IST Report Abuse
Rajkumar Sakthivelu ஆங்கிலத்துக்கு தான் கட்டவுட்டு .. தமிழுக்கு கெட் அவுட்டு ....
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
13-ஜூலை-201305:10:03 IST Report Abuse
Samy Chinnathambi இதற்கு ஒரே தீர்வு நீதிபதிகளின் தரங்களை உயர்த்துவது தான். நீதிபதிகளுக்கு ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் தெரிந்து இருக்க வேண்டும். நீதிபதியின் தரத்தினை உயர்த்துவதை விட்டுவிட்டு ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் ஆங்கிலம் கற்று கொடுப்பது இப்போது எளிதான காரியம் அல்ல...கால போக்கில் இன்னும் இரண்டு சந்ததி தாண்டி அனைத்து இந்தியரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்கள். ஆனால் அப்போது உலக அளவில் பலருக்கு ஹிந்தி தமிழ் தெரிந்து இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
13-ஜூலை-201304:25:42 IST Report Abuse
Sekar Sekaran பொதுவாகவே நமது தமிழகத்தில் பலரின் படிப்பு தமிழ் மொழி வழியேதான் நடக்கின்றது. மேற்கோள் காட்ட எவ்வளவோ சான்றுகள் கிடைக்கலாம்..ஆனால் ஒருசில வார்த்தைகள் ஆங்கிலத்திலேயே வழக்குரைஞர் சொன்னால் கூட அதனை புரிந்துகொள்ள இயலாத நீதியரசர்கள் எனக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை என்று ஒப்புகொள்வாரா? அந்தந்த மாநில மொழிகளில் வழக்காடும் உரிமையை பெற்று வழக்காடுதலே மனுதாரருக்கு அனுகூலம் தரும். சுப்ரீம் கோர்டில் வேண்டுமானால் ஆங்கில மொழியினை பயன்படுத்தலாம். நீதியரசர் செய்தது ஒப்புகொள்ள முடியாதது. உண்மையாகவே வழக்குரைஞற்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்தால்..அவர் வாதாடுவதை நீதியரசர் எப்படி செவி மடுப்பார்..அப்போ அந்த வழக்குரைஞர் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டியதுதானா? ஏற்ப்புடைய முடிவல்ல..தள்ளுபடி செய்தது தகாத ஒன்று. இதெர்க்கெல்லாம் இந்த வழக்குரைஞர்கள் போராட மாட்டார்கள்..என்ன படித்தார்களோ..
Rate this:
Share this comment
Cancel
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
13-ஜூலை-201303:25:03 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan இந்தி, வங்காளம் முதலான மொழியினர் தங்கள் மாநிலங்களில் தங்கள் மொழிகளில் வாதிட உரிமை இருக்கும் பொழுது தமிழ்நாட்டில் தமிழில் வாதிட மறுக்கப்படுவது அறமற்ற செயலாகும். மத்திய அரசிற்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி வரும் முதல்வர், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வும் தலையிட்டு உரிமை பெற்றுத் தர வேண்டும். இத்தகைய போக்கு நாமிருக்கும் நாடு நமதில்லை என்பதை உணரச் செய்து தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Rate this:
Share this comment
Cancel
Mr y - thamizhnadu,இந்தியா
13-ஜூலை-201303:22:26 IST Report Abuse
Mr y இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிரைய உள்ளது.. தமிழ் போன்ற தனி தேசிய இனங்களின் உரிமையை விற்றுத்தான் நாம் இன்று தேசியம் பேசி வருகின்றோம்... இன்றைய இளம் சிறார்களுக்கு ஆங்கிலம்தான் தாய் மொழி.... இரண்டாவது மொழி ஹிந்தி என்றும் ... தமிழ் என்பது யாருக்கும் தெரியாது என்பதோடு டிவியில் வரும் மலையாளிகளின் தமிழ்ங்க்ளிஷ்தான் வீட்டு பாஷா.. இது சுதந்திரம் கிடைத்தும் நாம் இன்றும் வேற்று மொழிக்கு அடிமைதான் என்பதை காட்டுகிறது...
Rate this:
Share this comment
Cancel
s.irudayam amburajan - TRICHY,இந்தியா
13-ஜூலை-201302:27:23 IST Report Abuse
s.irudayam amburajan ஒருதடவை இரண்டு தடவை அல்ல 5 தடவை முதல்வராக இருந்து தமிழை வியாபாரமாக செய்து தன் குடும்பத்தை செல்வத்தில் கொழிக்க வைத்த வாய்ச்சொல் வீரரை கேளுங்கள் . அவர் ஆயிரத்து ஒன்றாவது தடவையாக தன உயிரை தமிழுக்காக கொடுப்பேன் என்பார். அவர்தான் தலைவர் கலஞர் கருணா
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான்.... - பேங்காக்,தாய்லாந்து
13-ஜூலை-201302:09:24 IST Report Abuse
மாயவரத்தான்.... ஆக பாதிக்கப்பட்டது அந்த மனுதாரர்கள் தான்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
13-ஜூலை-201301:58:03 IST Report Abuse
தமிழ் சிங்கம் தமிழ்நாட்டில் தமிழில் வாதாட உரிமை இல்லையா? இது அவமானமாக உள்ளது. கலைஞர் பிரதமர் ஆனால், நிச்சயம் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். அந்தந்த மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் வாதாட உரிமை கொடுப்பார்.
Rate this:
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
13-ஜூலை-201301:38:51 IST Report Abuse
R.Subramanian நல்ல வேலை ஹிந்தி மொழியில் வழக்கு நடந்து இருந்து தமிழில் நடக்கவில்லை என்றால் இந்நேரம் தமிழ் உணர்வாளர்கள் பார்த்தாயா தமிழா இந்திய அரசு திட்டமிட்டு தமிழையும் தமிழனை அழிக்கிறது என்று கூக்குரல் எழுப்பி இருப்பார்கள். அதற்கு வழி இல்லாமல் போய் விட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்