இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தர்மபுரி:"இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை' என, அவரது காதல் மனைவி திவ்யா, கலெக்டருக்கு, மனு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த, 4ம் தேதி, இளவரசன், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள, ரயில் தண்டவாளத்தில், பிணமாக கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் இளவரசன், "என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என, எழுதிய கடிதம் மற்றும் விசாரணை அடிப்படையில், இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என, போலீசார் அறிவித்தனர்.இளவரசனின் தந்தை இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள், இளவரசன் கொலை செய்யப்பட்டதாக கூறி வருகின்றனர். "இளவரசனின் இறுதிச் சடங்கில், திவ்யா கலந்து கொள்ளலாம்' என, இளவரசனின் தந்தை, இளங்கோ கூறியிருந்தார்.இதற்கிடையில், சி.பி.ஐ., விசாரணை கோரியும், சென்னை அழைத்து வந்து, திவ்யாவுக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் என்றும், தாக்கல் செய்த மனு, கடந்த, 8ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற, "டிவிஷன் பெஞ்ச்' நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர், "இளவரசனின் இறுதி சடங்கில், திவ்யா குடும்பத்தினர் கலந்து கொள்ள விரும்பினால், கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.கடந்த, 9ம் தேதி, இது குறித்து விளக்கம் கேட்டு, நீதிமன்ற உத்தரவை, வி.ஏ.ஓ., செல்வராஜ், இளவரசனின் தந்தை, இளங்கோவிடம் வழங்கினார். அதே நாளில், தாசில்தார் விஜயா, செல்லன்கொட்டாயில் உள்ள, திவ்யாவிடம், நேரடியாக வழங்கினார்.

நேற்று முன்தினம் திவ்யா, சீல் வைக்கப்பட்ட ஒரு மனுவை, தன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த, போலீஸ் அதிகாரி மூலம், தர்மபுரி கலெக்டர் விவேகானந்தனுக்கு அனுப்பி வைத்தார். அந்த மனு குறித்த விவரங்களை, அதிகாரிகள் கூற மறுத்து விட்டனர்.இது குறித்து, வருவாய் துறை வட்டாரங்களில் கூறும் போது, "திவ்யா, இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விரும்பவில்லை' என, மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தனர். இதனால், இளவரசனின் இறுதி சடங்கில், திவ்யா கலந்து கொள்ள மாட்டார் என, தெரிகிறது.

திவ்யா அனுப்பிய மனுவை, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திவ்யா கடந்த, 6ம் தேதி, செல்லன்கொட்டாய் வந்தார். மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் கவுன்சலிங் கொடுத்தனர். இளவரசன் மரணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள், இளவரசன் தொடர்பான விசாரணை உள்ளிட்டவற்றை, பத்திரிகை மூலம் அறிந்து கொள்ளும் திவ்யா, இளவரசனின் இறப்பு சோகத்தில் இருந்து மீளவில்லை என, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.இளவரசன் எழுதிய கடிதம் குறித்து, மிகவும் வேதனை அடைந்த திவ்யா, இளவரசனின் முடிவு அவசரமானது என, கூறி வருகிறார். ஆனால், வெளிப்படையாக எந்த கருத்தையும் கூற முடியாமல், தவித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (41)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivakumar - Permbalur,இந்தியா
13-ஜூலை-201311:47:45 IST Report Abuse
Sivakumar காதலுக்கு கண்ணு மட்டும் தான் இல்லன்னு கேள்வி பட்டு இருக்கேன்,,,,ஆனா இங்க,,,,,,,,,,,,????????????????? காதல் கணவன் இறுதி சடங்கக்கு செல்ல மாட்டேன் என்கிற காதல் மனைவி,,,,என்னத்த காதல் பன்னுரன்களோ,,,
Rate this:
Share this comment
Cancel
Sembiyan Thamizhvel - THIRUVALLUR,இந்தியா
13-ஜூலை-201311:28:41 IST Report Abuse
Sembiyan Thamizhvel காதலுக்குப்பின் திருமணம் அல்லது பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணம் என்பது,, வயதுவந்த ஆண், பெண், மற்றும் இவர்கள் இருவரது பெற்றோர்கள் மட்டுமே முடிவு எடுக்கவேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், சொந்தக்காரன், சாதிக்காரன், நாட்டாண்மை, நாறிப்போனவன், கட்சிக்காரன். கட்சி/சாதிசங்க தலைவன், இவர்களுக்கு என்ன வேலை.? இந்த பயல்களைஎல்லாம் கூப்பிட்டால், கழுதையை சுமந்தவன் கதை தான் நடக்கும். [இவர்களுக்கு, மணமக்கள் நல்வாழ்வைத்தவிர, வெட்டி / வறட்டு கவுரவம், பந்தா, போன்றவற்றோடு, ஊரை குட்டிசுவராக்கி அலைவது ரொம்பவே பிடிக்கும்.] இவன்களை எல்லாம் அடித்து விரட்ட வேண்டும். திருமண பேச்சுக்குக்கூட அழைப்பது மிகத்தவறு. இந்தமாதிரி ஆட்களால்தான், விஷயம் என்பது விவகாரமாகி, விபரீதத்தில் முடிவடைகிறது. ..... தோளில் துண்டு போட்டுக்கொண்டு அலையும் வறட்டு பந்தாக்கூட்டத்தை தவிர்த்துவிடுங்கள். ....முக்கால்வாசி பிரச்சினை ஓய்ந்துவிடும். [பிரச்சினைக்குரியவர்கள் இந்த கூட்டமே - அது எந்த மதமானாலும் சரி, சாதியானாலும் சரி...] செம்பியன் தமிழவேள், திருவள்ளூர்.....
Rate this:
Share this comment
Cancel
Gnana SundaR - Dammam,சவுதி அரேபியா
13-ஜூலை-201311:18:30 IST Report Abuse
Gnana SundaR ஒரு வாசகர் சொல்லி இருந்தார், திவ்யாவிற்கு ஒரு வேலை அரசு சிவாரிசு செய்ய வேண்டுமென.. என்ன அவசியம்? இளவரசனின் உண்மை காதலை கொச்சை படுத்திய பெண்.. ஒரு கணவனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இயலாத பெண் ஒரு தமிழச்சியா.. திவ்யா அவரிடம் மனைவியாக வாழவில்லையா? இவரிடம் உண்மையான காதல் இருந்து இருந்தால் கண்டிப்பாக இறுதி சடங்கில் கலந்து கொண்டு இருப்பார்.. இன்னொரு வாசகர் சொல்லி இருந்தார், அவருக்கு வீட்டில் பார்க்கும் பையனை மணமுடித்து நடந்ததெல்லாம் அவர் மறக்க வேண்டுமென.. காதலின் அர்த்தம் தெரியாதவர்கள் போலிருக்கு இந்த ஜாதியால் இந்த தமிழ் நாட்டில் அழிவு தான் மிச்சம்.. இங்கு காதல் தோற்கடிக்க படவில்லை கொச்சை படுத்தப்பட்டன...
Rate this:
Share this comment
Cancel
sudhapriyan - riyadh,சவுதி அரேபியா
13-ஜூலை-201311:11:34 IST Report Abuse
sudhapriyan இத வச்சி எப்போ படம் எடுக்க போறாங்க .... காதல் என்பது புனிதமானது ( ஒரே ஜாதியில் காதலித்தால் ) இனிமேல் பெண்களுக்கும் பெயருக்கு பின்னால் ஜாதி பேரை போட்டால் அடுத்த ஜாதிக்காரன் காதலிக்க தயங்குவான் .... மருத்துவர் அய்யா அடுத்த போராட்டத்துக்கு தயாராகலாம்.
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
13-ஜூலை-201311:06:40 IST Report Abuse
Ashok ,India எதோ பெரிய தியாகி இறந்தது போல பத்திரிக்கைகள் கொடுக்கும் செய்திகள் ரொம்ப ஓவர். நாட்டுக்காக உயிர் துறந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் அவர்கள்,கார்கில் போரில் நாட்டுக்காக உயிர் கொடுத்த ராணுவ வீர்கள், பாகிஸ்தான் வெறியர்களால் தலை துண்டிக்கப்பட இந்திய ராணுவ வீரர், சமீபத்தில் உத்ரகாண்டில் மீட்பு பணியில் உயிர் துறந்த மதுரையை சேர்ந்த பிரவீன் போன்றோருக்கு கொடுக்காத முக்கியத்துவம் இந்த காதல் விவாகரத்திற்கு பத்திரிக்கைகள்,நீதி மன்றம் அளிப்பது வேதனைக்குரியதாகும். இந்த மாவீர்கள் உடல் பரிசோதனையை நீதிபதிகள் பார்த்தார்களா ?? ராஜீவ் அவர்கள் உடலை எத்தனை முறை மருத்துவ குழு பரிசோதனை செய்தது??
Rate this:
Share this comment
Cancel
Karthi Keyan - tamilnadu.dgl,இந்தியா
13-ஜூலை-201311:01:10 IST Report Abuse
Karthi Keyan ஒரு வேளை இளவரசனின் இறுதி சடங்கிற்கு போக கூடாது என்று அவர்களது சாதி வெறியர்கள் கூட அவரை தடுத்திருக்கலாம் அல்லவா
Rate this:
Share this comment
Cancel
Ma. PARAIYARAIVON - Thoothukudi,இந்தியா
13-ஜூலை-201310:55:40 IST Report Abuse
Ma. PARAIYARAIVON இளவரசனின் முடிவு அவசரமானது என்று திவ்யா சொல்கிறார். அப்படியானால் 'இனி இளவரசனோடு சேர்ந்து வாழ மாட்டேன்' என்றும் நீதிமன்றத்தில் 'இளவரசனை பார்த்து பேச விருப்பம் இல்லை' என்று சொல்லி முகத்தை திருப்பி வைத்துக்கொண்டும் வந்தாரே இந்த திவ்யா, அது நிதானமாக சிந்தித்து எடுத்த முடிவா?. இளவரசன், தன்னுடைய காதல் நாடகக்காதல் அல்ல என்று நிரூபித்து விட்டார். திவ்யாவும் தன்னுடைய காதல் நிஜக்காதல் தான் உண்மையானது தான் என்று நிரூபிக்க வேண்டுமானால், அவருக்கு இருக்கும் ஒரே ஒரு கடைசி வாய்ப்பு இளவரசனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வது மட்டும் தான். அதைத்தவிர வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
13-ஜூலை-201310:35:38 IST Report Abuse
appu வெளிப்படையாக எதையும் கூற முடியாத திவ்யா மூன்றாம் நபரின் வார்த்தைக்கு கட்டுப்டுகிறார் என்பது மட்டும் புரிகிறது....எதுக்கு இந்த பொழப்பு?அட சீ...
Rate this:
Share this comment
Cancel
s. selvaraj - coimbatore,இந்தியா
13-ஜூலை-201310:35:36 IST Report Abuse
s. selvaraj நம் நாட்டு பத்திரிக்கைகளுக்கு வேறு செய்தியே இல்லையா, இதையே இன்னும் எத்தனை நாளுக்கு வெளியிடுவீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
sathish - villupuram,இந்தியா
13-ஜூலை-201310:16:02 IST Report Abuse
sathish ஜாதி வேண்டாம் என்று பேசுகிறவர்கள், ஜாதி வேண்டாம் என்று போராட்டம் நடத்த தயாரா ... வெறும் மேடை பேச்சு மட்டும் போதாது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்