தீயணைப்பு வாகனம் மோதிதொழிலாளி பரிதாப பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு வாகனம் மோதிதொழிலாளி பரிதாப பலி

Added : ஜூலை 13, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே திடீர் தீ விபத்தில் சிக்கிய குடிசைகளில் பற்றிய தீயை அணைத்து முடித்துவிட்டு, திரும்பிய தீயணைப்பு வாகனம், அவ்வழியே நடந்து வந்த விவசாய தொழிலாளி மீது மோதியதில் பரிதாபமாக பலியானார்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் ஜீவா வடக்கு தெருவில் மின்கசிவால் நேற்று மதியம் 12 மணியளவில் விவசாய கூலி தொழிலாளி ரகுபதி என்பவர் கூரைவீடு தீப்பிடித்தது.அப்போது காற்று வீசியதால் அடுத்தடுத்து தீ பரவியதில் குணசேகரன், பாலதண்டாயுதம், பன்னீர்செல்வம், கோபிநாதன், ஜெகநாதன் உள்பட தொழிலாளர்கள் ஏழு பேர்களுக்கு சொந்தமான குடிசைகளும் முழுவதும் எரிந்து நாசமாயின. இதில், 15 லட்சம் மதிப்பில் அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின.திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து சென்று, தீயை அணைக்கும் பணியை முடித்து விட்டு மீண்டும் திருத்துறைப்பூண்டிக்கு திரும்பிய தீயணைப்பு வாகனம் மேட்டுப்பாளையம் கடைத்தெரு பகுதியில், விவசாய தொழிலாளி தம்புசாமி, 50, மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே தம்புசாமி பரிதாபமாக இறந்தார்.திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இதையடுத்து, தீயில் குடிசைகள் எரிந்த பகுதியை, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கலெக்டர் நடராஜன் ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை