1,489 பயனாளிகளுக்குநலத்திட்ட உதவி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,489 பயனாளிகளுக்குநலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஜூலை 13, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில், 1,489 பயனாளிகளுக்கு ஒரு கோடியே, 18 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.இதில், கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., மணிமாறன் முன்னிலை வகித்தார். விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நலயுதவி வழங்கும் விழாவில் வருவாய்த்துறையின் கீழ், உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகை என, 1,319 பேருக்கு 62 லட்சத்து, 74 ஆயிரத்து, 250 ரூபாய் மதிப்பிலும், சமூகநலத்துறை சார்பில், ஏழை பெண்கள் திருமண உதவித்தொகை திட்டத்தில் 4 கிராம் தங்க நாணயம், 156 பேருக்கு 15 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், திருமண உதவித்தொகை 54 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், செயற்கைக்கால், மூன்று சக்கர சைக்கிள் 8 பேருக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில், தையல் இயந்திரம் 6 பேருக்கு 21 ஆயிரத்து, 600 ரூபாய் மதிப்பிலும் என, மொத்தம் 1,489 பயனாளிகளுக்கு ஒரு கோடியே, 18 லட்சத்து, 15 ஆயிரத்து, 850 ரூபாய் மதிப்பில் நலயுதவிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் காமராஜ் பேசுகையில், ""அனைத்து மக்களும் அனைத்து திட்டங்களையும் பெற முதல்வர் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். குறிப்பாக, கல்விக்காக முன்னுரிமை அளித்து, 17 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். இதுபோன்ற திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை