E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பேய் நகரமானது கேதார்நாத்: சுப்ரீம் கோர்ட்டில் அரசு தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

13 ஜூலை
2013
08:32
பதிவு செய்த நாள்
ஜூலை 13,2013 08:30

புதுடில்லி : உத்தரகண்ட் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட கேதார்நாத், பேய்களின் நகரம் என சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு பதில் அளித்த உத்தரகண்ட் அரசு வக்கீல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் கூடுதல் அட்வகேட் ஜெனரல், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக் மற்றும் எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் ஆஜராகி உத்தரகண்ட் அரசு மேற்கொண்ட வரும் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்னும் ஏராளமானோரின் உடல்கள் கற்களுக்கு இடையேயும், மணலுக்கு அடியிலும் சிக்கி உள்ளது என தெரிவித்தார். மேலும் உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் மற்றும் அதற்கு முன் உத்தரகண்டிற்கு வந்தவர்கள் குறித்த பட்டியலை மற்ற மாநிலங்கள் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரகண்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரிக்கையில், ஜூலை 3ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி உத்தரகண்ட் அரசு செயல்பட்டு வருகிறது எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மீட்புப் பணிகள் மற்றம் உடனடி நிவாரணப் பணிகள் குறித்த விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேதார்நாத் தவிர வெள்ளம் பாதித்த மற்ற பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்புக்கள் சீரமைக்கப்பட்டுள்ளது; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் அல்லது மாநிலத்தின் வேறு பகுதிக்கு சென்று வாழ்வதற்கு தேவையான உதவிகள் ஆகியன செய்யப்பட்டுள்ளன;
கழுதை பாதைகளும், நடைபாதைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது; சீரமைப்பு பணிகளை தொடர்ந்து துண்டிக்கப்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கும் பணி சீராகும்; பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேற சில பேர் மறுத்து வருகின்றனர்; நவம்பர் 3வது வாரத்தில் கோயில்கள் மூடிய பிறகே தாங்கள் அவ்விடத்தில் விட்டு வெளியேறுவது வழக்கம்; வழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாது என தெரிவிக்கின்றனர்; இருப்பினும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு மீட்புப் பணியில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் அவ்விடங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் பகுதியில் இன்னும் ஏராளமானோரின் உடல்கள் சிக்கி உள்ளது; இறந்தவர்களின் ஆவிகள் அங்கு உள்ளதால் தற்போது அது பேய் நகரமாக மாறி உள்ளது. இவ்வாறு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மீட்புப் பணிகள் குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (40)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
14-ஜூலை-201308:23:08 IST Report Abuse
R.BALAMURUGESAN ...ஆம், அல்லல்படும், துன்பப்படும் பக்தர்களிடம் இருந்து பணத்தையும் பொருளையும் மானத்தையும் பிடுங்கிக் கொள்ளும் மனித பேய்கள் நிறைந்த இடம்...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
14-ஜூலை-201307:38:59 IST Report Abuse
LOTUS அரசின் கையால் ஆகாத தன்மையை காட்டுகிறது இந்த வாக்குமூலம்...........எதற்கு இவர்களின் தலைமையில் ஒரு நிர்வாகம்......... முதுகெலும்பு இல்லதா வெட்கம்கெட்ட பயல்கள்........
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
14-ஜூலை-201306:52:42 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இயற்க்கைக்கு முன்னாள் மனிதன் தூசு என்பது மற்றொரு முறை உணர வைக்கப்பட்டுள்ளது,, மீண்டும் அதனை புரிந்து கொள்ளாத மனிதன் ஒரு இடத்தை பேய்களின் இடம் என்று கூறியுள்ளது, மனிதன் தான் செய்த தவறை மறைக்க செய்யும் செயலாய் தான் படுகிறது. ஒன்று மட்டும் திண்ணம், இன்றைய மாநில / மத்திய அரசு வருங்கால இந்திய எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட தெரியாத ஒன்றாகத்தான் இருக்கிறது, அப்படி செய்வார்கள் என்றால் அவர்கள் பேச்சிலும் செயலிலும் ஆகபுர்வம் தெரியும், அழிக்கும் வேகம் மக்களுக்கு உணர்த்தும் ஒரு செயலாய் இருக்காது
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201306:28:18 IST Report Abuse
Mahesh ஆங்கிலத்தில் அப்படி சொல்வார்கள் என்ற விளக்கம் தேவைஇல்லை. ஹிந்துக்களின் புனிதமான இடத்தை அப்படி சொல்லாமல் சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லையா?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
14-ஜூலை-201306:18:18 IST Report Abuse
Skv கோயில்களை கொள்ளை அடிக்கும் சென்ற சில கயவர்களே காரணம் நு நான் சொல்றேன் கண்டுபிடிச்சு எரித்த உடல்களை தவிர இன்னம்ப்பாளர் இடிபாடுகளில் சிக்கி இருக்கவய்ப்புன்ன்டு என்று கூட தெரியாத முட்டாள்களா பே பிசாசு என்று பயம் காட்டுவது , இறந்தவர்க்கு தாம் இறக்கப்போகிறோம் என்று தெரிஞ்சே இருக்காதே ஐயா , அனாயச அகால மரணம் என்று தான் இதை சொல்லுவா , படிச்ச சமத்துகள் இப்படி பேசுவதுதான் அநாகரீகம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Vasu Murari - Chennai ,இந்தியா
14-ஜூலை-201303:00:15 IST Report Abuse
Vasu Murari இது இந்தியாவின் அழிவிற்கு ஒரு அச்சாரம் என்று ஒருவர் எழுதி உள்ளார். இல்லை. இதுபோன்ற இயற்கையை தகர்க்கும் செயல்கள் அனைத்தும் உலகின் அழிவிற்கே ஒரு ஆரம்பம் என்று நான் சொல்கிறேன். அந்த அழிவு ஏற்பட ஒருநாளே கூட போதும். இல்லாவிட்டால் பல ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம். மனிதர்களின் பேராசைகள் ஒழிந்தால்தான் உலகைக் காப்பாற்ற முடியும்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
14-ஜூலை-201300:39:11 IST Report Abuse
TamilArasan காங்கிரஸ் எனும் பேய் நாட்டை ஆண்டாள் அதற்கு நாடு பேய் வீடு போன்றுதான் தெரியும், இதில் உதவி புரிய வந்தவரை ராம்போ அது இது என்று நக்கல் வேறு....
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Cancel
Narayanan Gopalan - Chennai,இந்தியா
13-ஜூலை-201315:54:30 IST Report Abuse
Narayanan Gopalan ஒரு நவீன கால அரசு இந்த நூற்றாண்டில் இப்படிப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது இறப்பு என்ணிக்கை அரசுகள் கூறுவது போல 5000 மோ 10000 மோ அல்ல. இருபது அல்லது முப்பதையும் தாண்டும் லட்சமாக இருந்தாலும் அதிர்ச்சியடையத் தேவையில்லை
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Cancel
jayaraman - coimbatore,இந்தியா
13-ஜூலை-201315:05:04 IST Report Abuse
jayaraman கடவுளை பொதி சுமக்க வைத்துவிட்டனர் .அதன் தாக்கம் தான் இது .......
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Kanagasundaram Sakthidasan - Aden,ஏமன்
13-ஜூலை-201315:02:39 IST Report Abuse
Kanagasundaram Sakthidasan அதுதான் முன்னாள் முதலமைச்சர் சொல்லிவிட்டாரே காடுகளை அழித்து அணைக்கட்டுகள் கட்டியதன் விளைவுதான் பெருவெள்ளமும் பேரழிவும் என்று.முன்கூடியே அம்மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இதுபத்தி எதுவுமே தெரியாத?
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.