எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் போதும்; லஞ்ச நபர் மீது நடவடிக்கை: "விஜ்-ஐ' திட்டம் தமிழகத்தில் அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் போதும்; லஞ்ச நபர் மீது நடவடிக்கை: "விஜ்-ஐ' திட்டம் தமிழகத்தில் அறிமுகம்

Added : ஜூலை 13, 2013 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் போதும்; லஞ்ச நபர் மீது நடவடிக்கை: "விஜ்-ஐ' திட்டம் தமிழகத்தில் அறிமுகம்

சென்னை: லஞ்சம், ஊழல் குறித்து, மொபைல் போன், கணினி மூலம், பொதுமக்கள், எஸ்.எம்.எஸ்., புகைப்படம், வீடியோக்களை அனுப்பும், "விஜ்-ஐ' (விஜிலென்ஸ் ஐ) திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.

லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, மொபைல் போன், கணினி மூலம், எஸ்.எம்.எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும் வகையில், "விஜ் - ஐ' என்ற புதிய திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், கொண்டு வந்துள்ளது. வடமாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், ஊழலுக்கு எதிரான, ஐந்தாவது தூண், மெட், எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து, மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழகத்தில், "விஜ்-ஐ' திட்டத்தை, நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது.

சென்னை, தி.நகர், சர்.பி.டி.தியாகராயா அரங்கில், திட்டத்தை அறிமுகம் செய்து, மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் பேசியதாவது: ஊழல் பற்றி, எல்லா இடங்களிலும் பேச்சு நடக்கிறது. இரண்டு, மூன்று ஆண்டாக ஊழலை ஒழிப்பது குறித்தும் பேச்சு நடப்பது மிக நல்லது. ஊழலை ஒழிக்க, "விஜ்-ஐ' பயன்படும். இதற்கு, 92231 74440 அல்லது, 51964 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், மொபைல் போனுக்கு, விஜ்-ஐ மென்பொருள் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால், யூசர் நேம், ஐ.டி., கிடைக்கும். மொபைல் போன், கணினி மூலம், லஞ்சம், ஊழல் குறித்த, எஸ்.எம்.எஸ்., புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பலாம். இது, ஆவணமாக்கப்பட்டு, உடனடி விசாரணை துவங்கும். நம்பிக்கையோடு அனுப்புங்கள். ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் மட்டுமின்றி, எல்லா தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது: நாட்டில், நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை. பணம் சம்பாதிக்கும் அதிகாரிகளை தான், "நல்லவர்' என்று கருதும் போக்கு காணப்படுகிறது. மத்திய பிரதேசத்தில், அரசுப் பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., கணவனும், மனைவியும், 320 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது தெரிந்து, ஐந்து மாதங்களாகியும், வழக்கு கூட பதியவில்லை. அரசுகள், ஊழலை ஒழிக்கும் என, நினைத்தால் முட்டாள்தனம். நாம் நினைத்தால் முடியும்; அதற்கு இளைஞர்கள் முன் வர வேண்டும். இதற்கு, ஆர்.டி.ஐ., சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

ஊழல் எதிர்ப்பு இயக்க துணைத் தலைவர் அரசு பேசுகையில், ""முன்னேற்றத் திட்டங்களை ஒதுக்கி வைத்து, ஊழல் ஒழிப்பை முக்கியப்படுத்த வேண்டும்."விஜ்-ஐ' என்ற ஆயுதம், இளைஞர்களிடம் தரப்பட்டுள்ளது. எல்லா நிலைகளிலும், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர வேண்டும். "யூத் விங்' தேர்தல் நேரத்தில், "யூத் இங்க்' ஆக மாறி, நல்ல ஆட்சியாளர்களை உருவாக்கினால், ஊழல் ஒழியும். மாநில விஜிலென்ஸ் பிரிவிலும் இந்த நடைமுறை வேண்டும்,'' என்றார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் பேசுகையில், ""ஊழல், லஞ்சம் மட்டும் தான் வெளிப்படையாக, திறமையாக நடக்கிறது. பல இடங்களில், இந்தப் பணிக்கு இவ்வளவு லஞ்சம் என, பட்டியல் போட்டு வசூலிக்கின்றனர். "விஜ்-ஐ 'யில் புகார் கொடுத்தாலும், ஊழல் குறையாது. பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான, பெரிய அளவிலான ஊழல்களை ஒழிக்க வேண்டும்,'' என்றார். முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல், "ஐந்தாவது தூண்' தலைவர் விஜய் ஆனந்த், "யூத் விங்' ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராமநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜூலை-201316:53:58 IST Report Abuse
Nallavan Nallavan தனியார் துறையில் லஞ்சம் அகப்பட்டால் தண்டனை உறுதி என்பதோடு மன்னிப்பு என்ற அம்சமே கிடையாது .... அரசு ஊழியர்கள் என்றால் தினமும் நமக்குக் காணக்கிடைக்கும் செய்தி, "ரசாயனம் தடவப்பட்ட நோட்டை வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் வெளிப்பட்டுக் கைது செய்தனர் ...." என்றெல்லாம் செய்திகள் வருகின்றன கைதுக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்ப் படுத்தப் பட்டாரா? வழக்கு நடந்ததா? சிறை சென்றாரா? என்ற விஷயங்கள் வெளியே வருவதில்லை .... கைது நடந்ததோடு, துறை ரீதியாகக் "கனிவோடு" விசாரிப்பார்கள் "அன்புடன்" எச்சரிக்கை விடப்படும் சில நாட்கள் susp செய்யப்படுவார்கள் மீண்டும் வெளியே வந்து லஞ்சச்சைத் தொடருவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Panneer - Puduchery,இந்தியா
14-ஜூலை-201313:44:07 IST Report Abuse
Panneer மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை கட்டுபடுத்தும் வரம்புக்குள் வராது.. இன் கேயுள்ள தமிழ்நாடு விழிப்பு கண்காணிப்பு ஆணையம் ஆண்டுக்கு சுமார் 25 வழக்குகளுக்கு மட்டும் தன நடவடிக்கை எடுக்கவும் தண்டனை கொடுக்கவும் முடிகிறது.. காவல்துறையும் வரு வாய் துறையும் வாங்கும் லஞ்சம் தமிழக அரசு ஆண்டு வருமானத்தை விட அதிகம் எஸ் எம் எஸ் எல்லாம் தமிழ் நாட்டில் நடக்க கூடிய காரியம் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
Vijayakumar - singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-201312:14:15 IST Report Abuse
Vijayakumar போங்க பாஸ். காமெடி பண்ணிக்கிட்டு.
Rate this:
Share this comment
Cancel
Chandran Pandu - chennai,இந்தியா
14-ஜூலை-201310:50:00 IST Report Abuse
Chandran Pandu தேங்க்ஸ் டு 5 த பில்லர் செய்தி அனுப்புபவர்களுக்கு பதுகாப்பு தரவேன்ன்டும். சந்திரன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201309:39:30 IST Report Abuse
பி.டி.முருகன்    அப்போ நிறைய லஞ்ச பெருச்சாளிகள் வலையில் மாட்டும் என்று சந்தோசப்படலாம். லஞ்சம் வாங்குபவர்களை பிடிக்க உதவும் ரசாயன மை தடவிய ரூபாய் நோட்டுக்களுக்கு அதிகமாக வேலை இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201308:42:07 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லா துறைகளிலும் உள்ளவர்கள் லஞ்சம் வாங்கும் பொழுது மேலிடத்துக்கு கொடுக்கணும் என்று தான் வாங்குகிறார்கள்.. அந்த மேலிடம் அவசியம் அரசியல் வாதிகள் தான் என்று அரசாங்கத்திற்கு தெரியாதா.. முதலில் சம்பரிப்பதர்க்காக அரசியலுக்கு வந்த அரசியல் வாதிகளை இனங்கண்டு வெளிய அனுப்புங்கள்.. எல்லாம் சரியாகிவிடும்..
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
14-ஜூலை-201308:35:35 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy வெரி good
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
14-ஜூலை-201306:23:39 IST Report Abuse
villupuram jeevithan எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் போதும் உடனே நடவடிக்கை என்றால், அனுப்பியவர் மீது நடவடிக்கை பாயப் போகிரது. முதலில் இந்த அச்சத்தை நீக்கினால் தான் மக்கள் முன் வருவார்கள் காட்டிக் கொடுக்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை