இன்று இரவு 12 மணியோடு நிறைவு பெறுகிறது தந்தி சேவை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நூற்றி அறுபது ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்த தந்தி சேவை, இன்று இரவு, 12:00 மணியோடு நிறைவு பெறுகிறது.
இந்தியாவில், மிகப் பழமையான சேவைகளில் ஒன்று, தந்தி சேவை. 1850ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான தந்தி சேவை, கிழக்கு இந்திய கம்பெனியின் பயன்பாட்டுக்கு மட்டும், முதலில் இருந்தது. பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு, 1853ல், தந்தி சேவை அறிமுகமானது. 1854ல், தந்தி சேவைக்கு தனித் துறை துவங்கப்பட்டது. 1855ல், "இந்திய தந்தி சட்டம்' உருவாக்கப்பட்டது. இணையதளம் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், தந்தியின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்தது. சில அரசுப் பணிகளுக்காக மட்டுமே, தந்தி சேவை புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில், "தந்தி சேவை, ஜூலை, 15ம் தேதியுடன் நிறுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. "மிகப் பழமையான மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற, தந்தி சேவையை நிறுத்தக் கூடாது. மக்களுக்கான சேவையில், லாப நஷ்ட கணக்கு பார்க்காமல், சேவையைத் தொடர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பல தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது. தமிழகத்தில், ஐகோர்ட்டிலும் வழக்கு பதியப்பட்டு, அது தள்ளுபடியானது. ஆனால், தந்தி சேவையைத் தொடர, மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், திட்டமிட்டபடி, ஜூலை, 15ம் தேதியுடன், தந்தி சேவை நிறைவு பெறுகிறது. பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க, சென்னை மாவட்டச் செயலர், ஸ்ரீதர் சுப்ரமணியன் கூறுகையில், ""இன்று நள்ளிரவு, 12:00 மணியுடன், தந்தி சேவை, முற்றிலும் நிறுத்தப்படும். தந்தி சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், வேறு பணிகளுக்கு மாற்றப்படுகின்றனர்,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siva - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201311:03:12 IST Report Abuse
siva ஒரு பழமையான தொழில்நுட்பம் நம்மிடமிருந்து விடைபெறுகின்றது என்பது வேண்டுமானால் வருத்தமாக இருக்கும். ஆனால் பழயன கழிதலும் புதியன புகுதலும் கோட்பாடுபடி, இந்த தந்தி சேவை நிறுத்தம் என்பது காலத்தின் கட்டாயம். இன்றைய இணையதள தொழில்நுட்பம், மொபைல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு சேவைகளின் வளர்ச்சி, தகவல் பரிமாற்றத்திற்கான நேரம், செலவுகளை ஒப்பிடும்போது, மக்களே தந்தி அலுவலகத்தை தேடி சென்று, வரிசையில் நின்று, விண்ணப்பதை நிரப்பி, தகவல் அனுப்பபட்டதற்கான ஒப்புகையை பெற்று வருதலை விரும்புவதில்லை. மக்களுக்கான ஒரு சேவையை மக்களே நாடி செல்லாதபோது அதை சேவையை நிறுத்துவதில் தவறொன்றுமில்லை... ஆனால் இந்த மிக பழமையான ஒரு சேவையை, அதற்கான உபகரணங்களை, இன்றைய மற்றும் வருங்கால சந்ததிகள் அறிந்துகொள்ளும் வண்ணம் மக்களின் மனதில் ஒரு நினைவு சின்னமாக ஆக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vasu Murari - Chennai ,இந்தியா
14-ஜூலை-201302:04:29 IST Report Abuse
Vasu Murari இந்த தந்தி சேவை பற்றி வருங்கால சந்ததிகள் அறிந்துகொள்ளும் வண்ணம் ஆணவப் படம் ஒன்றை BSNL தயாரித்து வெளியிடலாம். மேலும், அந்த சேவையின்போது அதன் பயன்பாட்டில் இருந்த இயந்திரங்களையும் உபகரணங்களையும் ஒரு காப்பகத்தில் (museum) வைத்துப் பராமரிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்