E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இளவரசன் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2013
22:23

தர்மபுரி: இளவரசனின் உடலை, நேற்று, டில்லி, "எம்ய்ஸ்' மருத்துவமனை தடய நிபுணர்கள், மூன்று பேர், மறு பிரேத பரிசோதனை செய்தனர். மூன்று மணி நேரப் பரிசோதனைக்கு பின், பெற்றோரிடம், அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.


தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் இறப்பு, பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மறு பிரேத பரிசோதனை செய்ய, மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள், டில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தடய நிபுணர்கள், மூன்று பேர், ஆய்வு செய்ய, உத்தரவிட்டனர். இதையடுத்து, டில்லியில் தடய நிபுணர்கள், நேற்று, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். இளவரசனின் பெற்றோர் இளங்கோ - கிருஷ்ணவேணி ஆகியோரை, டாக்டர்கள் குழுவினர், பிரேத பரிசோதனை அறைக்கு அழைத்து பேசினர். மாலை, 6:00 மணிக்கு, மறு பிரேத பரிசோதனையை, டில்லி டாக்டர்கள் முடித்தனர். 6:10 மணிக்கு, இளவரசன் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இளவரசன் உடல், நத்தம் காலனிக்கு கொண்டு செல்லப்பட்டது. டில்லி டாக்டர்கள் கூறுகையில், "இளவரசன் மரணத்தில் ஏற்பட்ட, 13 சந்தேகங்களுக்காக, ஆய்வு செய்யப்பட்டது. இதன் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்' என்றனர். இளவரசனின் தந்தை கூறுகையில், "இளவரசன் உடல் மறு பிரேத பரிசோதனை செய்தது, எங்களுக்கு திருப்தி அளிக்கிறது' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.KAMALAVEL - SIKKAL ,இந்தியா
14-ஜூலை-201314:07:46 IST Report Abuse
S.KAMALAVEL இனிமேல் எவன் செத்தாலும் பிரச்சனைதான்.
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.