Advertisement
"வைகை'யை மிரட்டிய திருவாரூர் நபர் கைது: 10 நாள் போராட்டத்துக்கு பிறகு விடிவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

13 ஜூலை
2013
23:43
பதிவு செய்த நாள்
ஜூலை 13,2013 23:05

திருச்சி: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவரை, 10 நாள் போராட்டத்துக்கு பின், ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


கடந்த, 3ம் தேதி, திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, மொபைல் போனிலிருந்து, சென்னை ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு, மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். சோதனைக்கு பின், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்து, இரண்டு மணி நேரம் தாமதமாக, ரயில் புறப்பட்டுச் சென்றது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. முதல் நாள் முழுவதும் ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றி திரிந்த அந்த நபர், அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டவர்களை, கெட்ட வார்த்தைகளால் திட்டினார்; அதன்பின், சிம் கார்டை உடைத்து வீசிவிட்டார். அவரது சிம்கார்டு, பி.எஸ்.என்.எல்., என்பதால், உடனடியாக அவரது போட்டாவை போலீசார் பெற்று, அவரை பிடிக்க முயன்றனர். தொடர்ந்து அதே மொபைல் போனை பயன்படுத்தியதால், ஐ.எம்.இ.ஐ., எண் மூலம், அவரை ரயில்வே போலீசார் பின்தொடர்ந்தனர். திருச்சி, தஞ்சாவூர், குளித்தலை, அரக்கோணம், சென்னை, குளித்தலை என, ரயிலிலேயே சென்று போலீசாரை அலைக்கழித்தவரை, இறுதியாக நேற்று காலை, திருச்சி ரயில்வே ஜங்ஷனில், ரயில்வே போலீசார் கைது செய்தனர்.




போலீசார் கூறியதாவது:


திருவாரூர் மாவட்டம், புலிவலத்தைச் சேர்ந்த நாகராஜ், 40; ஓட்டல் தொழிலாளி. திருமணமான சில மாதத்தில், மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன்பின், ஊர் ஊராக சென்று, ஏதாவது ஒரு ஓட்டலில் வேலை செய்வார். குடிபோதையில், யாருக்காவது போன் செய்து, கெட்ட வார்த்தையில் திட்டுவது, நாகராஜ் வழக்கம். சம்பவத்தன்று, ரயில்வே ஜங்ஷனில், "அவசர உதவிக்கு' என்று எழுதப்பட்டிருந்த, காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். கடந்த, 10 நாட்களாக அலைந்து, நொந்து போன ரயில்வே போலீசார், "ஏன் இப்படி செய்தாய்?' என, நாகராஜனிடம் கேட்டதற்கு, "ரயில்வே ஜங்ஷனில் அறிவிப்பு பலகை எல்லாம் நன்றாக வைத்துள்ளீர்கள். இப்படி செய்தால் என்ன செய்வீர்கள் என்பதை வேடிக்கை பார்க்கவே, மிரட்டல் விடுத்தேன்' என்று, "கூலாக' பதில் கூறி உள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
14-ஜூலை-201309:21:10 IST Report Abuse
பி.டி.முருகன்    இந்த லூசு பார்த்த பார்வையில், எத்தனை மக்களுக்கும் மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது இந்த மாதிரி ஆட்களை நிரந்தரமாக ஜெயிலில் சோறு போட்டு பராமரிக்கலாம்.
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.