சிறிய காஸ் சிலிண்டர்: பீகார் அரசு அதிரடி தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிறிய காஸ் சிலிண்டர்: பீகார் அரசு அதிரடி தடை

Added : ஜூலை 13, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாட்னா: பீகாரில், சிறிய அளவு சிலிண்டர்களின் பயன்பாட்டிற்கு, மாநில அரசு தடை விதித்துள்ளது. பாட்னா அருகில் உள்ள புத்தகயா கோவிலில், கடந்த 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது; குண்டுகள் வெடித்ததில், பலர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புகளில், 2.5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும், அந்த சிலிண்டர் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, உணவு அமைச்சர், ஷியாம் ரஜக் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்களுக்கு , 2.5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகிக்க வேண்டாம் என, காஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி, சிறிய அளவு காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட காஸ் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள, 3,000த்திற்கும் மேற்பட்ட, சிறிய காஸ் சிலிண்டர்களை, உடனடியாக திரும்பப் பெறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை