பகுஜன் ஊழல் மந்திரி உறவினர்கள்: சமாஜ்வாதி கட்சியில் ஐக்கியம்| Dinamalar

பகுஜன் ஊழல் மந்திரி உறவினர்கள்: சமாஜ்வாதி கட்சியில் ஐக்கியம்

Added : ஜூலை 13, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

லக்னோ: உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த, மாயாவதி தலைமையிலான முந்தைய அரசில், ஏராளமான ஊழல்கள் புரிந்த, பாபு சிங் குஷ்வஹாவின் மனைவி மற்றும் சகோதரர், சமாஜ்வாதி கட்சியில் நேற்று ஐக்கியமாகியுள்ளனர்.
அரசியல்வாதிகளுக்கு, சுயமரியாதை அறவே கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தர பிரதேசத்தில் நேற்று, இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர், முலாயம் சிங் மகன் அகிலேஷ், கடந்த ஆண்டு, உ.பி., முதல்வரான உடன், ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்தார். மாயாவதி தலைமையிலான, முந்தைய பகுஜன் சமாஜ் அரசின் அமைச்சராக இருந்த பாபு சிங் குஷ்வஹா ஏராளமான ஊழல்கள் புரிந்துள்ளார் என, தெரிவித்து, அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார்; விசாரணையும் மும்முரமாக நடந்து கொண்டுஇருக்கிறது.

இந்நிலையில், குஷ்வஹாவின் மனைவி சிவகன்யா மற்றும் சகோதரர் சிவசரண் ஆகியோர், முதல்வர் அகிலேஷின், சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தனர். அவர்கள், சமாஜ்வாதி கட்சியில் இணைந்த தகவல் அறிந்ததும், அரசியல் நோக்கர்கள் அதிர்ச்சி அடைந்தனர். "ஊழல்வாதி என கூறி, விசாரணை வளையத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ள குஷ்வஹாவின் மனைவி மற்றும் சகோதரரை, எவ்வாறு சமாஜ்வாதி கட்சியில் சேர்க்கலாம்' என, பல கட்சியினரும், கேள்வி எழுப்பிஉள்ளனர். எனினும், லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, குழம்பிய குட்டையில் மீன் பிடித்து, பிரதமர் பதவியை பிடித்து விடலாம் என நினைத்து, காய்களை நகர்த்தி வரும் முலாயம் சிங், இந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. ""இவர்களை கட்சியில் சேர்த்துள்ளதால், கட்சி மேலும் வலுவடையும்,'' என, வெட்கமில்லாமல் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை