Advertisement
சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு அப்பீல்?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

14 ஜூலை
2013
00:22
பதிவு செய்த நாள்
ஜூலை 13,2013 23:18

புதுடில்லி: "கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், போலீஸ் காவலில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவால், அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் ஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



சமூக ஆர்வலர்கள்:


"குற்றப் பின்னணி உடையவர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்களும், தேர்தல் ஆணையமும், நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், கிரிமினல் வழக்குகளில், தண்டனை பெற்ற எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள், தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதன் மூலம், தங்களின் பதவிகளில் தொடரும் போக்கு, தொடர்ந்து வந்தது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,க்களை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு, 8 (4), பாதுகாப்பதாகவும், அந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில், சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் அதிரடியான தீர்ப்பை அளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டதாவது: கிரிமினல் வழக்குகளில், எந்த மக்கள் பிரதிநிதிக்காவது தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை விதிக்கப்பட்டதுமே, அவரின், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்படும். அதேபோல், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களோ அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்களோ, தேர்தலில் போட்டியிட முடியாது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பை, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர். ஆனால், அரசியல் கட்சிகள் இடையே, கடும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய எம்.பி.,க்களில், 162 பேருக்கு எதிராகவும், நாடு முழுவதும் உள்ள, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 1,460 எம்.எல்.ஏ.,க்கள் மீதும், பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில், கணிசமானோர், ஐந்தாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெறக் கூடிய வழக்குகளில் சிக்கியுள்ளனர். இவர்களின் பதவிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. (தண்டனை பெற்று, ஏற்கனவே மேல் முறையீடு செய்தவர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது) மேலும், "சிறையிலிருப்பவர்கள், போலீஸ் காவலில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என, உத்தரவிட்டிருப்பதால், அரசியல் கட்சிகள் சார்பில், தேர்தலில் போட்டியிட, வேட்பாளரை தேர்வு செய்வதில், கடும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.




ஐந்து மாநில சட்டசபை தேர்தல்:


டில்லி, ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், விரைவில் நடக்கவுள்ளன. அடுத்தாண்டில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இவற்றில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள், வழக்குகளில் சிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பதால், வேட்பாளர்களை தேர்வு செய்வது, அரசியல் கட்சிகளுக்கு, சவாலான காரியமாக இருக்கும். அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் மத்தியில், வேறு விதமான கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருப்பவர்கள், தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மீது, பொய் வழக்கு போட்டு, போலீஸ் காவலில் வைப்பதன் மூலமாகவோ, சிறையில் அடைப்பதன் மூலமாக வோ, அவர்கள் தேர்தலில் போட்டி யிடுவதை தடை செய்யும் அபாயம் உள்ளதாக, அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.



இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, நீதியின் எல்லை மீறியதாக உள்ளது. அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமையில் தலையிடும் வகையில் உள்ளது. ஆளும் கட்சியாக இருப்பவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது, தேர்தல் நேரத்தில் வழக்கு போடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட், மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, பொலிட் பீரோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை, அரசு தரப்பும் விரும்பவில்லை. அதனால், இது தொடர்பாக, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்றன.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜூலை-201316:47:30 IST Report Abuse
Nallavan Nallavan பாஜக கூட வரவேற்றுள்ளது ..... மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மட்டுமே எதிர்க்கிறது
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Sathyamoorthi Govindarajan - coimbatore,இந்தியா
14-ஜூலை-201315:42:27 IST Report Abuse
Sathyamoorthi Govindarajan அரசியல்வாதிகளை பாதிக்கின்ற எந்த ஒரு தீர்ப்பாக இருந்தாலும் அதை அரசாங்கங்கள் எதிர் க்கும் . அதில் சரி தப்பு தின்கிற எந்தவிதமான தயக்கமும் அவர்கட்கு இருக்காது . அரசியல்வாதிகள் எவ்வளவு தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் மத்திய அரசின் கொள்கை . சத்யமூர்த்தி கோவிந்தராஜன்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூலை-201312:15:57 IST Report Abuse
g.s,rajan இந்த அரசியல்வாதிகளுக்கு பயந்து நீதிமன்றம் பின் வாங்கக்கூடாது .மேல் முறையீட்டை ஏற்காமல் உடனே தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் .நீதியையே விலை கொடுத்து வாங்கவும் நமது அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள் எனவே நீதிமன்றம் இதே தீர்ப்பை வரும்( STATUS QUO)தேர்தலுக்குள் அமுல்படுத்தி ,விரைவில் நடைமுறைப்படுத்தி அரசியல்வாதிகளின்,அராஜகத்தை ,அட்டூழியத்தை கொட்டத்தை அறவே ஒடுக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்தியாவை உலக வரைபடத்தில் நாம் இனியாவது காண முடியும் ,இல்லையேல் வருங்காலத்தில் இந்தியாவை வரை படத்தில் காணவே முடியாது .இந்தியாவை அரசியல்வாதிகள் முற்றிலும் அழித்து விடுவர் என்பது மட்டும் உறுதி . . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
1 members
8 members
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
14-ஜூலை-201311:09:13 IST Report Abuse
Sundeli Siththar எதிர்பார்த்ததுதானே... கொள்ளையர்கள் இல்லாவிடில், அரசியல் எப்படி நடக்கும்?
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
14-ஜூலை-201309:26:10 IST Report Abuse
K Sanckar இந்த தீர்ப்பு சாதாரணமாக வரவேற்க வேண்டியது ஒன்றே. ஆனால் நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து அவசியம் இருப்பின் இந்த தீர்ப்பில் எதாவது திருத்தும் கொண்டு வரலாமா என்று பார்க்கலாம். அதுதான் நல்லதும் கூட.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
14-ஜூலை-201308:20:48 IST Report Abuse
Dhanabal லஞ்ச லாவண்யத்திலும் ,கமிசனிலும் ஊறிப்போன நமது அரசியல்வாதிகள், தங்களுக்கு பாதகமான இது போன்ற தீர்ப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள் என்பதற்கு இந்த மேல் முறையீடு நல்ல எடுத்துகாட்டு...
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
14-ஜூலை-201307:50:47 IST Report Abuse
Krish Sami ஆளும் கட்சியாக இருப்பவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது, தேர்தல் நேரத்தில் பொய்யாக வழக்கு போடும் அபாயம் உள்ளது. பொய் என நிரூபித்து வரும் முன்னர் தேர்தலே முடிந்திருக்கும். கோர்ட் தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்கள் மட்டும் போட்டியிட முடியாது என்பதே சரி, அவர்கள் வழக்கு அப்பீலில் இருந்தாலும், விசாரணை கால கைதுகளை இதிலிருந்து விலக்க வேண்டும். மத்திய அரசு அப்பீல் செய்தால் அது சரிதான்.
Rate this:
6 members
0 members
9 members
Share this comment
Karthik AK - Chennai,இந்தியா
14-ஜூலை-201309:12:59 IST Report Abuse
Karthik AKMr Krish மத்திய அரசு அப்பீல் செய்தால் அது சரின்னு நீங்க சொல்லறது அவங்க தப்பிக நேனைகர்துக்கு ஆதரவ தான் இருக்கு... ஒரு கோர்ட்டுல தீர்ப்பு வழங்கினாலும் உடனே மேல்கொர்டுநு அப்பீல் பண்ணிட்டு எலக்சன்ல நிக்கலாம்னு சொல்லறீங்க அதுக்கு தீர்ப்பு வரத்துக்குள்ள இவங்க பதவிகாலம் முடிஞ்சிடும் அப்புறம் தீர்ப்பு வந்த என்ன வரலானா என்ன? ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
14-ஜூலை-201307:24:36 IST Report Abuse
LOTUS வரவேற்கப்படவேண்டிய தீர்ப்பு..............இப்போது கூட குப்பை கூளங்களை கூட்டி ஒதுக்காவிட்டால்..........வீடும் ... நாடும் ..... அலங்கோலமாகிவிடும் ....................
Rate this:
3 members
0 members
17 members
Share this comment
Cancel
r.sundararaman - tiruchi,இந்தியா
14-ஜூலை-201306:24:01 IST Report Abuse
r.sundararaman அன்னிய அடிவருடிகளும்,வன்முறையே வழியென்று பதவிபிடித்து கொள்ளையடிக்கும் கும்பல்களும் மக்கள் விழிப்படைவதை விரும்பாத தீய சக்திகளும் இனி கொள்ளைக்கு வழி மூடப்படுவதால் வெறுப்படைவதும் நீதியை வளைப்பதர்க்கு செய்யும் முயற்சிகள் பலிக்காது.
Rate this:
2 members
0 members
9 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
14-ஜூலை-201305:28:33 IST Report Abuse
Skv இதுதான் நல்ல தருணம். வேலைகிடைக்காத, படிச்ச இளசுகள் ஒன்றுகூடி கட்சி துவங்கனும், நாடுதான் நல்லா இருக்கணும் என்ற மனஉறுதியுடன். நிச்சயம் நம்ம நாடும் மக்களும் நலமே பெறுவோம். இது சாத்தியம் அண்ட் சத்தியம்
Rate this:
0 members
0 members
23 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.