வரிஏய்ப்பு விவகாரம்: நிதின் கட்காரி நிறுவனத்துக்கு நோட்டீஸ்| Dinamalar

வரிஏய்ப்பு விவகாரம்: நிதின் கட்காரி நிறுவனத்துக்கு நோட்டீஸ்

Added : ஜூலை 13, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாக்பூர்: வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பா.ஜ., முன்னாள் தலைவர், நிதின் கட்காரிக்கு சொந்தமான, புர்தி சர்க்கரை ஆலைக்கு, மும்பை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாரதிய ஜனதாவின் முன்னாள் தேசிய தலைவர், நிதின் கட்காரி. மகாராஷ்டிரா மாநிலத்தில், இவருக்கு சொந்தமான, புர்தி சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை நிர்வாகம் சார்பில், 2001 முதல், 2007 வரை, தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளில், முறையற்ற நிதி விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதன் மூலம், 10.5 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும், அதையும், அதற்கு அபராதத் தொகையாக, ஐந்து கோடி ரூபாயையும் செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, புர்தி நிறுவனம் சார்பில், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், வழக்குத் தொடரப்பட்டது. அதில், புர்தி நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, வருமான வரித்துறை, மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதிகள், பூஷன் தர்மாதிகாரி மற்றும் அடுல் சந்துர்கர் ஆகியோர் அடங்கிய, மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர், "பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறையின் மனு தொடர்பாக, புர்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும், அதற்கு, செப்டம்பர், 9ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை