Advertisement
பி.எஸ்.எப்., வீரரின் மாறுதல் உத்தரவுக்கு இடைக்கால தடை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2013
23:26

புதுடில்லி: டில்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றப்பட்ட, எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு, டில்லி ஐகோர்ட் தற்காலிகமாக பாதுகாப்பு வழங்கியுள்ளது.


எல்லை பாதுகாப்பு படையில், 25வது படைப்பிரிவில், டிரைவராக பணியாற்றியவர் சுபாஷ் சந்தர், இவர் டில்லியில் இருந்து, குஜராத்துக்கு மாற்றப்பட்டார். இதை எதிர்த்து, மத்திய அரசு, எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.,க்கு எதிராக டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த, நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் தீபா ஷர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இடமாற்றல் உத்தரவை, ஆக., 21ம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். அவர் தாக்கல் செய்த மனுவில், "உடல் நலமில்லாமல் இருக்கும் மனைவிக்கு டில்லியில் போதுமான மருத்துவ வசதி கிடைப்பதால், அருகில் இருந்து கவனிக்க வேண்டியுள்ளது' என்று குறிப்பிட்டு இருந்தார். எல்லை பாதுகாப்பு படை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ""தலைமை காவலரான சுபாஷ் சந்தர் அளித்துள்ள மனு பரிசீலனையில், உள்ளது; கோர்ட் வழங்கிய இடைக்கால காலத்திற்குள் முடிவு அறிவிக்கப்படும்'', என்றார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.