attack on government buses | "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டியா?'அலறும் அரசு பேருந்துகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டியா?'அலறும் அரசு பேருந்துகள்

Added : ஜூலை 13, 2013 | கருத்துகள் (17)
Advertisement
"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டியா?'அலறும் அரசு பேருந்துகள்

ஆர்ப்பாட்டம், சாலை மறியல், போராட்டங்களில் ஈடுபடுவோர், தங்களது பலத்தை நிரூபிப்பதாக எண்ணிக் கொண்டு, அரசு பேருந்துகளை சேதப்படுத்துவதை வழக்கமாக்கியுள்ளனர். மாணவர்கள் மோதல்களிலும் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டு வருகின்றன.


அரசு பேருந்துகள்:

கடந்த ஏப்ரல் மாத இறுதியில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, 800க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், 600க்கும் மேற்பட்ட, அரசு பேருந்துகள் குறி வைத்து தாக்கப்பட்டன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின், 40க்கும் மேற்பட்ட பேருந்துகளும் அடக்கம். நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்களுக்கு, இது பெரும் அடியாக இருந்தது. இருப்பினும், பயணிகளின் நலன் கருதி, சேதமடைந்த பேருந்துகளை சரி செய்து, போக்குவரத்து கழகங்கள், இயக்கத்திற்கு கொண்டு வந்து உள்ளன.


மோதல் சம்பவங்கள்:

இந்நிலையில், கல்லூரி மாணவர்களால், அரசு பேருந்துகளுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம், 20ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட, 15 நாட்களுக்குள் மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த மோதல்களில், மாநகர பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.மேலும், பேருந்துகளின் தானியங்கி கதவுகளை சேதப்படுத்துதல், இருக்கைகளை கிழித்தல், பேருந்து மேற்கூரையில் உள்ள, "வென்டிலேட்டர்'களை உடைத்தல் என, தங்களது சேட்டைகளை துவக்கி விட்டனர்.சென்னை, திருமங்கலத்தில் அடுத்தடுத்து, மாணவர்களிடையே நடந்த மோதலில், இரண்டு மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில், தடம் எண் 40"ஏ' பேருந்தில் பயணித்த, பெண் பயணி ஒருவரின் மண்டையும் உடைந்தது.


மாநகர பேருந்துகள்:

இதே போல, மற்றொரு மோதலில், ராயப்பேட்டையை கடந்து சென்ற மாநகர பேருந்தின் (தடம் எண்: 21) கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட, மாநகர பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து கழகம் தரப்பில் கூறப்படுகிறது.இதே போல, கடந்தாண்டு, மாணவர்களின் மோதலில், 100க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதற்காக, போக்குவரத்து துறையினர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பதைப் போல், எதற்கெடுத்தாலும், அரசு பேருந்துகள் பலியாகி வருகின்றன.


தடுப்பு நடவடிக்கை :

இந்த சூழ்நிலையில், மீண்டும் பேருந்துகளை சேதப்படுத்த, மாணவர்கள் துவங்கியுள்ளதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மாணவர்களால் பேருந்துகள் சேதமாவதை தடுப்பது குறித்து, காவல் துறையினரிடம் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்க உள்ளோம். விரைவில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
16-ஜூலை-201310:50:40 IST Report Abuse
R Bala Sundaram பேருந்துகளில் போலீஸ் துறையில் ஆட்களை எடுத்து அவர்களையே ,ஓட்டுனர் ,மற்றும் நடத்துனர்களாக ,பணி அமர்த்தினால் ,விபத்தும் நடக்காது ,வன் முறை சம்பவங்களால் ,பாதிப்பும் வராது.செய்து பாருங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201317:22:17 IST Report Abuse
Srinivasan Kannaiya பஸ்ஸை உடைப்பவர்கள் மீது இது வரை நடவடிக்கை எடுத்ததாக சரித்திரம் ஏதும் இல்லை.. நடவடிக்கை கடுமையாக ,பாரபட்சம் இல்லாமல் இருந்தால் இவை தவிர்க்கப்படும்..
Rate this:
Share this comment
Cancel
james arul rayan - chennai ,இந்தியா
14-ஜூலை-201313:10:33 IST Report Abuse
james arul rayan சில கல்லூரிகள் நல்ல மாணவர்களை உருவாக்குவதற்கு பதிலாக ரௌடிகளை உருவாக்குவதற்கே பயன்படுகின்றன. அப்படிப்பட்ட கல்லூரிகளை மூடிவிட்டால் ரௌடிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201312:57:27 IST Report Abuse
kumaresan.m " ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்றும் நிர்வாகம் தங்களின் பொறுப்புகளிலிருந்து ஒதுங்கி கொள்கிறது .....தம் சொத்து என்ற எண்ணம் வர வேண்டும் ,எவ்வளவு பெரிய கொம்பனகா இருந்தாலும் சட்டத்தில் முன் நிறுத்துங்கள் தீர்வு கிடைக்கும் .....பேருந்து ஓட்டுனர் மற்றும் நடந்துனர் தாக்கப்படும் பொழுது மட்டும் குரல் கொடுக்கும் தொழிற் சங்கங்கள் இது போன்று பேருந்துகளை சேதப்படுத்தும் பொழுது குரல் கொடுக்க மறுப்பது ஏன் ? அரசு சொத்துதானே என்ற எண்ணம் மாற வேண்டும் ....சோறு போடும் தொழிலை ஒருவன் அவமதித்தால் தூக்கி போட்டு மிதிக்க வேண்டாமா ???
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201312:51:36 IST Report Abuse
kumaresan.m " இதே தனியார் பேருந்துகளை சேதப்படுத்தினால் புகார் செய்து வழக்கு தொடந்து பணத்தை வசூல் செய்து விடுவார்கள் ,ஆனால் அரசு பேருந்து நிர்வாகம் கோழைகள் போன்று வேடிக்கை பார்க்கிறது ....யாராக இருந்தாலும் வழக்கு பதிந்து வசூல் செய்யுங்கள் பிறகு புத்தி வரும் ....அரசுக்கும் நஷ்டம் ஏற்படாது "
Rate this:
Share this comment
Cancel
S.P.KUMAR - tirunelveli,இந்தியா
14-ஜூலை-201312:22:06 IST Report Abuse
S.P.KUMAR பேசாமல் போலீஸ் வாகனத்தில் உள்ளது போல் கண்ணாடியின் வெளிப்பக்கம் கம்பி வலைகளால் கண்ணாடிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தால் கண்ணாடி உடையாது
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
14-ஜூலை-201309:30:29 IST Report Abuse
NavaMayam அது ஒன்னும் இல்லங்க , இந்த பேருந்து கட்டணத்தை உயர்த்தியதுக்கு இப்படி பலி தீத்துகிறாங்க.....
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
14-ஜூலை-201309:19:59 IST Report Abuse
Thangairaja ராமதாசுக்கு கொடுத்திருக்கும் இனிமா வேலை செஞ்சா இந்த புறம்போக்குகளின் கொட்டம் அடங்கலாம். அதே நேரம் சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு செயல்படும் சமூகவிரோதிகளை சரியான முறையில் அடையாளம் காண காமெரா மொபைலோ, காமெரா பொருத்தப்பட்ட பில்லிங் மெசினொ கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201308:54:27 IST Report Abuse
Srinivasan Kannaiya பஸ்களை உடைப்பவர்களுக்கு. பெத்தவனும் சயில்லை,,வளர்த்தவனும் சரியில்லை, போதித்தவனும் சரியில்லை..ஒழுக்கமும் அறவே இல்லை..ஆளுகின்றவனும் சரியில்லை.. என்ன செய்யறது.. பொது சொத்துக்கள் எல்லாம் நம்ம வரி பணத்தில் வந்தது என்று உணரும் வரை இப்பிடிதான் இருப்பார்கள்..
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
14-ஜூலை-201307:38:37 IST Report Abuse
raghavan இந்த பாவப்பட்ட பேருந்துகளை பார்த்தால் இவர்களுக்கு ஏன் தான் இந்த கொலை வெறி வருதோ தெரியவில்லை. ஒரு வேளை, பேருந்துகள் முன் பக்கத்தில் பார்த்தால் ஹெட் லைட்டுகள் கண்கள் போலவும், விண்ட் ஸ்க்ரீனை பார்த்தால் நெற்றியை போலவும் , கிரில்லை பார்த்தால் சிரித்துகொண்டு இருப்பது போலவும் இருப்பதாலோ என்னவோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை