E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2013,23:37 IST
கருத்துகள் (49)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

திருநெல்வேலி:நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மின் உற்பத்தியை துவக்குவதற்காக அணுஉலை நேற்று நள்ளிரவு முதல் இரவு இயங்கத் தொடங்கியது. அணு உலை இயங்கினால், பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற உதயகுமார் கும்பலின் மிரட்டல்கள், கிளப்பி விடப்பட்ட பீதி போன்றவை எல்லாம், வெறும் கூச்சல் என நிரூபணமானது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன்கொண்ட, இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை துவக்கும் வேளையில், பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டன.கடந்த 2012 செப்டம்பரில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை துவக்குவதற்கு கடந்த 11ம் தேதி அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விஞ்ஞானிகள் அனுமதியளித்தனர். இதையடுத்து வியாழன் இரவு 11:49 மணிக்கு மின் உற்பத்தி துவங்குவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியது.போரான் அமிலம் நிரப்பப்பட்ட அணு உலையில், செறியூட்டப்பட்ட யுரேனியம் ராடுகள் உள்ளன. இதில் போரான் அமிலத்தின் தன்மையை குறைப்பதற்காக தண்ணீர் ஊற்றப்படுகிறது.

தண்ணீரின் அளவு அதிகமாக, அதிகமாக ஒரு லிட்டரில் 17.4 கிராம் அளவுள்ள போரான், படிப்படியாக 7.4 கிராமாக குறையும். அவ்வாறு குறையும் போது, நியூட்ரான் துகள்கள் செயல்பட துவங்கும். நியூட்ரான் துகள், யுரேனியத்தை பிளக்க துவங்குகிறது. இந்த நிகழ்விற்கு, "கிரிட்டிகாலிட்டி' எனப்படும் அணுப்பிளவு துவங்குகிறது. ஒரு நியூட்ரான், ஒரு யுரேனியத்தை பிளந்தால் அதில் இருந்து, இரண்டு நியூட்ரான் ஏற்படும். இப்படி படிப்படியாக அணுப்பிளவு ஏற்படும்போது வெப்பமும் ஏற்படும். அந்த வெப்பத்தால், ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம் டர்பன்களை சுழலச்செய்து மின் உற்பத்தி கிடைக்கிறது."கிரிட்டிகாலிட்டி' எனப்படும் அணுப்பிளவு நேற்று 13ம் தேதி இரவு 11:30 மணிக்கு ஏற்பட்டது. இதன் மூலம் அணுஉலைசெயல்பட துவங்கியது. தொடர்ந்து அணுப்பிளவுகள் ஏற்படுவதன் மூலம் ஆயிரத்து 200 மெகா வாட் வெப்பம் ஏற்பட 30 முதல் 45 நாட்கள் ஆகும். அப்போது மின் உற்பத்தி முழுமையாக துவங்கும்.

முகாம் :
இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்.கே.சின்கா கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளார். நேற்று மாலை அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளில் இன்று (நேற்று) முக்கியமான நாள். கூடங்குளத்தில் பல்வேறு

Advertisement

பாதுகாப்பு அம்சங்களை அதன் அறிக்கைகளை தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வன அமைச்சகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்திய அணுசக்தி கழகம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அறிக்கை தந்தபிறகே அணு உலையின் செயலாக்கம் துவங்கியுள்ளது. தற்போது கிரிட்டிகாலிட்டி எனப்படும் அணுப்பிளவு துவங்கியுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் மின்உற்பத்தி முழுமையாக துவங்கும். மின் உற்பத்தி துவங்குவதற்கு சற்று காலதாமதமாகி உள்ளது. எதிர்ப்பு போராட்டங்களாலும் தாமதம் ஏற்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் இதற்காக உழைத்துள்ளனர். இது ஒருமகிழ்ச்சியான நாள்.முதல் அணுஉலையில் மின்சாரம் உற்பத்தியை துவங்கும் இதே காலகட்டத்தில் இதே வளாகத்தில் உள்ள, இரண்டாவது அணு உலையிலும் மாதிரி எரிபொருட்கள் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் அணு உலையில் மின்சாரம் உற்பத்தி ஏற்பட்டதில் இருந்து எட்டு மாதங்களில் இரண்டாவது அணு உலையும் செயல்பட துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

எதிர்ப்பாளர்கள் மவுனம்:
இடிந்தகரையில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள், இந்த மின் உற்பத்திக்கான பணிகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக நேற்றும் கூடி விவாதித்தனர். இடிந்தகரையில் இன்று மீண்டும் கூடுகின்றனர். இருப்பினும் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பு எதுவும் தரவில்லை.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (49)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Natarajan - chennai,இந்தியா
17-ஜூலை-201312:51:29 IST Report Abuse
Ramesh Natarajan IT IS A STEP AHEAD FOR INDIA TOWARDS BRIGHTER GROWTH
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Palani Velu - kulalumbur,மலேஷியா
14-ஜூலை-201317:33:39 IST Report Abuse
Palani Velu கூடங்குளம் அணு உலை நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது
Rate this:
12 members
0 members
16 members
Share this comment
Cancel
venkat - monrovia,லைபீரியா
14-ஜூலை-201316:58:34 IST Report Abuse
venkat big thanks for all people connected. one thing all should ask for : if Central govt take all produced electricity in the name of national grid then same central govt should make all rivers under national grid scheme then TN govt enough kaveri waters.
Rate this:
3 members
0 members
7 members
Share this comment
Cancel
Raja - Doha-Qatar,இந்தியா
14-ஜூலை-201315:01:21 IST Report Abuse
Raja உண்மையில் இதில் தினமலருக்கும் பங்கு இருக்கிறது உற்பத்தி தொடங்குவதற்கு ......வாழ்த்துக்கள் தினமலருக்கு.......ஒரு தீர்க்கமான முடிவு எடுத்ததற்கு ஆர் கே சின்ஹா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....மொத்தத்தில் இது எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஒன்றுதான்.....மத்திய அரசு இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை 90 சதவீதம் தமிழ்நாட்டுக்குத்தான் கொடுக்கவேண்டும்......இதை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்.......நன்றிகள் ஆயிரம்.... ராஜா ......தூத்துகுடியிலிருந்து.....
Rate this:
66 members
1 members
25 members
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
14-ஜூலை-201312:52:28 IST Report Abuse
arabuthamilan கூடங்குளம் அணு மின்சாரம் வரும் ஆனால் வராது...???.....
Rate this:
14 members
0 members
8 members
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
14-ஜூலை-201312:42:09 IST Report Abuse
sitaramenv உதயகுமார் என்ற துரோகி வெளிநாட்டு வர்த்தகர்களின் கைக்கூலி ......அவனை முதலில் நாடு கடத்த வேண்டும்.
Rate this:
39 members
1 members
52 members
Share this comment
Cancel
Narayanan Gopalan - Chennai,இந்தியா
14-ஜூலை-201311:36:07 IST Report Abuse
Narayanan Gopalan அணு சக்தியையே நான் எதிர்கிறேன் என்று முழங்கியவர் இன்று பதுங்கியது மட்டுமல்லாமல் ,"மின்சாரம் கிடைக்குமானால் போராட்டத்தையே வாபஸ் வாங்கிக்கொள்வதாக (வேறென்ன செய்ய நம் நோக்கம் அதுவல்லவே?) அறிவித்தது ஏன்? கொள்கையே அது என்றால் மற்ற உலைகளைப் பற்றிய (உம் கல்பாக்கம் ) இவரது நிலைப்பாடு என்ன?
Rate this:
6 members
0 members
12 members
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
14-ஜூலை-201311:34:19 IST Report Abuse
Ashok ,India மிரட்டியவர்கள் ,தமிழகத்தை இருளில் மூழ்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு இது ஒரு ஷாக்......வெற்றி தொடரட்டும் .
Rate this:
82 members
0 members
20 members
Share this comment
Cancel
Thanjaithamilar - QATAR,இந்தியா
14-ஜூலை-201309:58:18 IST Report Abuse
Thanjaithamilar 11 வருடம் இந்திய, ரஷ்யா விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் சாதனைக்கு இந்திய வரலாற்றில் மிக பெரிய மைல் கல். இந்திய, ரஷ்யா ஒற்றுமைக்கு நல்ல எடுத்துகாட்டு. உலக வல்லரசுகளின் மறை முக எதிர்ப்பையும் தகர்த்து இந்த அணு உலை செயல்பட துவங்கியது மிக்க மகிழ்ச்சி. மத்திய அரசின் பங்கு இந்த அணு உலையில் மிகவும் பாராட்டத்தக்கது. இதில் கிடைக்கும் பெரும்பாலான மின்சாரம் தமிழகதிற்கு கிடைக்கும் பட்சத்தில் தமிழகம் சுபிட்சமாகும். வாழ்த்துக்கள்.
Rate this:
8 members
73 members
15 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
14-ஜூலை-201309:42:40 IST Report Abuse
பி.டி.முருகன்    இறுதியில் சத்தியம் ஜெயித்துள்ளது. இதை வைத்து பழைய மாதிரி பிழைப்பு நடத்த எதிர்ப்பாளர்களுக்கு இனி வேலை இல்லை.கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்து மக்களுக்கு அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும்.இருண்ட தமிழகம் இனி மேல் ஒளி வீசும் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
9 members
63 members
18 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.