கும்பலால் பலாத்காரம்: உ.பி., பெண் கவலைக்கிடம்| Dinamalar

கும்பலால் பலாத்காரம்: உ.பி., பெண் கவலைக்கிடம்

Added : ஜூலை 13, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கும்பலால் பலாத்காரம்: உ.பி., பெண் கவலைக்கிடம்

லக்னோ: உத்தர பிரதேசத்தில், கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் உடல் நிலை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அம்மாநில முதல்வர், அகிலேஷ் யாதவின் சொந்த மாவட்டமான எடாவாவில், 20 வயது இளம் பெண்ணை, பர்ஹான் என்ற நபர் காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்ய வேண்டும் என, அப்பெண் வற்புறுத்தியதை அடுத்து, பர்ஹானுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன், அப்பெண்ணை, பர்ஹான், தன் நண்பர்கள் நான்கு பேருடன் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், மண்ணெண்ணெய் ஊற்றி, தீவைத்ததில், 90 சதவீத உடல் காயங்கள் ஏற்பட்டு, அப்பெண் பலத்த காயமடைந்தார். சாய்பாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனை அல்லது லக்னோ பொது மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்ற, அப்பெண் உறவினர்களின் கோரிக்கையை, டாக்டர்கள் மறுத்துள்ளனர். உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றக் கூடாது என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்த கொடூரத்தில் ஈடுபட்ட பர்ஹான் கைது செய்யப்பட்டுள்ளான். அவனின் கூட்டாளிகள் மற்றும் அவனின் பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர்; அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anvar-Indian - shuwaikh,குவைத்
14-ஜூலை-201312:49:50 IST Report Abuse
Anvar-Indian மக்கள் மத்தியில் தூக்கிலிடவேண்டும் இது போன்ற காம கொடூரனை. ஆனால் இந்த வீனா அரசாங்கம் மக்கள் கருத்தை கருத்தில் கொள்வதில்லை. இவர்களை கொடூரமாக கொன்றால் மற்றவர்கள் அடுத்த பெண்ணை தொடுவதற்கே பயப்படுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை