Threaten for congress by TESO | காங்.,க்கு கூடுதல் சீட் ஒதுக்காமல் இருக்க மீண்டும் "டெசோ?' | Dinamalar
Advertisement
காங்.,க்கு கூடுதல் சீட் ஒதுக்காமல் இருக்க மீண்டும் "டெசோ?'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சில மாதங்களாக, கிடப்பில் போடப்பட்டிருந்த, "டெசோ' கலந்துரையாடல் கூட்டம், இம்மாதம் 16ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில், அவசரமாக கூடுகிறது. லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சீட்டுகளை, ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதற்கும், மீண்டும், "டெசோ'வை, தி.மு.க., கையில் எடுத்துள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அறிவாலயத்தில், "டெசோ' கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், கச்சத்தீவு மீட்க, சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடுக்க வேண்டும். இது குறித்து ஏப்ரல் 15ம் தேதி, திருவான்மியூரில் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், திருவான்மியூரில், "சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் தான் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

பின், சில மாதங்களாக, "டெசோ' தொடர்பாக எந்தக் கூட்டத்தையும் தி.மு.க., நடத்த முன்வரவில்லை. ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வை காங்கிரஸ் ஆதரித்ததன் மூலம், மீண்டும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உருவாகி விட்டது என்ற பேச்சு, இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. அதேசமயம் ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்காக, காங்கிரஸ் கட்சியிடம் தி.மு.க., ஆதரவு கேட்டது, இலங்கை தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.லோக்சபா தேர்தலில் மனித நேயமக்கள் கட்சி, புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிக்கு, தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வதும், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதும் உறுதியாகியுள்ளது. ஆனால், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., - காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம் பெறுமா? என்பது தான் தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் குழப்பமாக உள்ளது.

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுமானால், அக்கட்சிக்கு குறைந்த சீட்டுகளை ஒதுக்கவே தி.மு.க., விரும்புகிறது. எனவே, காங்கிரசை மிரட்டவே, மீண்டும், "டெசோ'வை தி.மு.க., கையில் எடுத்துள்ளது.தி.மு.க., 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. மீதமுள்ள 15 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியை, முதலில் கூட்டணிக்கு இழுத்தால், அக்கட்சி அதிகமான தொகுதிகளை கேட்டு தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தான், முதலில் தே.மு.தி.க.,வுக்கு கணிசமாக சீட்டுகளை ஒதுக்கிவிட்டு, அதன் பின் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இந்திய நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும். கங்கை, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, தாமிரபரணி, குமரி நெய்யாற்றோடு நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, டில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஸ் ராவத்திடம் தி.மு.க., வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அடுத்தக் கட்ட போராட்டமாக, கையெழுத்து இயக்கம் நடத்த தி.மு.க., திட்டமிட்டுள்ளது.அக்கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதன் மூலம், இலங்கை தமிழர்களின் அதிருப்தியை களைய முடியும் என, தி.மு.க., கருதுகிறது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (69)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
EsakkiMuthu - Bangalore,இந்தியா
17-ஜூலை-201304:04:40 IST Report Abuse
EsakkiMuthu என்ன தலைவரே இப்படியே காமெடி பண்ணிக்கிட்டு இருக்கேங்க......வயறு வலிக்குது.......ஹ ஹ ஹா ஹா ஹா
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Raja - Doha-Qatar,இந்தியா
14-ஜூலை-201315:53:26 IST Report Abuse
Raja சாமி அண்ணா, தேமுதிக ஜெயித்துவிட்டு அப்புறம் ஒவ்வொரு mp யா அதிமுகாவுக்கு போறதுக்கா.......குதிரைக்கு கொம்பு மொளைச்சாலும் மொளைக்குமே ஒழிய ஜெயிப்பதற்கு வாய்ப்புக்கள் 0 சதவீதம் கூட கிடையாது.... ராஜா...தோஹாவிலிருந்து....
Rate this:
2 members
0 members
16 members
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
14-ஜூலை-201313:53:19 IST Report Abuse
Peria Samy தி.மு.க.வின் தலைமையில் இயங்கும் டெசோ ஒரு சவலைக் குழந்தை. இந்தக் குழந்தை நிற்கவும் நடக்கவுமே தடுமாறும்போது போராடப் போகிறது என்று சவடால் பேசுவது நகைப்புக்குறியது.தமிழர்கள் இதை நன்கறிவார்கள்.
Rate this:
30 members
1 members
35 members
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201312:32:32 IST Report Abuse
Kankatharan  //இதன் மூலம், இலங்கை தமிழர்களின் அதிருப்தியை களைய முடியும் என, தி.மு.க., கருதுகிறது."// என்பதே ஒரு ஊகத்தினாலான செய்தி. இங்கு செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்கள் என்பது, செய்தியின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசியற் கட்சியான " தமிழ் தேசிய கூட்டமைப்பு" எனற் அரசியற் கட்சி ஒன்றை மட்டுமே குறிக்கும். ஈழத்து தமிழர்களை அல்ல. இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் திமுக கட்சியையும் கருணாநிதியையும் ஒருபோதும் இனிமேல் நம்பப்போவது இல்லை நம்பியதுமில்லை. தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவை அனுசரித்து அரசியல் தீர்வு காணலாம் என்ற கொள்கையே இலங்கை தமிழ் மக்களால் துரோகத்தனமான விரோதமான செயலாக பார்க்ப்படுகிறது. இந்தியா தனது உள்ளூர் அரசியல் இலாபங்களுக்காக தமிழர் தேசியக்கூட்டமைப்பு போன்ற கட்சிகளை தனது கட்டுப்பாட்டுக்குளிருந்து வெளியே சென்றுவிடாத வண்ணம் அரசியல் சிக்கல் நிறைந்த தந்திரமான மாய அரசியல் வலையை விரித்து வைத்திருக்கிறது அந்த தொடர்ச்சியின் அசைவில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு கட்சியின் நகர்வுகள் இலங்கை தமிழர்களின் நகர்வு என அர்த்தம் கொள்ள முடியாது. அப்படி ஒருபோதும் அந்த மக்கள் இல்லை. தேசியக்கூட்டமைப்பில் சம்பந்தன் தலைவராக வைக்கப்பட்டிருக்கிறார் முடிவு எதுவும் அவரது கையில் இல்லை. கூட்டமைப்பின் அங்கமாக இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழீழ புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), இன்னும்பல அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன. இவை அனைத்தையும் மறைமுகமாக வழிநடத்துவது விடுதலைபுலிகள் இயக்கம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். மூத்தவர் என்ற அடிப்படையில் மரியாதையின் நிமித்தம் இராசவரோதயம் சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குரிய பாராளுமன்ற பிரதிநிதுத்துவம் அனைத்தும் விடுதலைப்புலிகளின் விருப்பத்திற்கமையவே மக்கள் தெரிவு செய்திருந்தனர் தற்போது களத்தில் விடுதலைப்புலிகளின் தலைமை இல்லை என்பதால் புலிகளின் கொள்கை தாண்டி தேசியக்கூட்டமைப்பு எப்பேர்ப்பட்ட நிலையெடுத்தாலும் அது நிலைக்கப்போவதுமில்லை மக்கள் அங்கீகரிக்கப்போவதுமில்லை. இலங்கைக்குள் வரும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் எவர் தலைமையில் தமிழர் தேசியக்கூட்டமைப்பை வழி நடத்தவேண்டுமென விரும்புகின்றனரோ அப்போ தலைமை கூட மாற்றமடைய நிறைய வாய்ப்புக்கள் இருக்கிறது. கருணாநிதியின் கொள்கை மக்கள் மனநிலையை பின்பற்றி பின்தொடராமல் தனது குடும்ப நலனை சார்ந்து மக்கள் விருப்பத்திற்கமைய கட்சி நகர்வதுபோல மாயையை பின்னி கொண்டு செல்ல முற்படுவது கண்கூடு. சமீபத்தில் மாணவர் போராட்டம் நெருக்கடிக்குளாக்கும் என்று தெரிந்தவுடன் காங்கிரஸ் உறவிலிருந்து ஒட்டுமில்லை உறவுமில்லை என்று பிரிந்தார் மூன்று மாதம் கழித்து மகளுக்கு எம்பி பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக கொள்கை, மக்கள் நலன், வாய்மை அனைத்தையும் அடகு வைத்துவிட்டு காங்கிரஸின் காலடியில் கிடக்கிறார்.. இது அவரது அரசியல். இதற்குள் இலங்கை தமிழர்களின் அதிருப்தி எதுவும் கிடையாது. கருணாநிதியின் டெசோ அவர் காங்கிரஸுடன் அரசியல் செய்ய உதவலாம் அது ஈழத்தமிழர்களுக்கு விஷ ஊசி போன்றது என்பதே ஈழத்தமிழர்களின் கருத்து. (தயவுசெய்து இந்த கருத்தை கால தாமதமும் இல்லாமல் புறக்கணிக்காமல் தினமலர் பிரசுரிக்கும் என்று நம்புகிறேன்.)
Rate this:
87 members
0 members
86 members
Share this comment
Cancel
Anandan Loganathan - Gibr,ஜிப்ரால்டார்
14-ஜூலை-201311:48:37 IST Report Abuse
Anandan Loganathan இளைஜன், பெண் சிங்கம், உளியின் ஓசை போன்ற படங்களை ஒரே நாளில் தொடர்ந்து பார்க்கும் மன தயிரியம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் எம் பி சீட் என்று ஒரே ஒரு நிபந்தனை மட்டும் போட்டால் போதும், காங்கிரெஸ் காரர்கள் மூணு போதும், நாயன்மார்கள் கிடையவே கிடையாது. முப்பெரும் தெய்வங்கள் மட்டும் மூன்று தான் என்று சொல்லி விடுவார்கள்.
Rate this:
1 members
130 members
56 members
Share this comment
Cancel
KUMUKKI - male,மாலத்தீவு
14-ஜூலை-201311:34:45 IST Report Abuse
KUMUKKI பாம்பு பல்லை புடுங்குனதுக்கு பிறகு சீர்னலும் என்ன கொத்தினாலும் என்ன
Rate this:
107 members
0 members
28 members
Share this comment
Cancel
k.sathiamoorthy - nagapattinam,இந்தியா
14-ஜூலை-201311:00:03 IST Report Abuse
k.sathiamoorthy இலங்கை தமிழர்கள் என்ன சொன்னால் என்ன இங்கு நடக்கபோவது இலங்கைக்கான தேர்தல் அல்லவே இந்தியாஉக்கான தேர்தல் அப்படி இருக்க அவர்கள் என்ன சொன்னால் இலங்கை தமிழர்கள் வோட்டு போட்டா கட்சிகள் வெற்றி பெறபோகிறது இலங்கை பிரச்சினை என்பது முடிந்து போன ஒன்று அதை எந்த கட்சி இனி கைல எடுத்தாலும் திருவோடுதான் இது நிச்சயம் எந்த கட்சியா இருந்தாலும் மக்கள் பிரச்சினைய முன்னெடுத்து சென்றால்தான் நீடிக்கமுடியும்
Rate this:
3 members
0 members
172 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூலை-201310:43:56 IST Report Abuse
g.s,rajan எப்பொழுதும் பணமும் பதவியும் கருணாவின் இரண்டு கண்கள் போன்றவை ,இவை இரண்டும் இல்லாமல் இந்த பூலோகத்தில் அவர் எந்த சூழலிலும் இருக்கவே மாட்டார் .அதற்காக எதை வேண்டுமாலும் விட்டுக்கொடுக்க அவர் தயங்கவே மாட்டார் .சோறு தண்ணி கூட இல்லாமல் பல நாட்கள் கூட இருந்துவிடுவார் ,ஆனால் பதவியும் பணமும் இல்லாமல் தானும் தன் வாரிசுகளும் கஷ்டப்பட அவர் என்றைக்குமே விரும்பியதில்லை .ஏனென்றால் அதன் சுகமே அலாதியானது அவை இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க அவர் நிச்சயம் விரும்பவே மாட்டார் .இதுதான் நிதர்சனமான உண்மை . ஜி.எஸ்.ராஜன் சென்னை ..
Rate this:
112 members
0 members
89 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201310:39:41 IST Report Abuse
kumaresan.m " நல்லாவே வேஷம் கட்டி ஆடுகிறது திமுக கட்சி ஆனால் மக்கள் ரசிப்பது இல்லை என்பதை எப்பொழுது புரிந்து கொள்ள போகிறதோ ??? பொது தேர்தலில் முடிவுகள் பதில் சொல்லும் "
Rate this:
205 members
0 members
68 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201310:37:37 IST Report Abuse
kumaresan.m " டெசொவை வைத்து காங்கிரஷை மிரட்ட முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது ....இந்த நாடகம் அனைத்தும் பொது தேர்தலுக்கு மக்களை ஏமாற்றும் நாடகம் ...இந்த நாடகத்திற்கு காங்கிரசிடம் திமுக இருந்து அனுமதி வாங்கிவிட்டது "
Rate this:
2 members
59 members
76 members
Share this comment
Rajkumar Sakthivelu - coimbatore,இந்தியா
14-ஜூலை-201314:41:03 IST Report Abuse
Rajkumar Sakthiveluகரக்ட் .. நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல் நடிக்கிறேன் என்னும் பேச்சு வார்த்தைதான் அவை ...
Rate this:
161 members
0 members
48 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201316:54:01 IST Report Abuse
சு கனகராஜ் தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் திமுக ரெண்டுபேரும் சேர்ந்து அழ வேண்டியதிருக்கும் ...
Rate this:
155 members
0 members
52 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்