Divest only 3.56% central stake in NLC: Jayalalithaa | என்.எல்.சி., பங்கு வாங்க தமிழக அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி., பங்கு வாங்க தமிழக அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை

Updated : ஜூலை 14, 2013 | Added : ஜூலை 13, 2013 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
என்.எல்.சி., பங்கு வாங்க தமிழக அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை

சென்னை:"மத்திய அரசு விற்க முடிவு செய்துள்ள, என்.எல்.சி.,யின், 5 சதவீதப் பங்குகளை, தமிழக பொதுத் துறை நிறுவனங்களுக்கு வாங்குவது தொடர்பாக, நாளை, தமிழக அதிகாரிகள், மும்பையில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் "செபி' அதிகாரிகளுடன் பேசுவர்' என, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், என்.எல்.சி., பங்குகளை, தமிழக அரசின், பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்கும்படி கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம், முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு முதல்வர் நேற்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:தங்களின் கடிதம் கிடைத்தது. அதில், என்.எல்.சி., பங்குகளில், 5 சதவீதத்தை, மத்திய அரசு குறைத்துக் கொள்ள விரும்புவது குறித்து எழுதி இருந்தீர்கள். என் முந்தைய கடிதத்தில் கூறிய யோசனையை, ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்."தமிழக அரசு சார்பில், ஒரு உயர் அதிகாரியை நியமிக்கும்படியும், அவர், நாம் அமல்படுத்தும் ஏற்பாடுகளுக்கு, இறுதி வடிவம் கொடுக்கட்டும். என்.எல்.சி.,யின், 5 சதவீதப் பங்குகளை, தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களை நிர்வகிக்கும், அரசு நிறுவனமே வாங்கிக் கொள்ளட்டும். அதை அடுத்த மாதம், 8ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளீர்கள்.

குழு நியமனம்:இது தொடர்பாக, மத்திய அரசு பங்கு குறைப்பு செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு, இம்மாதம், 6ம் தேதி, எழுதிய கடிதத்தில், அதிகாரி நியமிக்கும்படி கேட்டிருந்தார். என் உத்தரவு படி, தலைமைச் செயலர், 7ம் தேதி, உங்கள் கடிதத்திற்கு பதில் அளித்து விட்டார். பங்கு விவகாரத்தை கவனிப்பதற்காக, நிதித் துறை செயலர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர், தொழில் துறை இணை செயலர், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இம்மூவரையும், பங்கு முதலீட்டை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, மத்திய அரசு செயலருடன் பேசும்படி உத்தரவிட்டுள்ளேன். இக்குழுவினர், பலதரப்பட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளனர்.மாநிலத்தில் உள்ள, எந்தெந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கு, என்.எல்.சி., பங்குகளை வாங்குவது, பங்குகளின் விலை நிர்ணயம், பங்குகளை, தமிழக பொதுத் துறை நிறுவனங்களுக்கு மாற்றும் கால அளவு, ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நான் கடந்த, 7ம் தேதி எழுதிய கடிதத்தில், என்.எல்.சி.,யின், 5 சதவீதப் பங்குகளை, முழுமையாக வாங்க, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தேன்.மக்களிடம், 6.44 சதவீதப் பங்குகள் உள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க, 3.56 சதவீதப் பங்கை விற்றாலே போதுமானது. என்.எல்.சி.யின், 5 சதவீதப் பங்குகளை பெறுவது தொடர்பாக, "செபி' மற்றும் மத்திய அரசு அதிகாரிகளிடம், பேச்சுவார்த்தை நடத்தும்படி, மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.


பேச்சுவார்த்தை:

இக்குழு வரும், 15ம் தேதி, மும்பை சென்று, மத்திய அரசு மற்றும் "செபி' அதிகாரிகளுடன், பேச்சுவார்த்தை நடத்துவர். அப்போது, பங்கு மாற்றம் தொடர்பாக, இறுதி முடிவு எடுக்கப்படும். இதன் மூலம், தற்போது நெய்வேலியில், என்.எல்.சி., ஊழியர்கள் நடத்தி வரும், தொடர் போராட்டத்திற்கு, தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன்.இவ்வாறு, முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAI.RAMANAA - ILAVASA NAADU ,இந்தியா
14-ஜூலை-201311:09:56 IST Report Abuse
JAI.RAMANAA இந்த 5 % விற்பனை எனபது மத்திய அரசு போடும் சிறிய மீன் இதை போட்டுவிட்டு நாளைக்கு 20 முதல் 30% சதவீதம் வரை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டம் பெரும்பாலும் ENRON ,போன்ற அந்நிய நாட்டு முதலாளிகளுக்கு அந்த பெரும்பங்கு விற்கப்படும் அப்பொழுது இந்த 5 % பங்கு வைத்துள்ளவர்கள் 30 % பங்குகளை வைதுள்ளவர்களுக்கும் அவர்களின் முடிவுகளுக்கும் கட்டுப்படவேண்டிய சூழ்நிலை உருவாகும் .,,அந்த சூழ் நிலையில் அந்த அந்நிய தனியார் நிறுவனங்கள் தாங்கள் அந்த 5 சதவித பங்குகளையும் திரும்ப பெறவேண்டி தீர்மானங்கள் போடாலாம் முழு பங்கையும் அவர்களே வாங்கி தனிச்சையாக செயல் படலாம் அந்த வகைக்கு அவர்கள் எந்த தீர்மானமும் கொண்டுவரலாம் ஆகவே முதலில் வெளியேறும் 5 % பங்கு NLC இல் அன்னியர், தனியார் நுழைவதற்கான அடித்தளமே எனவே இந்த அம்மையார் அதற்க்கு வித்திடாமல் NLC பங்குகளை விற்க கூடாது என்கின்ற முடிவில் உறுதியாக இருந்து அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் ., தமிழக மக்களின் மின்சாரத்தின் ஜீவாதாரத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு துணை போககூடாது
Rate this:
Share this comment
Cancel
Rama Ram - singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-201308:57:01 IST Report Abuse
Rama Ram அம்மாவின் யோசனை தொலை நோக்கு சிந்தனை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201308:47:01 IST Report Abuse
Srinivasan Kannaiya நிலக்கரி சுரங்கம் நெய்வேலியில் நல்லாதானே போகுது.. இப்போ என்ன பிரச்சினை.... ஏன் பங்குகளை விற்கவேண்டும்.. ஒன்றுமே புரிய வில்லை...
Rate this:
Share this comment
Cancel
GURUNATHAN GOPALAKRISHNAN - NEYVELI,இந்தியா
14-ஜூலை-201308:42:03 IST Report Abuse
GURUNATHAN GOPALAKRISHNAN தொழிற்சங்க தலைவர்களின் விளம்பர மோகத்தால் பலியாகும் என். எல். சி தொழிலாளர்கள். என்.எல்.சி நிறுவனத்தை பங்கு சந்தையிலிருந்து விலக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எண்ணம். ஆனால், அது தமிழக அரசின் அறிவிப்பால் நடைபெற வாய்பில்லாமல் போன நிலையில், வேலை நிறுத்தத்தை விலக்கி கொள்வதுதான் தொழிற்சங்க தலைவர்களின் நிலையாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு பல தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பு செய்வது , தொழிற்சங்க தலைவர்களுக்கு இலவசமாக விளம்பரம் கிடைகின்றது . ஆகவே தேவையில்லாமல் தொழிலாளர்களின் விருபத்திற்கு மாறாக செயல்படுகிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
14-ஜூலை-201307:14:32 IST Report Abuse
Samy Chinnathambi தமிழக அரசு பங்கு வாங்குவதெல்லாம் சரிதான்....இது வெறும் அஞ்சு சதவீதம் தான். ஒரு முப்பது சதவீதம் வாங்கி இருந்தால், போக்குவரத்து கழகத்தில் இருப்பது போல அண்ணா திமுக தொழிற்சங்கம் ஒன்று ஆரம்பித்து அதிமுக ஆட்கள் மட்டும் வேலை செய்யாமல் கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கிகொண்டு இருக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
14-ஜூலை-201301:13:33 IST Report Abuse
Ab Cd தமிழக பொதுத் துறை நிறுவனங்களும், பின்னர் பங்குகளை விற்க வாய்புள்ளது, அப்போது எப்படி விற்கும்? மத்திய அரசுக்கு திரும்ப கொடுக்குமா? அல்லது இப்போது பிரச்சனையை சமாளித்து விட்டு, பின்னர் தனியாருக்கு விற்குமா? தெளிவு படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201303:37:12 IST Report Abuse
மதுரை விருமாண்டிதெளிவா, மம்மிக்குத் தான், இல்லை என்றால் அவங்க பினாமிக்குத் தான் விக்கும்... போதுமா ??...
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
14-ஜூலை-201300:47:13 IST Report Abuse
Sekar Sekaran இந்த அற்புதமான அருமையான திட்டத்தை அம்மாவை தவிர யாரால் செய்துவிட முடியும். இதே கருணாவின் ஆட்சியில் இப்பிரச்சினை வந்தபோது..ஆதரவை காட்டி மிரட்டினாரே தவிர வருங்காலத்தில் இப்படிப்பட்ட பிரச்சினை வரவிடாமல் இருக்க ஏதேனும் செய்தாரா..கேட்டால் ஆஹா ஓஹோஹோ..கருணா அவர்கள் சாணக்கியன்..அரசியல் வித்தகர் என்று புகழாரம் சூட்டி மகிழ்வார்கள்..அம்மாவின் இந்த மாதிரியான திட்டத்தால் மன்மோகன் சிங் அரசே எதிர்பார்க்கவில்லை..மறுக்க இயலாமல் அம்மாவின் அரசியல் சாதுர்யத்தில் அடங்கிப்போனார்கள்..வேறு வழியே இல்லை..மகத்தான வரவேற்ப்பினை பெற்றுகொண்டார் அம்மா அவர்கள்..என் எல் சி போராட்டத்திற்கு சுமுகமான தீர்வாக அமையும் திட்டம்..பல டன் நிலக்கரியின் கரிப்பூச்சு திமுகவின் தலைவர் முகத்திலே..உண்மைதானே..?
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201300:32:23 IST Report Abuse
மதுரை விருமாண்டி ரெண்டு வாரமா இழுத்தடிக்கப்படும் இந்த விவகாரம்,ஆனால் அதற்கும் முன்பு, என்றைக்கோ மத்திய அரசும் செபியும் எடுத்த முடிவு... இவ்வளவு நாளும் குப்புறப்படுத்து இருந்து விட்டு, இப்போ, கடிதம் எழுதி காலாட்சேபம் பண்றாங்களாம்.. வெட்டித் திட்டங்களை எல்லாம், பட்டன் அமுக்கி வீடியோ கான்பரன்ஸில் திறப்பார்களாம்.. இந்த டுவிட்டர் யுகத்தில்,... இதுக்கு மட்டும் ஏன் கடித பரிமாற்றம்.. ஒரு தொலை பேசியில் ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய உரையாடலை பதிவு செய்து, சட்ட உருவம் கொடுத்து, அதை வழிமுறைப்படுத்தி, மின்னஞ்சலில் தகவல் பரிமாற்றம் செய்யும் காலம் எப்பத்தான் வருமோ.. என்ன கொடுமை சரவணா ?? இந்த அரசியல்வியாதிகள் தாங்கள் அரசியல் ஆதாயம் பாக்க, மக்களை என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்கிறார்களே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை