துவக்கப்படாத குறுவை சிறப்பு திட்டம்: அமைச்சர்கள் துவக்குவதில் காலதாமதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

டெல்டா விவசாயிகளுக்கு, குறுவை சாகுபடி சிறப்பு திட்டங்களை முதல்வர் அறிவித்து, ஒரு மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், அமைச்சர்களின் தேதி கிடைக்காததால், திட்டத்தை துவங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக, புகார் எழுந்து உள்ளது.


சிறப்பு திட்டம்:

இந்த ஆண்டு, மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு, இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, கடந்த மாதம், 14ம் தேதி, மூன்று அம்ச சிறப்பு திட்டங்களை, முதல்வர் அறிவித்தார்.அதன்படி, 12 மணி நேரம் மும்முனை மின்சாரம்; 6 கோடி ரூபாய் செலவில், உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள், தாவர பூச்சிக் கொல்லிகள்; 12 கோடி ரூபாய் செலவில், 6,000 பாசனக் குழாய்கள், இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.முதல்வர் அறிவித்தபடி, வேளாண் துறையிடம், கையிருப்பில் உள்ள உரங்களை, டெல்டா விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பாசனக் குழாய் இல்லாததால், தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு விவசாயிக்கும், 20 ஆயிரம் ரூபாய் செலவில், பாசனக் குழாய் வழங்கப்பட உள்ளது.குறுவை சிறப்பு திட்டத்தை பயன்படுத்தி, 1 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கும் என, கணிக்கப்பட்டது. அதற்கேற்ப, சாகுபடி நடந்து வருகிறது.


மூன்று அம்ச திட்டம்:

ஆனால், முதல்வர் அறிவித்த மூன்று அம்ச திட்டங்களில், மின்சாரம் தவிர, மற்றவை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.சிறப்பு திட்டங்களை அறிவித்து, ஒரு மாதமாகும் நிலையில், அவை பயன்பாட்டிற்கு வராததால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்து உள்ளனர்.இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்ட விவசாயி ஒருவர் கூறுகையில், ""எங்களுக்கு, இன்னும் சிறப்பு திட்ட உரம் மற்றும் பாசனக் குழாய் கிடைக்கவில்லை. நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்படுகிறது. உரிய நேரத்தில் உரம் கிடைக்காவிட்டால், பயிர்களும் பாதிக்கப்படும். காலம் தாழ்த்தி வழங்குவதால், எந்த பயனும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால், சம்பா சாகுபடி காலம் துவங்கிவிடும்,'' என்றார். இலவச உரம் மற்றும் பாசனக் குழாய் வழங்கும் விழாவை, இம்மாத துவக்கத்தில் நடத்த, வேளாண் துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், பாசனக் குழாய் கொள்முதல் தாமதமானதால், விழா தள்ளிப்போனது. மீண்டும், 12ம் தேதி விழா நடக்கும் என, கூறப்பட்டது.


தாமதம் ஏன்?

இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:இத்திட்டத்தை துவக்குவதற்கு, அமைச்சர்கள் வருவது தாமதமாகிறது. அந்தந்த மாவட்ட அமைச்சரோடு, துறை அமைச்சரும் கலந்து கொள்ளும் வகையில், விழாவிற்கு மூன்று முறை திட்டமிடப்பட்டது. அமைச்சர்களின் தேதி ஒருங்கே கிடைக்காததால், கடைசி நேரத்தில், விழாவை ஒத்தி வைக்கும்படி, உத்தரவு வந்தது.எங்களால், விழா ஏற்பாட்டை மட்டும் தான் செய்ய முடியும். திட்டத்தை துவக்குவது, அமைச்சர்கள் கையில் உள்ளது.விவசாயிகள், எங்களை நச்சரித்து வருகின்றனர். அவர்களுக்கு பதில் சொல்வதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. எங்களின் பிரச்னையை, துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

உரிய நேரத்தில் உரம் கிடைக்காவிட்டால்,பயிர்களும் பாதிக்கப்படும். காலம் தாழ்த்திவழங்குவதால், எந்த பயனும் இல்லை.இதே நிலை தொடர்ந்தால், சம்பா சாகுபடி காலம் துவங்கிவிடும்

- நமது நிருபர் -

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangairaja - tcmtnland,இந்தியா
14-ஜூலை-201309:26:46 IST Report Abuse
Thangairaja நாற்பதுக்கும் இன்னும் சரியான ஆட்களைதேர்ந்தேடுத்து அம்மா.....விடம் நல்ல பெயர் எடுக்க முடியவில்லையே என்ற எயச்ச்சலில் இருக்கும் அமைச்சர்களை தொந்தரவு செய்யாதீர்கள், விவசாயிகளா மந்திரியாக்கினார்கள்? அம்மா ....அம்மா.......
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201303:44:13 IST Report Abuse
மதுரை விருமாண்டி வாயினால் சுட்ட வடை... மம்மிக்கு வி.காந்தை விரட்டிப் பிடித்து விளையாடவே நேரம் பத்தவில்லை...
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
14-ஜூலை-201302:48:34 IST Report Abuse
விருமாண்டி விவசாயி எப்படி போனா நமக்கென்ன எங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் முக்கியம் இல்லை இலங்கை தமிழர்கள் மட்டும்தான் முக்கியம் .இப்படி இவர்களை பற்றி பேசி பேசி நம் தமிழர்களை மறந்துவிட்டோம்.
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
14-ஜூலை-201300:54:07 IST Report Abuse
விருமாண்டி ஊருக்கே சோறு போட்டாலும் விவசாயிகளுக்கு நாங்கள் போராட வரமாட்டோம்.இலங்கை தமிழர் பிரச்சனைனா மட்டும் சொல்லுங்க எங்கே இருந்தாலும் ஓடி வந்துடுறோம்.இது தான் இன்றைய(போலி ) அரசியல்வாதிகள் மற்றும் அப்பாவி தமிழ்மக்களின் எண்ணங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
14-ஜூலை-201300:44:11 IST Report Abuse
Ab Cd "அமைச்சரின் தேதி கிடைக்காததால், குறுவை சாகுபடி தொடங்க முடிய வில்லை" மக்கள் ஆட்சியில், மக்கள் நலன் காக்கவேண்டிய அமைச்சர்களுக்கு இதை விட வேறு என்ன முக்கியமான வேலை இருக்க முடியும். ஆடி பட்டம் தொடங்கி விட்டதால்,இனியும் காலம் தாழ்த்தாது,வேளாண் துறை அதிகாரிகள், தங்களின் முத்த அதிகாரிகளை வைத்து இத்திட்டத்தை தொடங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
venkatraman - kudavasal  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201300:43:23 IST Report Abuse
venkatraman அன்புள்ள அம்மாவுக்கு தி்ருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலூக்காவில் உள்ள கூந்தலூர் தொடக்க வேளண்மை கிளையில் போன சம்பா நடவு போகத்தி்ற்கு வட்டி இல்லா நகை கடன் வழங்கினீர்கள் இதற்கு முதலில் நன்றி தெரிவித்துகெள்கிறோம்.எங்கள் பகுதி்யில் தாங்கள் எங்களுக்கு அளித்த வட்டி இல்லா நகை கடன் கால வரையரைய் மேலும் ஒரு வருடமாக மாற்றி தருமாறு மிக தாழ்மையோடு கேட்டுகொள்கிறோம் இப்படிக்கு விவசாயம் பாதி்க்கப்பட்ட விவசாயிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்