E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2013
23:49

இரண்டு ஆண்டு தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யலாம் என ஜூலை 10ம் தேதி,சுப்ரீம் கோர்ட் முக்கியமான தீர்ப்பு வழங்கியது. அரசியல் கட்சிகளை இத்தீர்ப்பு அதிர்ச்சி அடைய வைக்க காரணம், பெரும்பாலான கட்சிகளின் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்பது தான். யாரெல்லாம் அப்படி இருக்கின்றனர்:

2009ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 545 எம்.பி.,க்களில் 450 பேர் மீது வழக்குகள் உள்ளன.இதில், 150 பேர் மீது ஒரு வழக்கு மட்டும் உள்ளது. 56 பேர் மீது ஐந்த அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதாவது 35 சதவீத உறுப்பினர்களின் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன.எம்.பி.,க்கள் மீதுள்ள மொத்த வழக்குகளில் 30 சதவீதம், நிலுவையில் உள்ளன. 14 சதவீத வழக்குகள், கடுமையான குற்றங்களின் கீழ் பதியப்பட்டுள்ளன.கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, மிரட்டல், ஏமாற்றுதல், நிதி மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன.எம்.பி.,க்கள் இப்படியிருக்க, இவர்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை புள்ளிவி பரம் காட்டுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 4,032 எம்.எல்.ஏ.,க்களில் 1,258 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள். அதாவது 31 சதவீதம். இதில் 15 சதவீதம் பேர் மீது கடுமையான குற்றங்களின் கீழ் வழக்குகள் உள்ளன.

அரசியல் கட்சிகளில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 118 (12 சதவீதம்) பேர் மீது வழக்குகள் உள்ளன. காங்., எம்.எல்.ஏ.,க்கள் 107 (8 சதவீதம்) பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குற்றப் பின்னணி இல்லாத எம்.எல்.ஏ.,க்களை கொண்ட கட்சிகளே இல்லை.மிசோரம் மாநில எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது மட்டுமே வழக்குகள் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.


உலக நாடுகளில் எப்படி?





மற்ற நாடுகளில் குற்றப் பின்னணி உடையவர்கள், தேர்தலில் போட்டியிடுவது பற்றி அந்நாட்டு சட்டம் என்ன சொல்கிறது:

இங்கிலாந்து: இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஏதேனும் ஒரு குற்றப் பிரிவில், காலவரையற்ற காவல் அல்லது ஓராண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்றால், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை.

கனடா:இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிட தடை.

ஆஸ்திரேலியா:குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலோ அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டு ஓராண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்றிருந்தாலோ தேர்தலில் போட்டியிட தடை.

ஜெர்மனி :கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது குறைந்த பட்சம் ஓராண்டு சிறை தண்டனை பெற்றாலோ தேர்தலில் போட்டியிட தடை




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.