வாஜ்பாய் பாதி; அத்வானி பாதி சேர்ந்து செய்த கலவை மோடி: பா.ஜ., தலைவர் புது விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாஜ்பாய் பாதி; அத்வானி பாதி சேர்ந்து செய்த கலவை மோடி: பா.ஜ., தலைவர் புது விளக்கம்

Added : ஜூலை 13, 2013 | கருத்துகள் (15)
Advertisement
வாஜ்பாய் பாதி; அத்வானி பாதி சேர்ந்து செய்த கலவை மோடி: பா.ஜ., தலைவர் புது விளக்கம்

சூலூர்: ""வாஜ்பாயின் வளர்ச்சி திட்டங்கள்; அத்வானியின் இந்துத்துவம், ஆகிய இருவரின் கலவையாக, நரேந்திர மோடி விளங்குகிறார்,'' என, பா.ஜ., தலைவர் இல. கணேசன் கூறினார்.

கோவை மாவட்டம், சோமனூரில், பா.ஜ., மகளிரணி மாநில மாநாடு நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்: இந்தியாவில் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வாஜ்பாய், இந்துத்துவ பிரதிநிதி அத்வானி ஆகிய இருவரின் ஒட்டுமொத்த கலவையாக, பிரதிநிதியாக நரேந்திர மோடி விளங்குகிறார். அதற்காகவே, அவரை வரும் லோக்சபா தேர்தலில் முன்னிறுத்துகிறோம். சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காகவே கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி கட்சிகள், பா.ஜ.,வை எதிர்க்கின்றன.வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, 4வது வழியில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. ஆட்சி மாற்றம் வந்தவுடன், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலு, அதனை 6வது வழியில் மாற்றினார். அதனால், பாதியோடு நிற்கிறது. தி.மு.க., வை பொறுத்தவரை சேமு சமுத்திர திட்டத்தை லாபமாக பார்க்கிறது; ஆனால், நாங்கள் அதை ஸ்ரீராமபிரானின் பாலமாக பார்க்கிறோம். அவர்களுக்கு லாபம் முக்கியம்; எங்களுக்கு பாலம் முக்கியம்.

தமிழகத்தில் இந்து இயக்கங்களின் நிர்வாகிகளை கொலை செய்தல், தாக்குதல் போன்றவை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. பயங்கரவாதம் நெருப்பு போன்றது. பரவாமல் இருக்க, தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந் தால் கச்சத்தீவு மீட்கப்படும்; மீனவர்களின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இலங்கை அகதிகள், ஆஸ்திரேலியாவுக்கு செல்வதாக, கருணாநிதி கூறுகிறார். ஏன், அவர் முதல்வராக இருந்தபோது, இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய் திருக்க வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இப்போது மட்டும் என்ன அக்கறை வந்தது? தமிழக அரசு, இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். இவ்வாறு இல.கணேசன் பேட்டியளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
14-ஜூலை-201311:04:40 IST Report Abuse
S Rama(samy)murthy திரு மோடிஜி அவர்களை பற்றி வசை பட வசைபாட , அவரைபற்றி பட்டி , தொட்டிகளில் "அவர் இந்து தேசியவாதி என்று சொன்னதில் என்னதவறு ? " என்று பேசபடுகிறது . தினமலர் கருது பகுதி வாதம் , பெரும்பான்மை நடுநிலையாளர்களை சிந்திக்க வைத்துள்ளது . UPA வின் உழல் இன்னும் தீவரமாக சிந்திக்க்வைதுள்ளது . ஆக திரு மோடிஜி வசை பாடுவதை பற்றி டீ கடையிலும் பேசபடுவது சந்தோசம் ..ஜெய் ஹிந்த் . சுப ராம காரைக்குடி
Rate this:
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
14-ஜூலை-201316:41:22 IST Report Abuse
rajen.tnlஎங்கள் கிராமத்தில் உள்ள எல்லோரும் இப்போது மோடி பேச்சிதான்...என்னை மாதிரி தேச பற்று உள்ள எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்....மோடி எல்லா கச்சிகளும் எதிர்த்து பேட்டி கொடுப்பதானால்,மாணவர்கள் , பெரும்பான்மை நடுநிலையாளர்களை சிந்திக்க வைத்துள்ளது ...
Rate this:
Share this comment
Cancel
madurakani - Madurai ,இந்தியா
14-ஜூலை-201309:19:54 IST Report Abuse
madurakani நிறைய காங்கிரஸ் கட்சி ஆட்களுக்கு மோடிபோபியா பிடித்திருக்கு
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
14-ஜூலை-201309:11:17 IST Report Abuse
JALRA JAYRAMAN யாரும் நல்லவன் இல்லை யாரும் கெட்டவன் இல்லை விகிதாசாரம் தான் கூட குறைய இருக்கும், எப்படி நிர்வாகம் செய்விர்கள் என்று பேசுவதை விட்டு ,அவர் பாதி இவர் பாதி, கோவில் குளம் என்றால் இளைய தலைமுறை வாக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே? இன்றைய இளைஞர்கள் வளமான வாழ்கையை தான் விரும்புகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
Rama Ram - singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-201309:02:40 IST Report Abuse
Rama Ram இந்தியாவை காக்க வந்த இறைவன் மோdi
Rate this:
Share this comment
Cancel
Rama Ram - singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-201308:33:10 IST Report Abuse
Rama Ram இந்தியாவை காக்க வந்த இறைவன்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
14-ஜூலை-201307:06:02 IST Report Abuse
N.Purushothaman இஸ்லாமியர்கள் இஸ்லாத்தில் பிடிப்புடன் இருக்கிறார்கள்...அது போல் இந்துவும் இந்துத்துவத்தில் பிடிப்புடன் இருக்கலாம்....இதில் தவறு இல்லை...இரு மார்க்கமும் ஒருவரை ஒருவர் குறை சொல்ல முனையும் போது தான் பிரச்னை உருவாகிறது....இந்துத்துவத்தில் இருக்கும் மோடி இஸ்லாத்தை வெறுப்பதில்லை....அது தான் உண்மையான மதசார்பற்ற நிலை...அதே போல் இந்துத்துவத்தை அவர் இஸ்லாமியர்களிடத்தில் துணிப்பதில்லை....அது தான் மத சார்பற்ற நிலை...இந்துத்துவம் மத மாற்றத்தையும்,மத துவேஷத்தையும் ஆதரிக்கவில்லை ....
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
14-ஜூலை-201306:12:59 IST Report Abuse
villupuram jeevithan இப்போது நாடு இருக்கும் நிலையில் வளர்ச்சி தான் முக்கியம், இந்துத்துவா அல்ல மோடியை ஆதரிப்பவர்கள் அவரது வளர்ச்சி திட்டங்களுக்கு தான் ஆதரிக்கிறார்கள். அனாவசியமாக மத உணர்வுகளை திணிக்க வேண்டாமே?
Rate this:
Share this comment
Cancel
manoj - trichy,இந்தியா
14-ஜூலை-201306:02:38 IST Report Abuse
manoj மனிதன் பாதி மிருகம் பாதி இரண்டும் கலந்த கலவை மோடி என்கிறார் இல கணேசன்
Rate this:
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
14-ஜூலை-201316:31:56 IST Report Abuse
rajen.tnlயானை பாதி,,சிங்கம் பாதி கலந்த கலவை மோடி என்கிறார் இல கணேசன்...
Rate this:
Share this comment
Cancel
14-ஜூலை-201300:35:34 IST Report Abuse
உண்மையை சொல்கிறேன் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுவிடும் என்றால் நாம் மதத்தை கலந்துதான் திட்டங்களை எப்படியாவது முட்டு கட்டையை போட்டு விட வேண்டும் விடப்புடாது.
Rate this:
Share this comment
இளங்கோ - chennai,இந்தியா
14-ஜூலை-201309:21:59 IST Report Abuse
இளங்கோஇந்துத்வாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.ஹிந்துக்களை விட மத வேற்றுமை பாராட்டாதவர்கள் கிடையாது.ஹிந்துக்கள் தங்கள் மதத்துக்கு ஆள் பிடிப்பது கிடையாது.தன்னுடைய மதத்தை சொந்த நாட்டிலேயே மற்றவர்கள் இழிவு படுத்துவதை தடுப்பதே அவர்கள் நோக்கம்.அடுத்ததாக.... உண்மைக்கு முகமூடி தேவையில்லை.இப்படி பெயர் வைத்து கொண்டால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. ...
Rate this:
Share this comment
Cancel
14-ஜூலை-201300:33:15 IST Report Abuse
உண்மையை சொல்கிறேன் இந்துத்துவ பிரதிநிதி என்று வந்தாலே அவைகள் அத்வானியை போன்று தான் இருப்பார்கள். அதாவது வாழ்நாள் பிரதமர் வேட்பாளர் மட்டுமே. அப்படி தானே அத்வானி ஒரு காலத்தில் சொல்லி சொல்லி தக்கவைத்து கொள்ளவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை