‘எறும்புக்கு தீனி போடுவதில்‌ மனநிறைவு’| Dinamalar

பொது செய்தி

இந்தியா

‘எறும்புக்கு தீனி போடுவதில்‌ மனநிறைவு’

Added : ஜூலை 13, 2013 | கருத்துகள் (10)
Advertisement
‘எறும்புக்கு தீனி போடுவதில்‌ மனநிறைவு’

கடந்த, 20 ஆண்­டு­க­ளாக திரு­வான்­மியூர் – கொட்­டி­வாக்கம் கடற்க­ரையில்,எறும்­புக­ளுக்கு தீனி போட்டு வரு­கிறார் 51 வயது தேவாராம். தின­சரி கடற்­க­ரையில் காலையில் 7:30 மணிக்கு திரு­வான்­மியூர் ஆர்.டி.ஓ சிக்­னலில் இருந்துதிரு­வான்­மியூர் – கொட்­டி­வாக்கம் கடற்­கரை வரை­யுள்ள 2 கி.மீ., துாரம் நடந்து சென்று எறும்­புக்கு தீனி போடு­கிறார்.திரு­வான்­மி­யூரில் அடகு கடை வைத்­துள்ள இவர், எறும்­புக்கு தீனி போடு­வது புண்­ணியம் என்ற அடிப்­ப­டையில் அதை பின்­பற்­று­வ­தா­கவும், அதன் மூலம் மன­நி­றைவு கிடைப்­ப­தா­கவும்கூறு­கிறார். அவ­ரிடம் பேசி­யதில் இருந்து...

எப்­போதில் இருந்து இந்த பழக்கம் வந்­தது?
எங்கள் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் பல்லி மாவட்­டத்தில், இந்த பழக்கம் முஸ்­லிம்கள் உட்­பட அனைத்து சமூ­கங்­க­ளி­டமும் இருக்­கி­றது.எறும்­புக்கு தீனி போட்டால் புண்­ணியம் என்று ஒரு நம்­பிக்கை. சென்­னைக்கு 12 வயதில், 1978ல் வந்தேன். 1993ம் ஆண்டில் இருந்து எறும்­பு­க­ளுக்குதீனி போட துவங்­கினேன். அப்­போது காலி மனை­க­ளாக இருந்த பகு­திகள், இன்று கட்­ட­டங்­க­ளாக மாறி விட்­டதால் கடற்­க­ரைக்கு சென்று எறும்­புக்கு தீனி போடு­கிறேன்.

எறும்பு தீனியை நீங்­களேதயா­ரிக்­கி­றீர்­களா? வெளியில்வாங்­கு­கி­றீர்­களா?
நானே தயா­ரிக்­கிறேன். மாதா மாதம் 60 கிலோ கம்பு வாங்­கு­கிறேன். அதில் தின­சரி 2 கிலோவை மாவாக அரைத்து கொள்வேன். என் மனைவி,பிள்­ளை­களும் உதவி செய்வர். இதற்கு மாதம் 1,500 ரூபாய் செல­வா­கி­றது.

இந்த செயல் புண்­ணியம் என்றநம்­பிக்கை எப்­படி வந்­தது?மத நம்­பிக்­கையா?
அது எனக்கு தெரி­யாது. ராஜஸ்தான் மாநி­லத்தில் எங்கள் ஊரில் இந்த நம்­பிக்கை உள்­ளது. என்­னு­டைய அப்பா இதை பின்­பற்­றினார். நானும் நம்­பு­கிறேன். மற்­ற­படி, எந்த மத நூலில் இது பற்றி கூறி­யி­ருக்­கி­றது என்று எதுவும் எனக்கு தெரி­யாது. அது தேவை­யு­மில்லை.

கடந்த 20 ஆண்­டு­களில், இதை ஏன் செய்ய வேண்டும் என, தோன்­றி­ய­துண்டா?
இல்லை. புண்­ணியம் என்ற நம்­பிக்­கையில் இந்த செயலை துவங்­கி­னாலும், இப்­போது இதை ஒரு கட­மை­யா­கவே செய்­கிறேன். இதில் எந்­த­வித பலன்­க­ளையும் எதிர்­பார்க்­க­வில்லை. துன்பம் வந்­தாலும் இந்த செயலை நிறுத்த வேண்டும் என்று நினைத்­த­தில்லை.

அப்­ப­டி­யானால் இந்த பழக்கம், உங்கள் பண்பாட்டுடன் உங்­களை இணைத்து கொள்ளஒரு கரு­வி­யாக பயன்­ப­டு­கி­றதா?
ஆமாம். யாருக்­குமே அவ­ரவர் நம்­பிக்கை கொண்­டுள்ள விஷ­யங்­களை கடைப்­பி­டிப்­பதில் ஒரு திருப்தி ஏற்­படும். எனக்கு என்­னு­டைய பண்பாட்டுடன் வாழ இந்த பழக்கம் ஒரு வாய்ப்­பாக உள்­ளது. சில­ச­மயம் என்­னு­டைய மனை­வியும் ஒன்­றாக இணைந்து தீனி போடுவார். இதில் எனக்கு முழு மன­நி­றைவு கிடைக்­கி­றது.

தமிழ் வாசிக்க தெரி­யுமா?
பேச மட்­டுமே செய்வேன். தமிழ் எழுத படிக்க கற்று கொள்­ள­வில்லை.

35 ஆண்­டு­க­ளாக சென்­னையில்இருக்­கி­றீர்கள். எனினும்ராஜஸ்­தா­னி­ய­ரா­கவே வாழவிரும்­பு­கி­றீர்­களா?
தெரி­ய­வில்லை. எனக்கு இப்­படி இருப்­பதுமட்­டுமே பிடிக்­கி­றது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
14-ஜூலை-201315:10:16 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM எறும்பு போல சேர்ப்பது ,கரும்பு போல இனிக்கும் ...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூலை-201313:55:12 IST Report Abuse
g.s,rajan எறும்பு அதை நீ விரும்பு ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201309:02:29 IST Report Abuse
kumaresan.m " எறும்புக்கு தீனி போடுவது மட்டும் அல்ல சகோதரா வாழ்வில் பின்தங்கிய அல்லது ஆதரவு அற்ற சக மனிதனுக்கும் உதவிகள் செய்தால் மனநிறைவு ஏற்படும் மற்றும் புண்ணியம் கிட்டும் "
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201308:58:59 IST Report Abuse
kumaresan.m " நல்ல பழக்கம் இதைதான் நமது முன்னோர்களும் கடைபிடித்தார்கள் ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு முன்பு அரிசி மாவால் கோலம் போட்டார்கள் அதனை எறும்புகள் தின்று மகிழ்ந்தது ஆனால் இன்று நவ நாகரிக மனிதர்கள் சுண்ணாம்பு பொடியால் கோலம் போட்டு எறும்புக்கு ஆப்பு வைத்து விட்டார்கள் "
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201308:57:11 IST Report Abuse
பி.டி.முருகன்    கடிக்கும் எறும்பையும் கருணையுடன் கவனிக்கும் காருண்ய வள்ளலே நீவிர் வாழ்க.பெத்த தாய் தகப்பனுக்கே சோறு போடாத உலகத்தில் இப்படியும் மனிதர்களா?
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
14-ஜூலை-201308:46:59 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM நீங்கள் எறும்புக்கு சர்க்கரை ,அல்லது தின்பண்டங்களை ஒரு இடத்தில் போட்டு விட்டு அதை உன்னிப்பாக கவனியுங்கள் ,முதலில் ஒரு எறும்பு அதை பார்த்து விட்டு பிறகு அதன் இருப்பிடம் உள்ள இடத்திற்கு விரைந்து சென்று ஒன்றன் ,பின் ஒன்றாக அணைத்து எறும்புகளும் வரும், இந்த எறும்பு மற்ற எறும்புகளுக்கு விஷயம் சொல்லுவது போல முகத்தோடு ,முகம் ஒட்டி ,தான் கண்ட தின்பண்டங்கள் பற்றி சொல்லுவது போல இருக்கும் அதற்கு பிறகு அந்த எறும்பு தன் வேகத்தை அதிகமாக்கி ,வீரர்கள் படை எடுத்து வருவது போல சாறை,சாரையாக,வருவதும் ,அந்த தின்பண்டத்தை இரயாமல் mookil எடுத்து சென்று தன் kootukul waithu malai kalangalil தான் kastapadaamal yirukka cheymithu waithu kolkirathu ,kakai தான் கண்ட porulai thingamal மற்ற kakai karaiwathu போல yerumbum அதன் kootam alaithu wanthu தான் thingum .எறும்பு போல nam மனிதருக்கும் ஒன்று பட்டு இருந்து உள்ளதை பகிர்ந்து உண்ணும் எண்ணம் இருந்தால் , பட்டினி என்னும் பேய் பறந்து ஓடும் .....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201308:37:17 IST Report Abuse
Srinivasan Kannaiya அந்த காலத்தில் வீட்டின் முன் அரிசி மாவில் கோலம் போட்டு அனைத்து எறும்புகளுக்கும் உணவு படைத்தார்கள்.. இப்பொழுது நாகரீக வளர்ச்சியால் அந்த வழக்கம் அறவே ஒழியும் நிலையில் உள்ளது.. இன்னும் சிறிது காலத்தில் அது சரித்திரமாகிவிடும்..தேவாரம்.... வளர்க உங்கள் தொண்டு.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
14-ஜூலை-201305:50:26 IST Report Abuse
kundalakesi கண்ணில்லாத எறும்புக்கு முன் ஜன்மத்தில் ஒரு அரிசி போட்ட புண்ணியம் இன்று நான் நன்றாக இருக்கிறேன் என்று ஈசன் இன்ஜினியரிங் ஐயர் கூறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Vasu Murari - Chennai ,இந்தியா
14-ஜூலை-201302:41:18 IST Report Abuse
Vasu Murari இரும்பு மனம் கொண்ட மனிதர்களிடையே எறும்புக்குத் தீனி போடும் வழக்கத்தைக் கொண்டுள்ள இந்த நல்ல மனம் கொண்ட மனிதரைப் பாராட்டுவோம். அவரது வயது பற்றிய ஆராய்ச்சி இங்கு தேவையற்றது.
Rate this:
Share this comment
Cancel
leosam - Madurai,இந்தியா
14-ஜூலை-201300:36:54 IST Report Abuse
leosam 51 வயது தேவாராம், 12 வயதில் சென்னை வந்தார், அப்போது வருடம் 1978. அப்போ அவரு பிறந்தது 1966. அப்படின்னா அவருக்கு இப்போ வயது 47, கணக்கு சரியா நாட்டாமை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை