விதிகளை மீறி இயங்கும் வெளி மாநில "ஆம்னி' பேருந்துகள்: போக்குவரத்து துறை நடவடிக்கை என்ன?| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (7)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

வெளி மாநிலங்களில் அனுமதி பெற்று, தமிழகத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில், விதிகளை மீறி இயங்கும், "ஆம்னி' பேருந்துகளால், பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட, மாநகர பகுதிகளில் இருந்து, 950க்கும் மேற்பட்ட, தனியார், "ஆம்னி' பேருந்துகள், தமிழகத்தின் அநேக பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.சென்னை, கோயம்பேடு, "ஆம்னி' பஸ் நிலையத்தில் இருந்து, 80க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் நிறுவனம் மூலம், 650க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த பேருந்துகளுக்கு, சுற்றுலா பேருந்திற்கான அனுமதி அளித்துள்ள நிலையில், பயணிகளின் நலன் கருதி, பேருந்து நிலையத்தில் இருந்து, ஒருங்கிணைத்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், புதிதாக இயக்கத்திற்கு தயாராகவுள்ள, "ஆம்னி' பேருந்துகளுக்கு, அனுமதி அளிக்க, போக்குவரத்து துறையினர் மறுப்பதாக, "ஆம்னி' பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு, "ஆம்னி' பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் கூறியதாவது:தற்போது, 200க்கும் மேற்பட்ட புதிய, "ஆம்னி' பேருந்துகள் இயக்கத்திற்கு தயாராகவுள்ளன. இருப்பினும், கடந்த, இரண்டு மாதமாக, புதிய, "ஆம்னி' பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க, போக்குவரத்து துறையினர் மறுத்து வருகின்றனர். சில டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், நாகலாந்து, ஒடிசா உள்ளிட்ட பிறமாநிலங்களில் அனுமதி பெற்று, 100க்கும் மேற்பட்ட பேருந்துகளை, தமிழகத்தில், விதிகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளாக இயக்கி வருகின்றனர்.ஒவ்வொரு பேருந்திற்கும், சாலை வரியும், சுங்க கட்டணமும், முறையாக நாங்கள் செலுத்தி வரும் நிலையில், முறையாக அனுமதி பெறாத," ஆம்னி' பேருந்துகளை, வார விடுமுறை நாட்களில் மட்டும் இயக்கி, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.அனுமதி பெறாத வாகனங்கள், விபத்தில் சிக்கும்போது, அதில் பயணித்த பயணிகள், விபத்து தொகை பெறுவதிலும் சிக்கல்

Advertisement

ஏற்படும். இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்.ஆகவே, புதிய, "ஆம்னி' பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய பேருந்துகளுக்கு அனுமதி கேட்டு, பலடிராவல்ஸ் நிறுவனத்தினர் வருகின்றனர். உடனடியாக, அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது.பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பு; விதிகளை மீறி பேருந்துகளை இயக்கியது உள்ளிட்ட, முறைகேடான விஷயங்களில், குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனம், ஏற்கனவே ஈடுபட்டுள்ளதா என ஆராய்ந்து, அதன் அடிப்படையிலேயே அனுமதி வழங்குகிறோம். வெளி மாநிலத்தில் அனுமதி பெற்று, தமிழகத்தில் இயங்கும் வாகனங்களை கண்டறிய, இரண்டு கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளோம். அந்த வாகனங்களை கண்டறியும் பணி, தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padmagiriswaran - madurai,இந்தியா
15-ஜூலை-201314:54:27 IST Report Abuse
Padmagiriswaran ஒழுங்காக ஓம்னி பஸ் நடத்தினால் நஷ்டம் என்றாலும் சில கம்பனிகள் பெயருக்காக எந்த வித மான பிராடுதனமும் பணமல் நடத்திக்கொண்டுதான் வருகின்றன. வெளி மாநில பதிவுகளை எந்த ஒரு வெள்ளிகிழமை மாலை நேரங்களில் கோயம்பேடு சென்றாலும் அநேக வண்டிகளை ஒரே நேரத்தில் பிடித்து விடலாம். அந்த டிறேவேல்ஸ் பெயர்களும், இடமும் எல்லா RTO களுக்கும் தெரிந்த ரகசியம். ஆன் லைன் புக்கிங் வேப்சிடுகளிலேயே அதிக கட்டணம் வாங்கும் அணைத்து பஸ்களையும் பிடித்து விடலாம். வெள்ளிகிழமை இரவு பஸ்களில் சென்னை மதுரைக்கு Rs 1000 க்கு மேலும், ஞாயிறு இரவு பஸ்களில் மதுரை சென்னை பயணத்திற்கு Rs 1000 க்கு மேலும் வேப்சைடுளியே போட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே RTO அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு கண் தெரியவில்லையா? அல்லது மக்களையும் மற்றவர்களையும் மாகாங்களாக நினைதுகொண்டிருகிரார்களா என தெரியவில்லை. கோடிக்கணக்கில் சம்பாதிதுகொண்டிருக்கும் KPN ஆபீசில் ஆட்கள் நோர்ககூத் இடமில்லை. இதுவே ஒரு அரசு பேருந்து என்றால் பல விமர்சனங்கள் வந்திருக்கும். இதை விட கொடுமை பர்வீனிலும் சரி KPN இலும் சரி பயணிகளை மதிப்பதே இல்லை. வேப்சிடில் பார்த்தால் அவ்வளவு கம்ப்ளைன்ட். இதில் ஒரே நும்பேரை வைத்து கொண்டு பல பஸ் என்ற கன்றாவி கூத்து வேறு. ஆல் இந்திய டுரிஸ்ட் பெர்மிட் போட்டு விட்டு பாண்டி வழியாக செல்லும் நம்மூர் வண்டிகள். தமிழ்நாடு RTO விதி முறைகளின் படி VOLVO MultiAxle வண்டிகள் பெர்மிட் போடா முடியாது. ஆனால் விளம்பரத்துடன் இவ்வளவு வண்டிகள் ஓடுகின்றன. இது எப்படி. அரசு தூங்கிகொண்டிருக்கிறது அல்லது எதோ பெரிய ஆதாயத்திற்காக டிராமா போடுகிறது
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
17-ஜூலை-201312:00:10 IST Report Abuse
LAXமதுரைக்கே ரூ.1000/- தானா அதுவும் KPN -னிலா? பரவாயில்லையே..? இந்த ஞாயிறு கூட கூட்டம் அதிகம் என்பதால் திருச்சியிலிருந்து சென்னைக்கு (முறையான பர்மிட்டுகளில்லாத?) வேன்கள் மற்றும் பஸ்களிலேயே ரூ.700/- & அதற்க்கும் மேல்.....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
14-ஜூலை-201320:59:58 IST Report Abuse
Natarajan Iyer சென்னை விருகம்பாக்கம் காளி அம்மன் கோயில் தெரு நடேசன் நகரில் கூவத்தின்மேல் பாலம் அகலப்படுத்தப்பட்டது. ஆனால் பர்வீன் ட்ராவல்ஸ் என்ற நிறுவனம் எப்போதும் அவர்களது வண்டியை அங்கு நிறுத்தி போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சல் செய்கிறார்கள். எதிரிலேயே RTO அலுவலகம் இருந்தும் இந்தநிலை.
Rate this:
Share this comment
Cancel
sasikumar - Chennai,இந்தியா
14-ஜூலை-201320:42:14 IST Report Abuse
sasikumar கோயம்பேட்டில் 100 அடி சாலையில் "கல்லடா" வால்வோ ஆம்னி பேருந்துகளும் ஸ்ரீதேவி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஸ்ரீதேவி மருத்துவமனை அருகே " மேட்டுர் சூப்பர் சர்விஸ் " மற்றும் "சி பேர்ட்" ம் பாதி சாலையை ஆக்கிரமித்து கொள்கிறார்கள் ...ஆனால் யாரும் கண்டு கொள்வது இல்லை
Rate this:
Share this comment
Cancel
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
14-ஜூலை-201314:55:32 IST Report Abuse
Ravanan Ramachandran கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டிய இடத்தில கொடுத்தால் கிடைக்க வேண்டிய அனுமதி தானாக கிடைத்து விடும். இதுகூட தெரியாதா ஓம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூலை-201312:29:42 IST Report Abuse
g.s,rajan ஆம்னி பேருந்துகளின் நிலை இங்கே மட்டும் என்ன வாழுதாம் கட்டணங்கள் எல்லாம் கொள்ளையோ கொள்ளை .எல்லாம் அரசியல்வாதிகளின் ,பெரும் தொழில் அதிபர்களின் பினாமிகள் எப்படி மாநிலக் காவல்துறை ,போக்குவரத்துக் காவல்துறை ,வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை எடுக்கும் ?ஆம்னி பேருந்துகள் எல்லாம் கஷ்டப்பட்டு நேர்மையாக உழைத்து, சம்பாத்தித்து அந்தப்பணத்தில் வாங்கப் பட்டவைகளா என்ன ?குறுக்கு வழியில் சேர்த்த தவறு சுருட்டிய பணம் தானே ?இதில் எல்லா கட்சிக்காரர்களும் அடக்கம் .இதில் யாரும் தள்ளுபடி இல்லை .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201309:03:13 IST Report Abuse
Srinivasan Kannaiya மாமுல் கொடுத்து விட்டால் நாம் ஏன் கண்டுக்கணும் ... பணமேதான் கடவுள்.. சட்ட திட்டங்களில் உள்ள ஓட்டையை அவர் பார்த்து கொள்ளுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.