மனந்திருந்திய மது குற்றவாளிகளுக்குகறவை மாடு வழங்கல்| Dinamalar

தமிழ்நாடு

மனந்திருந்திய மது குற்றவாளிகளுக்குகறவை மாடு வழங்கல்

Added : ஜூலை 14, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மனந்திருந்திய மது குற்றவாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா நடந்தது.அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை சார்பில், நடந்த விழாவுக்கு, கலெக்டர் ரவிக்குமார் தலைமை வகித்தார். கலால் தாசில்தார் ராஜேந்திரன் வரவேற்றார். மனந்திருந்திய மது குற்றவாளிகள் 11 பேருக்கு, தலா 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கன்றுடன் கூடிய கறவை மாடுகளை வழங்கி, கலெக்டர் ரவிக்குமார் பேசினார். விழாவில், கால்நடை பராமறிப்புத்துறை இணை இயக்குநர் உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் பத்மநாபன், கால்நடை டாக்டர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை