Advertisement
ஸ்டேஷன் பணி பார்க்க போலீஸ் பற்றாக்குறைவழக்கு விசாரணை, இரவு ரோந்து பணி பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2013
02:13

பனமரத்துப்பட்டி: மல்லூர், பனமரத்துப்பட்டி ஸ்டேஷன் போலீஸார், வெளிப் பணிக்கு சென்றதால், ஸ்டேஷன் பணியில், குறைந்த அளவு போலீஸார் மட்டுமே உள்ளனர். அதனால், வழக்கு விசாரணை, வாகன சோதனை, இரவு ரோந்து பணி பாதிக்கப்பட்டுள்ளது.சேலம் ரூரல் சப்-டிவிசனுக்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், ஒரு எஸ்.ஐ., உள்ளிட்ட, 22 போலீஸார் உள்ளனர். இதில், 16 போலீஸார், ஸ்டேஷனில் பணி பார்க்காமல், வெளியிடத்தில் வேலை செய்கின்றனர்.
பெண் எஸ்.ஐ., ஒருவர் பி.சி.ஆர்., பிரிவிலும், எஸ்.எஸ்.ஐ., ஒருவர் மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., சி.ஐ.டி.யாகவும், ஒரு எஸ்.எஸ்.ஐ., மாவட்ட குற்றப்பிரிவிலும், எஸ்.பி., அலுவலகம், ஏ.எஸ்.பி., அலுவலகத்தில் தலா ஒருவர், செக்போஸ்ட் பணி, கொடநாடு, தர்மபுரி பாதுகாப்பு பணி, அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன் வீட்டுக்கு பாதுகாப்பு பணி என, மொத்தம், 16 போலீஸார் வெளிப் பணியில் உள்ளனர்.பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், ஒரு ரைட்டர், நீதிமன்ற பணியில் ஒருவர், ஒரு எஸ்.எஸ்.ஐ., என மூவர் மட்டுமே ஸ்டேஷன் பணியில் உள்ளனர். மூவர் மட்டுமே இரவு, பகல் என, தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். போலீஸ் பற்றாக்குறையால், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி, பிரச்னைக்கு தீர்வுகாண முடிவதில்லை.பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், மூன்று இரவு ரோந்து பீட் உள்ளன. போலீஸார் பற்றாக்குறையால், இரவு ரோந்து பணிகள் முடங்கியுள்ளது.அதேபோல், மல்லூர் போலீஸ் ஸ்டேஷனில், ஒரு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட, 24 போலீஸார் ஸ்டேஷன் கணக்கில் உள்ளனர்.ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., ரைட்டர் மற்றும் நான்கு எஸ்.எஸ்.ஐ.,க்கள் ஸ்டேஷன் பணியில் உள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட போலீஸார், செக்போஸ்ட், ஹைவே பேட்ரோல், எஸ்.பி., கேம்ப் ஆஃபீஸ், டி.எஸ்.பி., கேம்ப் ஆஃபீஸ், பாதுகாப்பு பணி என, வெளியிடத்தில் பணி பார்த்து வருகின்றனர்.மல்லூர் இன்ஸ்பெக்டருக்கு வழங்கப்பட்ட டாட்டா சுமோ காருக்கு டிரைவர் இல்லை. அதனால், இன்ஸ்பெக்டரே, டிரைவர் வேலை சேர்த்து பார்த்து வருகிறார்.போலீஸ் பற்றாக்குறையால், வாகன சோதனை, கிராம தணிக்கை, வழக்கு விசாரணை, பழைய குற்றவாளிகளை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் முடங்கி உள்ளது.இரவு ரோந்து பணிகள் நடப்பதில்லை. ஒரு சில போலீஸாரே, இரவு பகல் என தொடர்ந்து ஸ்டேஷன் பணி பார்ப்பதால், பணிச்சுமை காரணமாக, மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.