closed telegram service | இன்று இரவு நிறைவு பெறுகிறது தந்தி சேவை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இன்று இரவு நிறைவு பெறுகிறது தந்தி சேவை

Added : ஜூலை 14, 2013 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
closed telegram service

நூற்றி அறுபது ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்த தந்தி சேவை, இன்று இரவு, 12:00 மணியோடு நிறைவு பெறுகிறது. இந்தியாவில், மிகப் பழமையான சேவைகளில் ஒன்று, தந்தி சேவை. 1850ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான தந்தி சேவை, கிழக்கு இந்திய கம்பெனியின் பயன்பாட்டுக்கு மட்டும், முதலில் இருந்தது. பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு, 1853ல், தந்தி சேவை அறிமுகமானது. 1854ல், தந்தி சேவைக்கு தனித் துறை துவங்கப்பட்டது. 1855ல், "இந்திய தந்தி சட்டம்' உருவாக்கப்பட்டது. இணையதளம் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், தந்தியின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்தது. சில அரசுப் பணிகளுக்காக மட்டுமே, தந்தி சேவை புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில், "தந்தி சேவை, ஜூலை, 15ம் தேதியுடன் நிறுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது.

"மிகப் பழமையான மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற, தந்தி சேவையை நிறுத்தக் கூடாது. மக்களுக்கான சேவையில், லாப நஷ்ட கணக்கு பார்க்காமல், சேவையைத் தொடர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பல தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது. தமிழகத்தில், ஐகோர்ட்டிலும் வழக்கு பதியப்பட்டு, அது தள்ளுபடியானது. ஆனால், தந்தி சேவையைத் தொடர, மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், திட்டமிட்டபடி, ஜூலை, 15ம் தேதியுடன், தந்தி சேவை நிறைவு பெறுகிறது.

பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க, சென்னை மாவட்டச் செயலர், ஸ்ரீதர் சுப்ரமணியன் கூறுகையில், ""இன்று நள்ளிரவு, 12:00 மணியுடன், தந்தி சேவை, முற்றிலும் நிறுத்தப்படும். தந்தி சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், வேறு பணிகளுக்கு மாற்றப்படுகின்றனர்,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BARATHI . G - trichy,இந்தியா
14-ஜூலை-201317:37:55 IST Report Abuse
BARATHI . G பழசை மறக்ககூடதே .............. என்ன பண்றது டாட்டா தந்தி .........................,,,
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
14-ஜூலை-201315:10:31 IST Report Abuse
K.Balasubramanian 3கட்டும் 3கடவும் இந்த தொழில் நுப்ட்பதினை காப்பாற்ற முடியவில்லை
Rate this:
Share this comment
Cancel
Shankar M - chennai ,இந்தியா
14-ஜூலை-201314:49:26 IST Report Abuse
Shankar M Farewell to telegram is a farewell to our previous generation.
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
14-ஜூலை-201311:23:39 IST Report Abuse
S.Govindarajan. தந்தி நம்பகத்தன்மை உடையது. தந்தி கொடுத்தவர் யார்? முகவரி ஆகியவை படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும். புதிய தொழில் நுட்பத்தில் யாரும் யாரையும் ஏமாற்றலாம்.
Rate this:
Share this comment
Cancel
KUMUKKI - male,மாலத்தீவு
14-ஜூலை-201311:18:25 IST Report Abuse
KUMUKKI நன்றியுடன் விடையளிக்கின்ரோம்.மீண்டும் அருங்காட்சியத்தில் சந்திப்போம் .
Rate this:
Share this comment
Cancel
Abinow Prasanth - Trichy  ( Posted via: Dinamalar Windows App )
14-ஜூலை-201310:37:20 IST Report Abuse
Abinow Prasanth இது கண்டிப்பா இழப்பு தான் தொழில் நுட்பம் அப்பா அம்மா இல்லாத சூழ்நிலைய தான் உண்டாக்க போகுது
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
14-ஜூலை-201310:03:29 IST Report Abuse
Loganathan pager என்ற முறையில் தனியார் நிறுவனங்கள் செய்திகளை அனுப்பின.ஆனால் செல் போன்கள் சேவை வந்தவுடன் pager முறை கால தாமதமின்றி நிறுத்த பட்டது.ஆனால் அரசு மிகவும் கால தாமதமாக இதை நிறுத்தி இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
syed sardhar - chennai  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201308:56:33 IST Report Abuse
syed sardhar நானும் எனது கல்லூரி சமயங்களில் பலமுறை உபயோகத்தி்தது உண்டு
Rate this:
Share this comment
Cancel
jagathess - salem  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201308:53:51 IST Report Abuse
jagathess நன்றி
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூலை-201308:43:09 IST Report Abuse
g.s,rajan அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சியால் வீழ்ச்சி அடைந்தது தந்தித் துறை என்றால் அதுதான் நிதர்சனம் .எனினும் அதன் எண்ணில் அடங்கா சேவைக்கு நன்றி ,நாம் அனைவரும் கண்ணீர் மல்க விடைகொடுப்போம் .Good Bye ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை