வலிக்கு அஞ்சினால் கிடைக்காது வழி "தாய் மடி' நிகழ்ச்சியில் நம்பிக்கை| Dinamalar

தமிழ்நாடு

வலிக்கு அஞ்சினால் கிடைக்காது வழி "தாய் மடி' நிகழ்ச்சியில் நம்பிக்கை

Added : ஜூலை 14, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:"வலிகளை கண்டு அஞ்சினால், நமக்கு "வழி' கிடைக்காமல் போய்
விடும்' என, கோவையில் நடந்த நிகழ்ச்சியில், நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
கோவை ஆர்.எஸ்.புரம், பாரதிய வித்யா பவன் கலையரங்கில், "தாய்மடி'7வது நிகழ்ச்சி நடந்தது.
கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசுகையில், ""வாழ்க்கையில் படோபடாபம் இல்லாமல் வாழ்வது தான் சிறப்புக்குரியது. பிரச்னைகளை கண்டு வருந்தாமல், போராடி வெற்றி பெறுவது, வரலாற்றில் எழுதப்படுகிறது. அத்தகைய சிறப்பான வாழ்க்கைக்கு அனைவரும் போராட வேண்டும்,'' என்றார்.
"விழுவதல்ல... எழுவதே வாழ்க்கை...' என்ற தலைப்பில், புற்றுநோய் போராளியும், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின்
பேராசிரியையுமான உலகநாயகி பழனி பேசியதாவது:
முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைத்து விடும். முயலாமை, வெற்றியை சாத்தியப்படுத்தாது. "வலி'களை கண்டு அஞ்சினால், நமக்கு "வழி' கிடைக்காமல் போய்விடும். பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில், சிறப்பு என்ற ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கிறான். அதை கண்டுபிடித்து செயல்பட்டால், உங்களை நோக்கி வட்டமிட்டுக் கொண்டிருக்கும் சாதனை.
இவ்வாறு, உலகநாயகி பேசினார்.
கோவை சாஸ்த்ரா நாட்டியாலயத்தை சேர்ந்த அர்ச்சனா முரளி மற்றும் குழுவினரின், "அன்னையர்க்கு நாட்டிய ஆராதனை' என்ற தலைப்பில் நடந்த நாட்டிய நிகழ்ச்சி, பார்வையாளர்களை பரவசப்
படுத்தியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை